செய்தித் துறையில் உள்ள பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் – செய்தித்துறை இயக்குனர்.

சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த ஆட்சியில் இருந்து செய்தித் துறை இயக்குனர்களை சந்தித்து, சமூக நன்மைக்காக போராடும் ,பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை மக்கள் அதிகாரம் பத்திரிகை முன்னெடுத்து வந்துள்ளது.. இதில் முன்னாள் இயக்குனர் ஜெயசீலன், இது பற்றி சில கருத்துக்களை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் அவரால் எடுக்க முடியவில்லை.

 அதற்கு காரணம், இந்த செய்தி துறை மற்றும் பத்திரிகைகளின் தரம் ,தகுதி இதைப் பற்றி எதுவும் ஆய்வு செய்து, அந்த சப்ஜெக்டை அவர் எடுத்துக் கொள்ளவில்லை .ஆனால், நான் செய்தித்துறை இயக்குனர் மோகன்  அவர்களை சந்தித்து முதன் முதலில் இப்ப பிரச்சனையை சொன்ன போது, அவர் நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். எனக்கு இந்த சப்ஜெக்ட் பற்றி தெரிந்து கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். நானும் சரி என்றேன்.

 மேலும், அவருக்கு இது பற்றிய எல்லா தகவல்களும், மக்கள் அதிகாரம் இணையதளத்தில் உள்ளது. தாங்கள் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றேன். தவிர, நேற்று கூட இயக்குனரை சந்தித்து இது பற்றி கேட்டபோது, நிச்சயம் செய்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளார் .எனக்கு அந்த நம்பிக்கையும் ,இவர் மீது வந்துள்ளது.

 ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்து விழுப்புரத்தில் பணியாற்றி, தற்போது செய்தி துறை இயக்குனராக இருக்கின்ற நிலையில், அவருடைய அணுகுமுறை ,பேச்சு எல்லாமே ஒரு பொது நலத்துடன் இருக்கிறது. நான் பார்த்த இயக்குனர்களில், முன்னாள் பாஸ்கர பாண்டியன் அவர்களும், இதே கருத்தை தான் அவர் தெரிவித்தார் .அவரும் முயற்சி மேற்கொண்டார். அது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி ,தோல்வியில் முடிந்தது.

 மேலும், நான் இது பற்றி மத்திய அரசு இயக்குனர் சிலரிடம் கூட பேசி இருக்கிறேன். அவர்களும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இது அரசியல் பிரச்சினையாக நிற்கிறது. பத்திரிகை என்பது மக்களின் பொது பிரச்சனை. இது அரசியல் பிரச்சனை அல்ல. இதை தான் உச்சநீதிமன்றமும் இதே கருத்தை தான் வலியுறுத்துகிறது.

 ஆனால், நூற்றுக்கு 90% பி ஆர் ஓ க்கள் பத்திரிகை பற்றி தெரியாமல் சுயநலத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களும் இயக்குனர் எடுக்கின்ற நடவடிக்கை பொருத்து எல்லோரும் மாறிவிடுவார்கள் என்பது எங்களுக்கு தெரிந்த உண்மைதான். அதனால், செய்தித்துறை மக்களின் பொது நலனில் அக்கறை எடுத்து செயல்படும்போது, மக்களின் வரிப்பணம் கோடி கணக்கில் வீணடிக்கப்படுவதை தடுக்கலாம் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *