
நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை.
கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்?

பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. ஏனென்றால், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் அவரிடம் இருந்தது. நீங்கள் சொல்லும் விஷயங்கள் அதில் நியாயம் இருக்கிறது என்று அவருக்குப் பட்டது.

ஆனால் இன்று வரை திமுக ஆட்சியில் செய்து துறையில் இயக்குனர்களாக இருந்த ஜெயசீலன் ,அதன் பிறகு வைத்தியநாதன் யாருமே எதுவும் அது பற்றி காதில் வாங்குவதாக தெரியவில்லை. ஆனால் ,இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதிலை கொடுத்து விட்டார்கள் என்றால் ,நான் இந்த பத்திரிகை துறையில் இருந்து கூட விலக தயாராக இருக்கிறேன்.
மேலும் தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறது? தேவையற்றதற்கெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் .தேவையற்றதுக்கெல்லாம் விவாதம் மேடையில் பங்கேற்கிறார்கள் .ஆனால், ஒரு முக்கியமான துறையின் அவலத்தைப் பற்றி , சமூக ஊடகத்தில் தமிழா தமிழா பாண்டியன் தவிர ,எந்த ஒரு அரசியல் கட்சியினாரோ ,இதுவரை பேசவில்லை என்பதுதான் சமூக நலன் பத்திரிகையாளர்களின் மிகப்பெரிய வருத்தம். மேலும், செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன்

இந்த கேள்விகள் எல்லாம் இவர் சரியாகப் புரிந்து ,அதற்கு சரியான பதிலை கொடுத்தால் ,வருங்கால (ஜெனரேஷன் ) அதாவது ,இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தே ஆக வேண்டும். அதில் எந்தெந்த பத்திரிக்கைக்கு கொடுக்கலாம் ?அதன் தகுதி, தரம் என்ன? எதைப் பற்றியும் தெரியாமல், சர்குலேஷன் !சர்குலேஷன்! வாட் இஸ் யுவர் சர்குலேஷன் what is your circulation? only money for the circulation. But content, news & articles ,social benefits, is very important in the journalism.
அதனால், செய்தித்துறை! (Central and state) பத்திரிகை துறையில் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமானது.
மேலும் . என்னை போல் பல பத்திரிகைகள், இந்த போராட்டத்தில் என் உடன் சேர்ந்தால் ,இதற்கு ஒரு பலமான எதிர்ப்பு அரசாங்கத்திற்கு நாம் தெரிவிக்க வேண்டிய காலம் இது. தேர்தல் நெருங்குகிறது.அது மட்டுமல்ல,

இந்த செய்தியை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கடிதத்தை இணைத்து, பிஜேபி மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் அதை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பியுள்ளார்.மேலும்,
அரசாங்கத்தினுடைய பயன்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு கிடைக்க மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் வழக்கறிஞர் நோட்டீஸும் போய் சேர்ந்து இருக்கிறது. அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை. இப்போது இந்த ஆர்,டி ,ஐ தகவல்கள், இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரால் இதற்கு சரியான பதில் தர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி?
மேலும், செய்தித் துறையில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர ,வேறு வழி இல்லை. அதற்கு என்னுடன் ஒத்த கருத்துடைய பத்திரிக்கை நடத்தக்கூடிய பத்திரிகையாளர்கள் கூட வரலாம். இந்தப் போராட்டத்தால்,

நமக்கு ஞாயம் கிடைக்கிறதோ, இல்லையோ, அடுத்த தலைமுறைகள் இந்த பத்திரிகை துறையை மக்கள் நலனுக்காக போராட வரக்கூடிய பலருக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனவே, அரசியல் என்பது சுயநலமாகிவிட்டது. கார்ப்பரேட் பத்திரிக்கை அவர்களின் ஊது குழலாக, சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அதனால்தான் இந்த பத்திரிகைகளுக்கு கிடைக்கக்கூடிய சலுகை, விளம்பரங்கள் தடுக்கப்படுகிறது.மேலும்,
சமூக நலனை விட பத்திரிக்கை துறையில், வியாபார நலனும் ,,அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளும், முக்கியத்துவம் பெறுகிறது என்றால், ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய பத்திரிகைகளுக்கும், மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும், அதை ஏன் கொடுக்கவில்லை? என்பதுதான் எங்களுடைய கோரிக்கையின் முக்கிய சாராம்சம் .இதற்கு செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதன் என்ன பதில் தரப் போகிறார் ? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
சமூக நலன் பத்திரிகைகளுக்கு செய்ய முடியாத திமுக அரசு! மக்களுக்கு எங்கே செய்யப் போகிறது?