நாட்டில் செல்போன் உபயோகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்துகளும், நிறைந்துள்ளதை மக்கள் புரிந்து கொள்வார்களா? – இணைய வழி மோசடி மூலம் 11 ஆயிரம் கோடி மீட்பு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் இணையதளம் மற்றும் செல்போன் உபயோகத்தால் ,பல நன்மைகள் இருப்பது போல், ஆபத்துகளும், தீமைகளும், அதில் நிறைந்துள்ளது.

மேலும்,அதில் கை சேர்ந்த இணையவழி மோசடி பேர்வழிகளிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார், இதுவரை 11 ஆயிரம் கோடிகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளது என தகவல்.

தவிர,அப்படி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3718 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கென்று குடிமக்கள் நிதி சார் இணைய வழி மோசடி புகார் என்ற ஒரு இணைய தளத்தை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. (CFCFRMS) இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அது மட்டுமல்ல,இதில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள் என்ற பேதம் இல்லாமல், நூதன மோசடி மற்றும் விஞ்ஞான மோசடி வழியில், இந்த இணையதள குற்றவாளிகள் இருந்து வந்துள்ளனர். அவர்களிடமிருந்து 11 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த பெருமை. இவ்வளவு பெரிய தொகை மீட்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.

எனவே ,பொதுமக்கள் இணையதள மோசடி பேர்வழிகளிடம் இருந்து, தங்களை காப்பாற்றிக் கொண்டு, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *