(ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்களை மரியாதை நிமித்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியர்/ வெளியிட்டார் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.)
ஒரு தலைமை நீதிபதியாக இருந்தவர் ,ஒரு சாதாரண அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார் என்று பார்க்கும் போது நீதித்துறைக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். இப்படி நீதி அரசர்கள் நாட்டில் பணியாற்றினால், அரசாங்கத்தில் நடக்கின்ற அவலங்களையும் சமூகத்தில் நடக்கின்ற அவலங்களையும், சமூக ஆர்வலர்கள் ,சமூக பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் வலி நிவாரண மருந்தாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும், நாட்டு மக்கள் நீதிக்காக போராடும் போது, ஒவ்வொருவரும் அந்த வலியும் ,வேதனையும் நீதி கிடைத்த பின்பு அது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. அதனால், நீதிமன்றம் சாமானிய மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
அதற்கு இருக்கின்ற வலிமை ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் அடி பணிய கூடாது. இது சாமானிய மக்களின் சாமானிய மக்களின் குரலாகவும், இந்த தேசத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் குரலாகவும், இதில் பதிவு செய்கிறேன்.