
தமிழக அரசு தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணமே அதிகம் என்று மக்கள் புலம்பல்.
இந்த லட்சணத்தில் மின்கண்டனத்தை ஜூலை 1 முதல் தமிழகத்தில் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 1500 ரூபாய் அதிமுக ஆட்சியில் கட்டியிருந்தோம்.இப்போது ரூபாய் 4000 கட்டுகிறோம் என்கிறார்கள்.
மேலும்,இப்போது தமிழக அரசு மின் கட்டணத்தை 3.16 % உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏழை,,நடுத்தர மக்கள் நிச்சயம் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும் தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களிின் விலை உயர்வு அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்களின் அதாவது பால், எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறிகள்,விலை உயர்வு அதிகரிக்கும். தவிர, ஓட்டல் உணவகங்கள் விலையும் அதிகரிக்கும்.

இதற்கு தமிழக அரசு பல காரணங்கள் சொன்னாலும், மக்களுக்கு மின்சுமை என்பது அதிகம் தான். அதனால், மக்கள் தலையில் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, இது தவிர விலைவாசி உயர்வு, இப்படி மக்கள் தலையில் திமுக அரசு உயர்ந்திருப்பது, மக்களின் வேதனையை எங்கே சொல்லி? யாரிடம் சொல்லி? தீர்க்கப் போகிறார்கள்?

இனிமேல் உழைப்பவன் தலையில் வரி உயர்வா? உழைக்காமல் அரசியலில்…… என்ன உயர்வு? சொத்து உயர்வா? மக்களின் வேதனை கேள்விகள்?