தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்ற ஆலோசனை செய்வது , நிதி நெருக்கடியா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் ,ஓய்வூதிய பலனை உடனடியாக கொடுக்க முடியாமல் ,நிதி நெருக்கடியில் திணறி வருகிறது.

இதை சமாளிக்க இரண்டு ஆண்டு ஓய்வு பெரும் வயதை உயர்த்தினால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல்.

மேலும்,இது இதற்கு நிரந்தர தீர்வு அல்ல, இதனால், அரசு ஊழியர்களின் செயல் திறன் வேகம் குறைந்து விடும். 60 வயதுக்கு மேல் ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே 55 ஆக இருந்தது ,பிறகு 58 ஆக மாறியது ,இப்போது 60 ஆக மாறி இருக்கிறது. இப்படி ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் ,தமிழகம் நிதி நெருக்கடியில் இருந்து மாறிவிடுமா ?

இதற்கு அடுத்தது, இன்று 50 வயது தாண்டினாலே, நூற்றுக்கு 75% சுகர் ,பிபி, கொலஸ்ட்ரால், உள்ளவர்கள் தான் அதிகம். பெரும்பாலான அதிகாரிகள் 58 போதும் என்று தான் நினைக்கிறார்கள். எப்படியோ 60 ஆக்கிவிட்டார்கள் .பெரும்பாலான 60 வயதை நெருங்கக் கூடிய அதிகாரிகள் போதும் சார், எங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. அப்படிதான் தெரிவிக்கிறார்கள். இது தவிர,

வயது கூடும் போது அனுபவம் இருக்கலாம் .திறமைகள் இருக்கலாம். ஆனால் ,அவர்களால் வேகமாக வேலை செய்வது சாத்தியம் இல்லை. நான் பார்த்தவரை ,உயர் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் பெரும்பாலும் ,மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். டென்ஷன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.

ஆக கூடி உடல் ஒத்துழைப்பு என்பது எல்லோருக்கும் அது ஒரு போராட்டமாக இருந்து வருகிறது. இது தவிர, இவர்களுக்கான சம்பளம் அதிகமாகிறது. அடுத்தது இளைஞர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு குறைந்து விடுகிறது. மேலும் ப்ரோமோஷன் எதிர்பார்ப்பவர்களுக்கு அதுவும் கிடைக்காமல் காலதாமதம் ஆகும், நிலைக்கு தள்ளப்படுகிறது.

அதனால், 62 வயது என்பது தற்போதுள்ள கால சூழ்நிலை! அது ஒரு புறம் போராட்டமாக அமைந்துள்ளது. அதிக வெயில் ,அதிக மழை , அதிக குளிர், மேலும், போக்குவரத்து டிராபிக் ஜாம், கூட்ட நெரிசல், இதில் எல்லாம் வயதானவர்கள் பயணம் செய்யும்போது அது மிகவும் மேலும் அவர்களை துன்பப்படுத்த வைக்கும் நிலைக்கு இருந்து வருகிறது .

எனவே,இந்த கால சூழ்நிலைகளை வயதான நிலையில் எதிர்கொள்ளும்போது, அரசின் நிர்வாகம் விரைவு படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *