
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 இல் ரயில் மறியல் போராட்டத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்கு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.