தமிழக மக்கள் எதற்கு மதிப்பளித்தால் அமைச்சர்கள் கல் எறிய மாட்டார்கள் ?அது பணமா? அல்லது தகுதியா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அமைச்சர் நாசர் பொதுவெளியில் கல் எடுத்து, கட்சிக்காரர் மீது அடிக்கிறார். இதை படம் பிடித்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் அவருடைய செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் பல வந்துள்ளன .ஆனால், இது பற்றி மக்களும், அதிகாரிகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள்? அமைச்சர் நாசர் செய்தது தவறு.

 இதுவே ஜெயலலிதாவாக இருந்தால், அவருடைய கார் அங்கிருந்து அப்படியே போயஸ் கார்டனுக்கு போய் இருக்கும். அடுத்த நிமிடமே இவருடைய பதவியை தூக்கி இருப்பார். ஆனால், இங்கே இவரை Warn பண்ணி விட்டதாக தகவல். இது ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர் ,அதனுடைய கவுரவம் என்ன? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டது தான், பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. அந்த அளவிற்கு அதற்கான மரியாதையும், தகுதியும் உள்ளவராக இல்லை என்பதுதான் அவருடைய செயல்பாடு, மக்களிடம் பேசப்பட்டது.மேலும்,

பத்திரிகையில் பணியாற்ற, பத்திரிகை நடத்த இது எல்லாவற்றிற்கும் ஒரு தகுதி வேண்டும் . தவிர, இவரே எத்தனையோ முறை செய்தியாளர்களை கேவலமாக பேசியிருக்கிறார் என்ற  தகவலும் வந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் செய்தி சேகரிக்க வந்தவர்கள் .அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக திறமைசாலிகளாக, இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிலர் தகுதியற்றவர்களாக கூட இருக்கலாம், ஆனால், அவர்கள் மனம் புண்படும்படி திமிரான வார்த்தைகளால், பேசியதை மனம் நொந்து வேதனைப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது இவர் அமைச்சருக்கு உள்ள தகுதியாக நடந்து கொண்டார? என்பது தான் தமிழக மக்கள் பேசுகின்ற ஒரு கேவலமான பேச்சு. மேலும், அரசியலில் நம் தமிழக மக்கள் இவர்களுக்கு என்ன தகுதி என்பதை இன்னும்  கேட்கவில்லை? ஆனால், பணத்தை மட்டும் தான் கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் போது, அங்கே அவர்களின் தகுதியைக் கேட்பதில்லை. அதற்கு மக்கள் மதிப்பளித்து தேர்தலில் வாக்களித்தால், இப்படிப்பட்ட அமைச்சர்கள் ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். இப்போது நம் தமிழக மக்கள் எதற்கு மதிப்பளிக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *