
திமுக ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இருப்பினும், மக்கள் அதற்கான ஆதாரத்தை எடுக்க முடியாது. அதை எடுத்து பேசவும் முடியாது. மேலும், பேசுபவர்கள் அதற்கு தகுதியான வழக்கறிஞர்கள், தகுதியான பத்திரிகையாளர்கள், தகுதியான அரசியல்வாதிகள், இவர்கள்தான் பேசுவார்கள்.

இப்படிப்பட்ட ஒரு அரசியலை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. ஆனால், விஜய் தற்போது திமுக அமைச்சர்களான ஏ.வா .வேலு ,செந்தில் பாலாஜி, இந்த இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்போதே, தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவைக்குள் கலகத்தை ஏற்படுத்தி, தற்போது ஆதார் அர்ஜுனாவுக்கும், புசி ஆனந்துக்கும், இடையே அதிகார மோதல். வெடித்துள்ளதாக முன்னாள் திமுக அமைச்சர் பரந்தாமன் தெரிவித்துள்ளார் என தகவல்.

மேலும்,இப்படிப்பட்ட ஒரு கிரிமினல் கூட்டத்தை சமாளிப்பது சாதாரண வேலை அல்ல. அது மட்டுமல்ல, ஏ.வா. வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தர விட்ட உடன் ,சிங்கப்பூர் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார்.

அப்படி என்றால், ஊழலை மறைக்க சட்டத்தின் மூலம், அதை ஏமாற்ற எந்த நிலைக்கும் போவார்கள். இது தவிர ,செந்தில் பாலாஜி தம்பி அசோக் ஜாமீன் கேட்டு ,நீதிமன்றத்தில் மனு செய்து உள்ளாராம். மேலும்,செந்தில் பாலாஜி தலைமறைவு என்கிறார்கள். தவிர,

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் போர்வையில், கிரிமினர்கள் இருக்கும் வரை ,இவர்களுக்கான சட்டம் இதுவல்ல. இந்த சட்டம் மனசாட்சி உள்ள ,நேர்மையாக வாழ்கின்ற அரசியல்வாதிகளுக்கு தான், இது பொருந்தும் .இது இவர்களைப் போன்ற கிரிமினல்ஸ்களுக்கு எல்லாம் இந்த சட்டம் பொருந்தாது.

இது பலமுறை மத்திய, மாநில அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், யாரையும் கேட்கக் கூடாது .இவர்கள் பதவிக்கு வரும்போது ,எவ்வளவு சொத்து இருந்தது? பதவிக்கு வந்து ஐந்தாண்டுகளுக்கு பிறகு ,எவ்வளவு சொத்து இருக்கிறது?

அதிகமாக இருந்தால், அவை அத்தனையும் கொண்டு போய் ,அரசு கஜானாவில் சேர்த்து விடுங்கள் .அதற்கு சரியான ஆதாரம் இருந்தால், கொடுத்து விட்டு, திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.

தவிர, இவர்களுக்கு யாருக்குமே பென்ஷன் இருக்கக் கூடாது. 30 ஆண்டுகளாக வேலை செய்யக்கூடிய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை .ஆனால், ஐந்து வருடத்தில் இவர்களுக்கு அரசியலில் பென்ஷன் தேவையா? அதற்கு தகுதியான அரசியல்வாதிகள் இவர்கள் இல்லை.

மேலும்,இவர்களுடைய பதவியை பிடுங்கி, கண் தொடைப்புக்கு ஜெயிலில் உட்கார வைப்பது, வருஷக் கணத்தில் வழக்கு நடத்துவது, காவல்துறையின் நேரத்தையும், நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கும் வேலை. அது எல்லாம் வீணானது முதலில் சொத்தை பிடுங்குங்கள்.

அதன் பிறகு தான் நடவடிக்கை, சட்டம் இப்படி கொண்டு வர வேண்டும். மேலும், இது மக்கள் பணம் ,மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. உடனடியாக எடுத்து விடுங்கள். இதுதான் ஒரே வழி. மேலும்,
ஓட்டை சட்டத்தின் மூலம் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுவார்கள். நீதிமன்றம் பல ஆண்டுகளாக வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் அதற்குள் எந்த ஆட்சி இதைக் கொண்டு வந்ததோ ,அதற்குள் அந்த ஆட்சியை முடிந்துவிடும். மேலும்,

அந்த வழக்கு நீதிமன்றத்தில் நீர்த்து போய்விடும். தொடர்ந்தாய் 50 ஆண்டு காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, சட்டத்தை கடுமையாக்காத வரை நாட்டில் ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
