தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.

 ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் இடம் தங்கள் கிராமத்தில் நடந்த ஏரிகளின் ஏலம் பற்றி ஊழல்களை புகாராக அளித்தனர்.

அந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கவர்னர் மற்றும் துறை சம்பந்தமான செயலாளர்கள் ,இப்ப புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பப்பட்ட உயர் அதிகாரிகள், மாநில கவர்னர் உள்பட அனைத்துக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட வேண்டிய காரணம் என்ன? என்பதுதான் விடையூர் கிராம பொது மக்களின் முக்கிய கேள்வி? மேலும்,

 ஒருவேளை இவருக்கு கணிசமான தொகை கொடுத்து இருப்பார்களா? என்ற சந்தேகமும் கிராம மக்களிடையே எழுந்துள்ளது .காரணம், இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டும் ,பொது மக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் ,எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது மாவட்ட ஆட்சியரின் மீதான அதிருப்தியை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் கிராம பஞ்சாயத்துகளுக்கு, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி இவர் ஒரு இன்ஸ்பெக்டர் ஆஃப் பஞ்சாயத்து அதிகாரி, இப்படிப்பட்ட பொறுப்பு மிக்க அதிகாரம் இவருக்கு கொடுக்கப் பட்டுள்ளது வீண். ஏனென்றால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. பத்திரிக்கையில் வெளியிட்ட செய்திகளுக்கும் மதிப்பளிக்கவில்லை .அப்படி என்றால், இவருக்கு எதற்கு இன்ஸ்பெக்டர் ஆப் பஞ்சாயத்து பதவி என்பது தான் கிராம மக்களின் முக்கிய கேள்வி?

மேலும், நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக கிராம மக்களுக்கு ஏலம் விடுவது குறித்து தண்டரா மூலமோ  அல்லது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தோ கிராம மக்களின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிவித்து ரகசியமாக ஏலம் விட்டதன் அர்த்தம் என்ன? இந்த ஏலத்தை ரூபாய் 50 ஆயிரத்து 300 க்கு ஏலம் எடுத்தவர் கணேசன்.

மேலும்,இதே ஏலம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூபாய் 55 லட்சத்திற்கு குறிப்பிட்ட சிலரே கலந்து கொண்டு  ஏலம் விடுவதின் ரகசியம் என்ன ? இது கிராமத்தின் பொது சொத்தா?  இல்லை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமான சொத்தா ? என்பதை ஏன் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் கிராம மக்களின் முக்கிய கேள்வி?  

 மேலும், இதே புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டபோது, அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கருவேல மரம் வெட்டுவதை ஒன்றரை மாதங்களாக நிறுத்தி வைத்து, நடவடிக்கை எடுத்துள்ளார். இது எவ்வளவு கேவலம், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு இன்ஸ்பெக்டர் ஆப் பஞ்சாயத்து என்ற பொறுப்பும் கொடுத்து, அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், ஒரு சாதாரண லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி ,லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்ட புகாரின் மீது தைரியமாக, வெளிப்படையாக, நடவடிக்கை எடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மீதும், ஏரி மரங்களை ஏலம் எடுத்த கணேசன் மீதும், நீர்வளத் துறை அதிகாரி ரமேஷ் மீதும், வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இதனுடைய உண்மையான மதிப்பீட்டை சுமார் ஒரு ஏக்கர் 5 லிருந்து 7 லட்சம் வரை மதிப்பிட்டு இருக்கிறார்.உண்மையும் அதுதான் .

இது பற்றி மார்க்கெட் மதிப்பு எவ்வளவு? என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம். அல்லது நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம்? அல்லது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பீன் ஜான் வர்கிசும் தெரிந்து கொள்ளலாம். எதுவும் தெரியாமல் அரசாங்கத்தின் சம்பளம் வாங்கி பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள், இவரைப் போன்ற பல அதிகாரிகள் .மேலும், இப் பிரச்சனை குறித்து கிராம மக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், ஒரு நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழ் அரசிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஏனென்றால், ஒரு மாவட்ட ஆட்சியர் ஐஏஎஸ் படித்து இன்ஸ்பெக்டர் ஆப் பஞ்சாயத்து  என்ற பொறுப்பு மிக்க பதவியில் இருந்தும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்து விட்டார் .இப்படி இருப்பவர் எப்படி இவர் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்?

 மேலும், ஒரு குருடன் கூட இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பான். காரணம் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில், உள்ள வேலிக்கத்தான் மரங்களை ஒரு ஏக்கர் 160 ரூபாய்க்கு மதிப்பீடு செய்து ,ஏலம் விட்ட நீர்வளத்துறை அதிகாரி ரமேஷ்க்கு நீர்வளத்துறை தான் பாராட்டி பரிசு வழங்க வேண்டும் என கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த கருவேல மர ஏலத்தின் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அது கிராம அளவில் மிகப்பெரிய தொகையாகும். மேலும், இந்த செய்தியை பத்திரிகைகளில் வராமல் பார்த்துக் கொள்ளும் நீர் வளதுறை அதிகாரிகளின் திறமையா ?அல்லது ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? தவிர,

இதைப் பற்றி விடையூர் கிராம மக்களும்,  காலணியும் குறிப்பிட்ட சிலரே பொது சொத்துக்களை பங்கு போட்டு எடுத்துக் கொள்வதற்கு இவர்களுக்கு யார் அந்த உரிமையை வழங்கியது? மேலும், அந்த உரிமையை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கிராம மக்களின் முக்கிய கோரிக்கை. இது தவிர,

இரு ஏரிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு ஏக்கர் ஐந்து லட்சம் போட்டால் கூட, 15 கோடி வருகிறது. இது தற்கால மார்க்கெட் மதிப்பு .இதைக் கூட தெரியாமல் நீர்வளத்துறை அதிகாரிரமேஷ் எப்படி இவர் ஒரு அதிகாரியாக பணியாற்றி வந்தார் என்பது கேள்வி?

 மேலும் மாவட்ட ஆட்சியர் இது பற்றி துளி கூட, சமூக நலன் அக்கறையில்லாமல், இவருடைய பொறுப்பை  தட்டி கழித்து,  சமூக ஆர்வலர்களுக்கும், கிராமத்தின் சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்ளும் பேர்வழிகளுக்கும் இடையே ஏன் மோதல் உருவாகிறது?  இது போன்ற ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளால் தான், பல கிராமங்களில் மோதல்கள் ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

 இந்த வேலையை பார்ப்பதற்கு ஐ ஏ எஸ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை சாதாரண கிளர்கே பார்த்துக் கொள்வார். மேலும், அரசாங்க சலுகைகள் மற்றும் ஊதியம் இது போன்ற அதிகாரிகளால் வீணடிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் ,மறுபக்கம் திமுக ஆட்சியின் நிர்வாகம் ஏற்கனவே படுமோசமான நிலையில் இருப்பதால் ,இது போன்ற மாவட்ட ஆட்சியர்களால் இன்னும் மக்களிடத்தில் திமுகவின் செல்வாக்கு அடியோடு அழித்து விடுவார்கள் என்பது உறுதி. இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை உடனடியாக திமுக அரசு களை எடுத்தால், ஆட்சிக்கு இருக்கின்ற கொஞ்ச நெஞ்சம் நல்ல பேராவது மிஞ்சும் என்பதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *