தமிழக சட்டமன்றத்தில் திமுக தன்னுடைய ஆட்சி நிர்வாகத்தை, மக்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும்? என்பதற்கு பதிலாக இவர்களுடைய கருத்துக்களையும், கொள்கைகளையும், பேசுவதற்கு தான் சட்டமன்றம் என்று நினைத்து விட்டார்களா? என்பது தான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? மேலும்
ஆட்சி அதிகாரம் உங்களிடம் தான் இருக்கிறது என்பது கூட தெரியாமல், மல்லார்ந்து படுத்துக்கொண்டு துப்பினால், அது தங்கள் மேல் வருமா ?அல்லது கவர்னர் மேல் வருமா? என்பது கூட தெரியாமல் பேச்சும் ,செயல்பாடும் இருந்து வருகிறது. மேலும், சட்டமன்றத்திற்கு கவர்னர் என்பவர் கௌரவ பிரதிநிதி .
அவருடைய வருகைக்கும், அவருடைய பேச்சுக்கும், மரியாதை அளிப்பது தான் சட்டமன்றத்தின் விதிமுறை. அதை ஒருபோதும் ஆளுநர் மதித்து அவருடைய விதிமுறை, அவருடைய மரபு என்னவோ ,அதை பின்பற்றி பேசியிருக்கிறார். மேலும்,இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்ட செய்திகளில் கூட ,அவர் சட்டம், அரசியல் எல்லாவற்றையும் நன்கு தெரிந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறேன் .
அவர் இந்தியும் ,ஆங்கிலமும் தெரிந்திருந்தாலும், தமிழில் ஒரு ஐந்து நிமிடம் பேசி உரையாற்றி இருக்கிறார் என்பது மிகவும் பாராட்டி வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், சட்டமன்றம் என்பது மக்களுக்கு அல்லது மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன திட்டம் கொண்டு வரப் போகிறீர்கள்? என்ன திட்டம் கொண்டு வந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ?அதற்கான நிதி ஆதாரம் எப்படி ? எதன் மூலம் கொண்டு வந்துள்ளோம் ?போன்ற பல்வேறு முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய கூட்டத்தில் விவாதிப்பதற்கும், மக்களிடம் அதை தெரிவிப்பதற்கும் தான் இந்த சட்டமன்ற கூட்டம்.
இதில் இவர்கள் தயாரித்த உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்ற விதிமுறை, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பிரச்சனைகள், கருத்துக்கள் வேண்டுமானால், ஆளுநர் அதை அப்படியே படிக்க வேண்டும். ஆனால் இவர்களுடைய கட்சி கொள்கையும், இவர்களுடைய கருத்துக்களையும் பேச வேண்டும் என்பது ஆளுநருக்கு விதிக்கப்பட்ட விதிமுறை அல்ல.மேலும்,
தமிழக மக்களுக்கு என்ன பேச வேண்டுமோ, என்ன கருத்துக்களை சொல்ல வேண்டுமோ ,என்ன உண்மைகளை சொல்ல வேண்டுமோ, அந்த விதிமுறை ஆளுநருக்கு இருக்கிறது. சட்டமன்றம் அரசியல் மன்றம் அல்ல, அல்லது அரசியல் கட்சி மேடையும் அல்ல, அரசியல் கட்சி மேடையில் தான் எல்லோருக்கும் புகழ் பாடி கொண்டிருப்பார்கள். இங்கே புகழ் பாடுவது தவறான ஒன்று. அதுவும் சட்டமன்றத்தில் கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து நடந்து வருகின்ற ஒரு செயல்.
அதையே சில தொலைக்காட்சிகளில் கூட விவாதம் செய்கிறார்கள் ஜெயலலிதா இருந்தால், மத்திய அரசின் கவர்னருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இது ஊடகங்களின் தவறான கருத்து. ஏனென்றால், இதுவரையில் தமிழ்நாட்டில் வந்த ஆளுநர்கள் யாரும் இவ்வளவு விவரம் தெரிந்த ஆளுநர்கள் இல்லை. அவர்களுக்கு சட்ட நுணுக்கமும், அரசியல் வரலாறும் தெரியாது, தெரிந்தவர்கள் வரவில்லை.
தெரியாதவர்கள் வந்தார்கள், இவர்கள் அனுப்புகின்ற அத்தனை கோப்புகளிலும் கையெழுத்து போட்டுக் கொண்டு, கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருந்தார்கள். இங்கே அதற்கு வழி இல்லை. இவர் ஒரு உளவுத்துறை இயக்குனராக இருந்து வெளியில் வந்தவர் .அப்போதே இவர் மிகவும் கடுமையாக இருப்பாராம். இவரைப் பற்றி விசாரித்த போது, இந்த தகவல் கிடைத்தது. இப்படிப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி கவர்னராக வந்திருப்பதை தமிழகம் பெருமையாக நினைக்கிறது.
இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல்,இளைய தலைமுறைகளும், படித்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக போராட்டம் நடத்துவது கேவலமானது. அப்படி நடத்தினால் நீங்கள் படித்த படிப்பிற்கு அது ஒரு கேவலம். அதைவிட விவசாயமே செய்யலாம். ஏனென்றால் விவசாயம் செய்யக்கூடிய மக்கள் கூட, உண்மையை சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
ஆனால், கைக்கூலிகளாக மாறி கோஷம் போடும் கூட்டத்திற்கு உண்மை சொன்னால் கூட தெரியுமா?என்பது தெரியவில்லை. மேலும், சட்டமன்றம் என்பது மக்களுக்கானது. இவர்களுடைய சுயநலத்திற்கு ஆளுநர் அடிபணிய வேண்டும் என்றால், அது திமுக அரசின் தவறான கொள்கை முடிவு. உங்களுக்கு என்ன அதிகாரம் மக்கள் கொடுத்து இருக்கிறார்களோ, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களுக்கு முடிந்த அளவு நன்மையை செய்யுங்கள்.
அதை விடுத்து கவர்னருடன் அரசியல் செய்வதை அல்லது அவரை அவமானப்படுத்தி அரசியல் செய்வது ,இவையெல்லாம் உங்களுக்கு தான் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டால் சரி.
குறிப்பு:
ஆளுநர் என்பவர் இவர்களுடன் அரசியல் செய்யவும், இவர்களுடைய கொள்கைகளை சட்டமன்றத்தில் பேசவும், அல்லது ஆட்சியாளர்களின் புகழை பாடவும் ,அதற்காக நியமிக்கப்பட்டவர் அல்ல. மேலும் மக்களின் பிரச்சனைக்கு, மக்களின் கருத்துக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு போன்ற முக்கியமான செயல்பாட்டுக்கு தான் ஆளுநர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், இதுவரையில் எந்த ஆளுநருக்கும், இது போன்ற அவமரியாதை சட்டமன்றத்தில் ஏற்பட்டதில்லை.
அந்த அளவிற்கு இவர்களுடைய தரம், சட்டமன்றத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். ஆளுநர் நினைத்தால், நிச்சயம் ஆர்.டி.க்கல் 356 சட்ட விதிமுறையை பயன்படுத்தும் அதிகாரம் அவரிடம் உள்ளது. அதாவது, இந்த அரசாங்கம் மக்களுக்காக செயல்படாமல், அதற்கு தகுதியற்ற ஒரு அரசாக இது செயல்பட்டு வருகிறது, என்பதை அவரால் கொண்டு செல்ல முடியும். அதற்கு திமுக அரசு இடம் அளிக்காமல் பார்த்துக் கொள்வது ,அவர்களுடைய கையில் தான் இருக்கிறது.