கிராம கணக்கு வழக்குகள், மக்களின் பார்வைக்கு தினந்தோறும் நடக்கின்ற வரவு செலவு கணக்கு முதல் செயல்படுத்தும், திட்டங்கள் வரை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிக்கையின் மூலம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
மேலும், தற்போது கிராம பஞ்சாயத்துகளில் வரி வசூல் மட்டுமே, ஆன்லைனில் வசூலிக்கின்றனர் .அது கூட சில கிராமங்களில் இன்னும் வரவில்லை. இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டால் ,விரைவில் வரும் என்றுதான் தகவல் தெரிவிக்கிறார்கள் .மேலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும், மாநில அரசு கிடப்பில் போடப்படுவது பஞ்சாயத்து தலைவர்களின் ஊழல்கள் மூடி மறைக்க வா? அல்லது அவர்களுடன் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கவா? இவையெல்லாம், இவர்கள் கிராமத்தில் இருந்து வாழ்ந்து பார்க்க வேண்டும்.
அப்போதுதான் கிராமத்தில் என்ன நடக்கிறது? என்பது தெரியும். ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் கூட, ஒரு கட்சியில் தன்னை நிர்வாகி என்று சொல்லிக்கொண்டு ,அந்த கிராமத்தில் பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமூக சேவகர்கள் போலவும், தியாகிகள் போலவும், பேசிக் கொண்டிருப்பார்கள்.
இதைத்தான் கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் பார்த்து, பார்த்து, அலுத்து போய் இருக்கிறார்கள். அதனால், விவரமான நபர்கள் இவர்களின் பேச்சை நம்புவதில்லை .எதுவும் தெரியாத மக்களிடம் இதையெல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியை நம்புவது என்ற குழப்பத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் பிஜேபி கட்சியினர் தங்களை சமூக சேவகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். அந்த சேவை அத்தனையும் சுயநலமாக தான் இருக்கிறது.
மேலும், கடந்த 50 ஆண்டுகால அதிமுக திமுக ஆட்சியில், பொது சொத்துக்களை எப்படி திட்டம் போட்டு ,அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கலாம்? இதுதான் இன்றைய அரசியலின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும், பேசுவது பொதுநலம், செயல்படுவது சுயநலம். இதில் ஒரு ஐந்து சதவீதம் கூட பொதுநலம் இருக்காது .அதனால் தமிழ்நாட்டில் இவர்களும் அதிமுக ,திமுகவைப் போன்று செயல்பட போகிறார்களா? தவிர,
மோடி செய்கிறார், மோடி செய்கிறார், என்று சொல்கிறார்கள்.மோடி செய்வது ,செய்தது மனசாட்சி உள்ள மக்களுக்கு புரியும். ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் என்ன செய்கிறீர்கள்? செய்தீர்கள்? எல்லா அரசியல் கட்சிகளும்,அரசியல் என்பதை வியாபார தொழிலாக்கி விட்டார்கள். இந்த வியாபாரத்தில் ஏமாறுபவர்கள் ,அரசியல் தெரியாத முட்டாள்கள்.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எவன் வந்தாலும், சாப்பிட தான் போறான். எவன் வந்தாலும் கொள்ளையடிக்க தான் போறான். அதனால், நீ காசு கொடு நான் ஓட்டு போடுறேன்.இது வாக்குரிமைக்கு அர்த்தம் தெரியாதவன் பேசும் பேச்சு. எங்களால் முடிந்தவரை இந்த உண்மைகளை மக்களிடம் சமூக அக்கறை உள்ள பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் எடுத்து செல்கிறார்கள்.
ஆனால், வியாபார பத்திரிகைகள், எந்த உண்மையும் சொல்லாமல் தாங்கள் தான் பெரிய பத்திரிக்கை என்று மார்தட்டிக் கொள்கிறது .இவையெல்லாம் எனக்கு தெரியாது என்று பேசும் மக்களும், அதனால், எனக்கு என்ன லாபம் மட்டும் தான் பார்க்கத் தெரியும் என்றால் ! ஒரு நாள் இது போன்ற நிர்வாக ஊழல்களால், நாட்டு மக்கள் வாழ்க்கையோடு தற்போது போராடுகின்ற நிலையை விட, மிகவும் மோசமான சூழ்நிலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவர்கள் மட்டும்தான் வசதி வாய்ப்புகளில் புரளுவார்கள். நாட்டில் உள்ள சொத்துக்களை வளைத்து போடுவார்கள். ஒரு பக்கம் அனாதினம், பொறம்போக்கு என்று வளைத்து விட்டார்கள். .அதனால் விழித்துக் கொள்ளுங்கள் .வெள்ளம் வருவதற்கு முன் அணை போடுங்கள். வந்த பிறகு எந்த அணையும் போட முடியாது. இன்னும் எத்தனை நாளைக்கு ஜாதியை வைத்து, மதத்தை வைத்து அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்? உண்மையை உணர்ந்தால் சரி .