தமிழ்நாடு சமூக நல பத்திரிக்கையாளர்கள் (Tammil nadu social journalists federation)கூட்டமைப்பு எளிமையான முறையில்  துவங்கப்பட்டது.

அரசியல் ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு எளிய முறையில் கணக்கன்பட்டி ஐயா பழனிசாமியின் பத்தாவது ஆண்டு குருபூஜை விழாவில் துவங்கப்பட்டது. இதில் தேனி மாவட்ட நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கே நிறுவனரும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியருமான ராஜேந்திரன் விழாவை துவக்க வைத்து, நிர்வாகிகளுக்கு சங்கத்தின் பொறுப்புகள், செயல்பாடுகள், சமூக பணிகள், இதையெல்லாம் விளக்கி அவர்களிடம் எடுத்துரைத்தார்.

 மேலும் ,இந்த சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மக்களுக்கு சேவை செய்யவும், பத்திரிக்கை சமூகங்களில் உள்ள குறைகளை, தவறுகளை, சுட்டிக்காட்டி அதிகாரிகளிடம் முறையிட்டு சரி செய்யவும், அதேபோல், சமூகப் பிரச்சனைகளில், மக்களுடன் சேர்ந்து பணியாற்றவும், தவிர, சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு இதுவரை ஆயிரக்கணக்கில் சங்கங்களில் இருந்தும், ஒரு சங்கங்கள் கூட ,அதைப்பற்றி என்ன என்று தெரியாமல், அதற்கான கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லாமல், சுயநல சங்கங்களாகவும், பத்திரிகையாளர்களின் நலன்களில் அக்கறையில்லாமலும், இந்த பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் பற்றி இதுவரை எந்த சங்கங்களும் போராடாமல், கேள்வி கேட்காமல் அல்லது அவர்களுடைய பத்திரிகைகளில் கூட, அது பற்றிய உண்மை தகவல்களை அரசுக்கு எடுத்துச் சொல்லமலும் இருந்து வருகின்றனர்.

 சங்கம் என்பது வெறும் ஐடி கார்டு போட்டுக் கொண்டு,மற்றவர்களுக்கு காண்பிக்க அல்ல, சங்கம் என்பது பத்திரிகையாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் பத்திரிக்கையாளர்கள் சங்கம். அதை தங்களுடைய சுயநலத்திற்கு பயன்படுத்தி ,பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எந்தவித நலனும் செய்யாமல், நானும் சங்கம் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை .

அதே போல், பத்திரிக்கையில் சொல்ல வேண்டிய பத்திரிகையாளர்கள் பிரச்சனைகள், செய்தியாளர்கள் பிரச்சனைகள், சமூக நல பத்திரிகைகளின் பிரச்சனைகள், எதைப் பற்றியும் உண்மையான கருத்தை சொல்லாமல் இருப்பதும் ,பத்திரிகைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது .இதனால் ,அந்த பத்திரிகைகளின் வளர்ச்சியும், மக்களுக்கு சொல்ல வேண்டிய உண்மைகள் போய் சேராமல் ,ஆட்சியாளர்கள் சொல்வதையும்,, அரசியல் கட்சிகள் சொல்லும் பொய்யான தகவல்களும், மக்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மிக முக்கிய காரணம்.

இதன் பாதிப்புகள் மக்களுக்கு எப்படி ஏற்படுகிறது? எந்தெந்த வழியில் அவர்களுக்கு இப் பிரச்சனை உருவாகிறது ?இது பற்றி சமூக அக்கறை இல்லாமல்,கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் செயல்படுகிறது .ஆனால் அவர்கள் தான் சமூக அக்கறையுடன் செயல்படுவது போல் காட்டிக் கொள்கிறார்கள். இதனால், மக்களுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இப்படிதான் இந்த பத்திரிகையாளர்களின் நிலைமை இருந்து வருகிறது.

இதிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு செயல்பட பத்திரிகையாளர்கள் சமூக நல கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. விரைவில் அதற்கான பணிகள் ஒவ்வொன்றாக துவக்கி, செயல்படும் என்பதை  பத்திரிக்கையாளர்கள் சமூகத்திற்கும் ,பொது மக்களுக்கும், இச்செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் .

மேலும் இச்சங்கத்தில் மாநில பொதுச்செயலாளராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேனி மாவட்டத்தின் இச்சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் சங்கத்தின் அடையாள அட்டை  சங்கத்தின் நிறுவனர் ராஜேந்திரன் நிர்வாகிகள் அனைவருக்கும் வழங்கி, சரியான முறையில் செயல்பட அனைவருக்கும்  எடுத்துரைத்துள்ளார். தவிர, இது சங்கத்தில் சேர்ந்து பணியாற்றிட விருப்பமுள்ள செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9344794091 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *