தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மீண்டும் குறிப்பிட்ட கோரிக்கைகளை தெளிவுபடுத்தி கேட்டுக் கொண்டதன் பேரில் அனுப்பப்பட்ட அதன் விவரம் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

45 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் ஒரே சட்ட விதிமுறைகளின் கீழ் பத்திரிக்கை துறை செயல்படுவது பத்திரிக்கை துறைக்கு எந்த விதமான வளர்ச்சியும் இல்லை .சமூக நலனுக்கான முன்னேற்றமும் இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட்  ஃபெடரேஷன் கோரிக்கை . இது கோரிக்கையை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இதை பத்திரிகை உலகத்திற்கும் பொது மக்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இணையதளத்தில் இச்செய்தியை வெளியிடுகிறோம். மேலும், பத்திரிக்கை துறையில் தற்போது இருந்து வரும் பிரச்சனைகள் அவலங்கள் மற்றும் அதிகாரிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் இப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது., அது என்னவென்றால் !

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா 1978 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பத்திரிக்கை சட்டம் நிறைவேற்றி செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் ,இன்று பத்திரிக்கை அச்சு ஊடகம் பொதுமக்கள் விரும்பி வாங்கி படிப்பதில்லை . அதற்குக் காரணம் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு மக்களின் விருப்பம், அதன் தேவை, பயன்பாடுகள் குறைந்துவிட்டது.மேலும்,

 பொதுமக்கள் அதிகம் விரும்பி படிப்பது இணையதளம், பேஸ்புக், டுவிட்டர், instagram ,whatsapp, youtube என பலவற்றில் செய்திகளை மக்களும், இளைய தலைமுறையினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் . இந்த சூழ்நிலையில் அச்சு ஊடகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட சர்குலேஷன் என்ற விதிமுறையை தினசரி பத்திரிகைகள் தவறாக பயன்படுத்தி மத்திய, மாநில அரசின் சலுகை, விளம்பரங்களை பெற்று வருகிறது .அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

 போலியான ( audit report ) கணக்குகள் மூலம் மத்திய ,மாநில அரசுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. மேலும், தினசரி, வாரம், மாதம், மாதத்திற்கு இருமுறை, என்ற பத்திரிகைகளின் காலநிலைகளை வேறுபடுத்தாமல் ,அந்தந்த பத்திரிகை எந்த நோக்கத்திற்கானது? என்பதை வகைப்படுத்த வேண்டும். அது அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையா? வியாபாரம் நோக்கம் கொண்ட பத்திரிகையா? பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதியற்றவையா? அல்லது பல பத்திரிக்கை செய்திகளை காப்பியடிக்கப்பட்டுள்ளதா? இப்படி பல பத்திரிகைகள் ஒவ்வொரு மாநிலத்திலும், ஆயிர கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கிறது .சில வெளிவராமல் பேஸ்புக், டுவிட்டர், whatsapp-யில் பத்திரிக்கை நடத்துகிறார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் (RNI) மட்டுமே பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான தகுதி ,தரம் எதுவும் தேவையில்லை. மேலும், அரசு அடையாள அட்டையும், பத்திரிகை அடையாள அட்டையும் இருந்தால் பத்திரிகையாளர்கள் என்றும், செய்தியாளர்கள் என்றும் பல போலிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சங்கம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

பத்திரிக்கை செய்திகளை போடாமலே, நாங்களும் பத்திரிகை என்று தெரிவித்து பொதுமக்களையும், பத்திரிகை உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பத்திரிக்கை துறைக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் மதிப்பு மரியாதையும் குறைந்துவிட்டது. இது தவிர, தகுதியான பத்திரிகைகளுக்கும், தகுதியான பத்திரிகையாளர்களுக்கும், தகுதியான செய்தியாளர்களுக்கும், அதிகாரிகள் ஒரே மாதிரியாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பத்திரிக்கை துறைக்கும், சமூக நலனுக்கும் எதிரானது .

இவர்கள்தான் சமூகத்திற்கு எதிரான சில அரசியல் கட்சியை சார்ந்து, குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துள்ளார்கள். மேலும் ஊழலுக்கும் துணை போகிறார்கள். இதையும் ரெஸ்ப கவுன்சில் ஆஃப் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் .மேலும்,

சமூக நலன் கருதி போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள் எதுவும் கொடுப்பதில்லை .இது சமூக நலனுக்கும் ,இந்த தேசத்தின் நலனுக்கும் ,பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் எதிரான ஒன்று .மேலும், தமிழ்நாட்டில் தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று தெரிவிக்கிறார்கள். கொள்கை முடிவு என்பது ஆட்சியாளர்களின் கொள்கை முடிவா? அல்லது பத்திரிகை சுதந்திரத்தின் கொள்கை முடிவா? எது என்பதை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தீர்மானிக்க வேண்டும் .

மேலும், தகுதியற்ற பத்திரிகைகள்  தினசரி என்று அவைகளுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட  சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பதை மத்திய மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்‌. ஏனென்றால், மக்களின் வரிப்பணத்தில் தான் இவை அனைத்தும் கொடுக்கப்படுகிறது .இதனால் மக்களுக்கு இந்த பத்திரிகைகள் மூலம் சமூகத்திற்கு தேவையான செய்திகள் வெளியிடுவதில்லை. பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் செய்திகளும், முக்கியத்துவம் இல்லாத செய்திகள் தான் வெளியிட்டு வருகிறார்கள். இதனால், பொதுமக்களுக்கு போய் சேர வேண்டிய உண்மையான செய்திகள் வெளியிடுவதில்லை .

மேலும், ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் தமிழக அரசின் செய்தித்துறை சலுகை மற்றும் விளம்பரங்களை கொடுத்து வருகிறது இதை மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து உறுப்பினர்களாக, பொறுப்பாளர்களாக இருந்து வருகிறார்கள். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. மேலும், இந்த நல வாரியம் கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்ட நல வாரியமா? அல்லது சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இதில் இடமில்லையா?

 மேலும், ஒரு பத்திரிகை தற்போது எந்த அளவிற்கு அதன் செய்திகளின் தரம், உண்மை, சமூக நலன், தேச நலன் முக்கியத்துவம், இவை எல்லாம் கருத்தில் கொண்டு எந்தெந்த பத்திரிகைகள்? எந்தெந்த தொலைக்காட்சிகள்? செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு வருகிறதோ! அதற்கு முக்கியத்துவம் மத்திய ,மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அரசியல் தலையீடு என்பது எக்காலத்திலும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆட்சியாளர்கள் சொல்வது தான் பத்திரிக்கையாகிவிட்டது.

அதனால், காலத்திற்கு ஏற்றவாறு, நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ,மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு, இன்றைய பத்திரிக்கை சட்ட விதிகளை பிரிஸ் கவுன்சில் ஆப் இந்தியா மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ,பத்திரிக்கை என்பது இந்த தேச நலனுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும் ,சமூக நலனுக்காகவும் இருக்க வேண்டுமே ஒழிய, ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காகவும் ,அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்காகவும், பத்திரிகைகளின் வியாபாரத்திற்காகவும் ,இன்று இந்த பத்திரிக்கை சுதந்திரமும் ,பத்திரிக்கையின் சலுகை, விளம்பரங்களும் தவறான முறையில் பல ஆயிரம் கோடிகளை மக்களின் வரிப்பணத்தில் வீணடிக்கப்பட்டு வருகிறது என்பதை press கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு, இந்த உண்மையும், குற்றச்சாட்டையும் தெரிவிக்கிறேன்.

மேலும், இதுவரை மத்திய, மாநில அரசுகள் சமூக நலனுக்காகவும், இந்த தேச நலனுக்காகவும் ,ஊழலுக்கு எதிராகவும் போராடும் பத்திரிகைகளுக்கு, எந்த விதமான அரசின் பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதில்லை . இதனால் மக்களுக்கு நாட்டின் உண்மைகள் மற்றும் உண்மையான செய்திகள் சென்றடையாமல் மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள் ,ஆட்சியாளர்களின் ஜால்ராவாக இருந்து வரும் பத்திரிகைகள், வெளியிட்டு வரும் செய்திகளால் மக்களுக்கு உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், இவர்கள் மக்களின் வரிப்பணத்திலே சர்குலேஷன் காட்டிவிட்டு ,இந்த விதிமுறையை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் .ஆனால், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்த பணத்தில் பத்திரிக்கை நடத்தி ,இந்த சர்குலேஷன் அவர்களால் நிச்சயம் காட்ட முடியாது. காரணம் எத்தனை நாளைக்கு? சாமானிய மக்கள் நடத்தும் சமூக நலன் பத்திரிகைகள் ,அவர்களுடைய சொந்த பணத்திலும் ,சொந்த உழைப்பிலும் அதிக அளவில் மக்களிடம் உண்மைகளை கொண்டு சேர்க்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ,இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, சமூகத்தின் வளர்ச்சிக்கு, மக்களின் கருத்து சுதந்திர உணர்ச்சிகளுக்கு எதிராக, மத்திய, மாநில அரசின் செய்தித்துறை செயல்பட்டு வருகிறது. மேலும், இப்படிப்பட்ட தவறுகள் ஒரு புறம், மற்றொருபுறம் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் மக்களின் நலனுக்கும், இந்த தேசத்தின் நலனுக்கும் பயன்படாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முறையாக ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.அதிகாரிகள் ஆட்சியாளர்களின் எடுபிடிளாக செயல்படுகிறார்கள்.

அதனால் நேர்மையான நீதிபதி தலைமையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் ,ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகைகளை தரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் ஒன்றிணைந்து இதை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பத்திரிகைக்கான சுதந்திரம், உண்மையான செய்திகள், இந்த தேச நலனுக்கான செய்திகள் ,மக்கள் நலனுக்கான செய்திகள் ,வெளியிடும் பத்திரிகைகள் எத்தனை ?அதற்கு மட்டுமே பஸ் பாஸ், சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.

 அது சர்குலேஷன் என்ற விதிமுறைக்கு அப்பாற்பட்டு, இணையதளம் மற்றும் அதை சார்ந்துள்ள பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் whatsapp அனைத்திலும் ஒவ்வொரு நாளும் மக்களின் பார்வைக்கு எவ்வாறு சென்றுள்ளது? என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர, சர்குலேஷன் என்ற விதிமுறையில் ஒவ்வொரு பத்திரிக்கையும், போலியான கணக்கு வழக்குகளை காட்டி (ஆடிட்டர் ரிப்போர்ட்) ஏமாற்றி வருகிறது .அதில் விற்கப்பட்டது எவ்வளவு? அச்சடிக்கப்பட்டது எவ்வளவு? ரிட்டன் வந்தது எவ்வளவு? அதன் பேங்க் அக்கவுண்ட் எந்த கணக்கும் இருக்காது .

மேலும், இந்த தினசரி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளால் மக்களுக்கு என்ன நன்மை? இந்த சமூகத்திற்கு என்ன நன்மை? நாட்டின் நலனுக்கு என்ன நன்மை? அந்த செய்திகளின் தரம் என்ன? இவ்வளவும் ஆய்வு செய்தால், அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் பஸ் பாஸ் உள்ள சலுகை, விளம்பரங்கள் தேவையற்றது. அதனால், ஒரு பத்திரிகையின் செய்தியின் தரம் ,உண்மையின் தரம் ,சமூக நோக்கம் ,இவை எல்லாம் ஆய்வு செய்து ,கட்சி சார்ந்த, வியாபாரம் சார்ந்த ,பத்திரிகைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் சர்குலேஷன் என்ற விதிமுறையை தவறாக பயன்படுத்தி, மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை மத்திய- மாநில அரசின் செய்தித்துறை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

அதை உடனடியாக தடுத்து நிறுத்தி, சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, பத்திரிக்கை சுதந்திரத்தையும், பத்திரிகைகளின் வளர்ச்சிக்கும், இந்த தேச நலனின் அக்கறை கொண்டு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா பத்திரிகைகளின் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோரிக்கை .

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாக மிக்க நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *