
நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற ஊழல்களுக்காக விசாரிக்கக் கூடாது.

அதிகாரம் இல்லை. இப்படி மக்களை முட்டாள் ஆக்குவதற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார? எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பது ஏன்? மேலும்,நீதிமன்றம் எதற்காக இருக்கிறது? ஊழல்களை விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்வதற்கு இருக்கிறதா? இல்லை ஊழலை விசாரிப்பது தவறு.

அதனால், மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு குறைந்து விடும். அதற்கு ஏதாவது மூட்டு கட்டை போடுவதற்கு நீதிமன்றங்கள் இருக்கிறதா? இதற்கு அடுத்தபடியாக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றி மக்களிடம் கொண்டு செல்லாமல், அதற்கு ஏதாவது காரணத்தை சொல்லி, அல்லது சாக்கு போக்குகளை சொல்லி, மக்களைக் குழப்ப பல காரணங்களை சொல்லி மக்களை ஏமாற்ற குறிப்பிட்ட பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் இருக்கிறதா?

இப்படிப்பட்ட பத்திரிக்கை,தொலைக்காட்சிகளுக்கு தான் அரசு செய்தித் துறை,சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது மக்களை ஏமாற்ற கொடுத்துக் கொண்டிருக்கிறதா? இது தனியார் நிறுவனமா? அல்லது அரசு நிறுவனமா?என்ற சந்தேகம் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் மக்களின் வரிப்பணத்தை சமூக நலனுக்கான நோக்கத்தின் அடிப்படையில் தான் அதை பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காகவும்,அரசியல் கட்சிகளின் சுயநலத்திற்காகவும்,மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கும் அரசின் செய்தி நிறுவனங்களை, தனியார் நிறுவனங்களா?அல்லது அரசு நிறுவனங்களா? என்பதை பத்திரிக்கை சமூகம் சிந்திக்கட்டும்.

மேலும், ஒரு நாட்டின் நிர்வாகம் கொண்டு போய் நீதிமன்றத்தில் அடகு வைத்துக் கொண்டு, ஆட்சி செய்வது ஆட்சியாளர்களின் திறமை அல்ல, ஒரு அரசு நெருக்கடியான நிலையில், எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருக்கும்போது, அதை நீதிமன்றத்தின் கையில் விட வேண்டும்.

ஆனால், ஊழல் செய்துவிட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்க ஆட்சி நிர்வாகம் எதற்கு? எதற்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்?ஆயிரம், ஐநூறுக்காக, வாக்களித்துக் கொண்டிருப்பதால், இல்லை 2000,3000,5000 என்று வாக்களித்துக் கொண்டிருப்பதால், எங்கள் இஷ்டப்படி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம் என்கிறார்களா?அல்லது எல்லோருமே இந்த நாட்டில் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களிக்கிறார்களா? அல்லது வாக்களிக்க மக்கள் அனைவரும் முட்டாள்களா? இந்த கேள்விக்கெல்லாம் உங்களால் பதில் அளிக்க முடியுமா?

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ முதலமைச்சர்கள் வந்திருப்பார்கள். போய் இருப்பார்கள்,ஆனால்,ஸ்டாலின் ஆட்சியில் இவ்வளவு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்றது,தமிழ்நாட்டின் முதல் சம்பவம் என்பதை அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.