2024 நாடாளுமன்ற கூட்டணிக்கான அரசியல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ளது. இது பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், சோசியல் மீடியாக்களில், இப்பிரச்சனை இன்று பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வருகிறது .
இதில் என்ன மிக முக்கியமானது என்றால் பிஜேபி அதிமுகவுடன் மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்து மிகவும் அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பான அரசியல் .தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பலத்தை பொறுத்துதான் ஆட்சி அதிகாரத்தை பெற முடியும் அதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், அண்ணாமலை சொன்னது கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அவர் கொள்கை ரீதியாக கூட்டணி இருக்க வேண்டும்.
தொடர்ந்து ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதை விட, மக்களுக்கான அரசியலை கொண்டு செல்வது தான் எதிர்காலத்திற்கு நல்லது. பிஜேபி ஆட்சி அதிகாரத்தை திமுக அல்லது அதிமு கூட்டணிகளுடன் சேர்ந்து கூடுதலாக ஒரு நான்கு சீட்டு அல்லது 10 சீட்டு பெறுவது முக்கியமல்ல.எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தான் மிக முக்கியமானது.
மேலும், இந்த இரண்டு கட்சிகளின் அராஜக ஆட்சி அதிகாரத்தை மக்கள் சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்று பிஜேபியின் வாக்கு வங்கி என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். அடுத்தது, இந்த இரண்டு கட்சிகளும் இலவசமும், பணமும் கொடுக்காமல் இவர்களால் ஜெயிக்க முடியாது.
ஆனால், பிஜேபிக்கு வருகின்ற வாக்குகள் காசு கொடுக்காமல் வருகின்ற வாக்குகள். இவர்கள் காசு கொடுத்தால் தான் வாக்கு வாங்க முடியும். மேலும் பிஜேபி இன்று எதிர்க்கட்சி அளவிற்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில், பிஜேபியின் தலைமையில் கூட்டணி அமைத்தால், வருங்காலத்தில் பிஜேபி எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது. அடுத்தது ஆளும் கட்சியாகவும், தமிழ்நாட்டில் வரும் என்பது உறுதி.
இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், கட்சியின் வளர்ச்சியை அவர்களே தடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும்.
அதனால், பிஜேபிக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் கலைந்து எதிர்கால வளர்ச்சி திட்டங்களாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது மட்டுமல்ல, நிர்வாகிகள் பொதுமக்கள் எந்த நேரத்தில் உங்களை போனில் தொடர்பு கொண்டாலும், அவர்களுக்கு மதிப்பளித்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டில் பிஜேபி அரசியல் செய்ய முடியும் .அது மட்டுமல்ல, களத்தில் நின்று பிரச்சனைகளை சந்திக்காமல் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதற்கு ஒவ்வொரு நிர்வாகியும் தங்களை தயார் செய்து கொள்வது எதிர்கால பிஜேபியின் அரசியல் வெற்றி.
மேலும் தமிழ்நாட்டில் ஆளுகின்ற திமுக டோட்டலி கரப்ஷன் நிர்வாகத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து வருகிறது. எந்த ஒரு புகார் மனுவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மக்கள் கொடுத்தால், அதில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அதிகாரிகளும், ஊழலுக்கு ஒத்து ஊதுகிறார்கள். மேலும், பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளும் இன்று அந்த ஊழலுக்கு ஒத்து ஓதிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிர்வாகத்தை தான் திமுக அரசு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு பூண்டி ஊராட்சியை சேர்ந்த பரந்தாமன் இவர் சிப்காட் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த ஊராட்சியில் தன் வீட்டிற்கு செல்வதற்கு பொது வழி பாதையை ஆக்கிரமித்து உள்ள பிரச்சனை குறித்து, வருட கணக்கில் தலைமைச் செயலகத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து எந்த வேலையும் நடக்கவில்லை. இப்படி பல புகார்கள் இந்த மாவட்டத்தில் இருந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது கோடிக்கணக்கான ஊழல் பிரச்சனை ,விடையூர் கிராமத்தில் உள்ள 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருவேல மரம் காடுகளை வனத்துறை சுமார் ஒன்றரை லட்சத்துக்கு மதிப்பீடு செய்து அதை பொதுப்பணித்துறை கிராமத்தில் ஏலம் விட்டுள்ளது.
இதை கிராமத்தில் மறு ஏலமாக பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை மற்றும் சிலர் 55 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளது. கேட்டால் அது கோயிலுக்கு என்று கணக்கு காட்டுகிறார்கள். இது சம்பந்தமாக கிராமத்திலும் புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தலைமைச் செயலாளர் துறை, செயலாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை .மேலும், இந்த மரத்தை வெட்டுவது நான்கு நாட்கள் நிறுத்தி வைத்துவிட்டு, தற்போது வெட்ட ஆரம்பித்து விட்டார்கள் .இது தவிர, இந்த மரத்தை வெட்டியவுடன், இந்த ஏரிகளில் மண் எடுக்க திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.
ஆகக்கூடிய இந்த இயற்கை வளம் இந்த கிராமத்தில்கொள்ளையடிப்பதற்கு திட்டம் போடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் மறைமுகமாக தலையிட்டு அரசியல் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வருமானம் மட்டுமே முக்கிய குறிக்கோள். அதனால் பிஜேபி இந்த இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த கிராம மக்கள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.