தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அளவுக்கு பிஜேபியின் வாக்கு சதவீதம் வளர முடியுமா ? எப்படி வளரும்?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 12, 2024 • Makkal Adhikaram

சமூக வலைதளத்தில் திராவிட கட்சிகள் தங்களுக்கு போட்டியாக பிஜேபி வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறது .அதனால் தான், இப்படிப்பட்ட ஓட்டு வங்கி சதவீத கணக்கை வாட்ஸ் அப் குரூப் களில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி வளர்ந்திருக்கிறதா? வளர்ந்திருக்கிறதா? என்பதை உங்கள் கேள்வியிலே தெரிகிறது. அது வளர்ந்து இருக்கிறது. அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருக்கிறது. அதில் மாற்று கருத்து இல்லை.

மேலும், பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்றால் திராவிட கட்சிகள் செய்யும் அரசியல் டெக்னிக்கல் பிஜேபி கட்சியினருக்கு தெரியாது . அதையெல்லாம் செய்யாமல் எப்படி தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் உயரும் ? அது பற்றிய சில தகவல்களை கொடுக்கிறேன். அதை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் உண்மையா? இல்லையா? என்பதை சிந்திக்கட்டும்.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் வளர வேண்டும் என்றால் பணத்தை வாக்காளர்களுக்கு அள்ளி வீச வேண்டும். செய்ய முடியாததை எல்லாம் செய்வோம் என்று பல பொய்களை சொல்லி மக்களை நம்ப வைக்க வேண்டும். கார்ப்பரேட் ஊடகங்கள் இந்த பொய்களை எல்லாம் பல பக்கங்களில் எழுதி, டிவிகளில் விவாதம் நடத்தி, youtube களில் இதைப் பற்றி வீடியோக்களை போட்டு, தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கினால் தான் வாக்கு சதவீதம் எடுக்க முடியும் . அது மட்டுமல்ல, 

தமிழ்நாட்டில் தற்போது ஒரு அரசியல்வாதி என்றால் பல ஆண்டுகளுக்கு முன்னால் சினிமாவில் சோ நடித்த ஒரு படம் இருக்கிறது. அந்த படத்தில் ஒரு கவுன்சிலர் நீ கையை கும்பிட்டபடி தான் வர வேண்டும் .கையை எக்காரணத்தைக் கொண்டும் தொங்கப்போடக்கூடாது. சின்ன குழந்தையாக இருந்தாலும் அது காலிலும் இருந்து விட வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டிலும் கல்யாணம் நடந்தால் மொழிக்கு கவர் எழுத வேண்டும் .துக்க நிகழ்ச்சி நடந்தால், அவர்கள் வீட்டுக்கு சென்று ஒரு மாலை போட வேண்டும். இந்த டெக்னிக் எல்லாம் தெரியாத பிஜேபி எப்படி தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் வரும் ? 

அது மட்டுமல்ல, நன்றாக உடம்பு காட்ட வேண்டும் .ஒரு பத்து பேரோட நின்னு பேசிக்கொண்டு பந்தா காட்ட வேண்டும் . மேலும், ஒரு கட்சியின் மீட்டிங் போட்டால், அங்கே சினிமா பாட்டு ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவது போல் போட வேண்டும். எம்ஜிஆர் பாட்டு, ஜெயலலிதா பாட்டு போட்டு மக்களை இந்த பாட்டிலே, மக்களுக்கு சேவை செய்வது போல், பாவனை காட்ட வேண்டும். சமீபத்தில் திமுக கட்சி திருச்சி என்று நினைக்கிறேன். அங்கே கட்சி  மேடை ஒன்று போட்டதில் அரைகுறை ஆடைகளுடன் டான்ஸ் ஆடும் பெண்களை வைத்து ஆட வேண்டும்.

இது எப்படி இருக்கிறது என்றால், எம்ஜிஆர் நம் நாடு என்ற படத்தில் இவருக்கு எதிரானவர்கள் இப்படித்தான் டான்ஸ் ஆடுவார்கள், மது அருந்தி கொண்டு அதுபோல் எங்கிருந்து கட்சி உதயமானதோ, அந்த உதயத்தில் இன்றுவரை அதிமுக, திமுக குறைவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சினிமாவில் ஆரம்பித்தது .இப்போ மக்களுடைய வாழ்க்கையும், சினிமாவாக ஆக்கி இருக்கிறார்கள் . அது இந்த மக்களுக்கும் தெரியாது .என்ன செய்வது இவர்களுடைய நல்ல நேரம், மக்களின் துரதிஷ்டம்.மேலும்,

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியல் அது அண்ணாமலை தான். அண்ணாமலை ரகசியத்தை வீடியோவாக வெளியிடுகிறேன். அண்ணாமலையை மாற்ற திராவிட கட்சிகளும் போட்டி போடுகிறது .பிஜேபிக்குள் இருக்கும் நிர்வாகிகளும், போட்டி போடுகிறார்கள். அண்ணாமலை தவிர, வேறு யாரு வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.

 அது ஒரு கடினமான வேலை இதை பலமுறை எழுதியிருக்கிறேன்.தமிழிசையோ ,வானதி சீனிவாசன், அல்லது இங்குள்ள வேறு சிலரோ, திராவிட கட்சிகளுக்கு மாற்றான அரசியல் இவர்களால் செய்ய முடியாது. ஊதி தள்ளி விடுவார்கள். அவர்களுடைய அரசியல் எங்களைப் போன்ற ஆட்களுக்கு தான் தெரியும் .இதை பிஜேபியின் தலைமை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும், நடிகர் விஜய் சினிமா படத்தில் நிழல் ஹீரோவாக நடித்துவிட்டு, நிஜ ஹீரோவாக அரசியல் களத்தில் ஆக நடிக்க முடியுமா ? பிஜேபியே அண்ணாமலை ஒருவரை வைத்து தான் இந்த ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு மாற்று விஜய் ஆல் தர முடியுமா?

தமிழக மக்கள் மாற்றத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால், திராவிட கட்சிகள் பணத்தை நம்பி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *