நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்? யாருக்கு அதனால் நஷ்டம்? இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, போன்ற பல அரசியல் கட்சிகள் இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் பேசிக் கொண்டு, ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி மாணவர்களிடம் அரசியல் ஆதாயத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் என்ன முக்கிய விஷயம் என்றால், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அது 2005 to 2006 அப்போது கூட்டணியில் இருந்த திமுக அதைப்பற்றி எந்த கருத்தோ, ஆட்சேபனையோ தெரிவிக்காமல் விட்டு, விட்டு இப்போது அரசியலிலாபத்திற்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறது. இந்த அரசியல் இதோடு போகாமல், இந்த நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான் என்று நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
மேலும், சில காலம் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டபோது உச்சநீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்த வழக்கிற்கு வாதாடிய நளினி சிதம்பரம் மீண்டும் நீட் தேர்வு கொண்டு வந்து விட்டார் .இதனால் மாணவர்கள் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற ஒரு தவறான திமுகவின் தேர்தல் வாக்குறுதி எக்காலத்திலும், நிறைவேற்ற முடியாது. காரணம் அது உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது .
மேலும், நீட் தேர்வினால் இன்று ஒரு சில ஏழை, நடுத்தர மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று எந்த செலவும் இல்லாமல் மருத்துவர்கள் ஆக ஆகி வருகிறார்கள். இந்த நீட் தேர்வு வைத்து மாணவர்களிடம் அரசியல் செய்யும் நோக்கமே தனியார் கல்லூரிகளுக்கு வருகின்ற வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி கணக்கில் மருத்துவ கல்லூரிகள் மருத்துவ சீட்டுக்காக வாங்கிக் கொண்டிருந்தார்கள் .அது கட் ஆகிவிட்டது. அதனால், மாணவர்கள் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கு, தங்களை தகுதியாக்கும் ஒரு தேர்வாக நினைத்து, படித்து அதில் வெற்றி பெறுவது தான் உங்களுடைய ஒரு சாதனை .
அதை விட்டு,விட்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளின் பேச்சைக் கேட்டு, உங்கள் வாழ்க்கையை தொலைப்பதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் உங்களுடைய முட்டாள்தனம். அதை வைத்து கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், அதற்கு இடம் கொடுக்காமல் உங்கள் அறிவைக் கொண்டு நீட் தேர்வை வெற்றிக் கொள்ளுங்கள்.