ஜூலை 17, 2024 • Makkal Adhikaram
அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும்,
தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை என்ன ? என்பதை மக்கள், இன்னும் அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் சேவையை விட ,இவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் இறங்குகிறார்கள். இதைப் பற்றி எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களுக்கு புரிய புரிய வைத்திருக்கிறது ?அதுதான் அவர்களுடைய தவறு. இங்கே அடிப்படை ஆட்டம் கண்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தெரியாததால் தான், இந்த அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .
அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சி என்கிறான். அவனுக்கு கட்சி என்றால் கொடி, வெள்ளை வேஷ்டி, சாட்டையும் அதுதான் கட்சி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அவனை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புரோக்கர் வேலைக்கு அவனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த புரோக்கர் வேலையை செய்ய அவன் ஊரில் உள்ள படித்தவன், தகுதியானவன், அரசியல் தெரிந்தவன், எல்லோரையும் இந்த முட்டாள், அடக்கியாளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.
மேலும், இது பத்திரிக்கை என்றால் என்ன? என்று தெரியாதவன், படிக்காமல் லேபிளை காட்டிக் கொண்டு, நான் தான் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்பவன், இவர்களெல்லாம் கூட்டு சேர்ந்து தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? இதைப் பற்றி படித்த இளைஞர்கள் சிந்தியுங்கள். அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம், அரசியலில் கொடிப் பிடிப்பதும் ,கூட்டத்தில் கோஷம் போடுவதும் தான் அரசியல் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அரசியல் அதுவல்ல.
அரசியல் கட்சியும் அதற்கல்ல. கொடி பிடித்து கத்தி விட்டு போனால் யாருக்கு என்ன பயன் ? மேலும், இந்த வியாபார ஊடகங்களில் நீ பேசிவிட்டு போனால் மக்களுக்கு என்ன பயன்? உத்தமர்களாக பேசி செயல்பாட்டில் ஒன்றுமே இல்லை என்றால், அவர்கள் அதற்கு தகுதியற்றவர்கள் .அதனால், தமிழ்நாட்டில் எந்த கட்சி சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது? என்பதை மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கும் முன் அதை தீர்மானிங்கள். நீங்கள் செய்கின்ற தவறு, அது உங்களிடமே வந்து சேர்ந்து விடுகிறது. தகுதியான அரசியல் கட்சி எது? தகுதியான அரசியல் கட்சியினர் யார்? என்பதை புரிந்து வாக்களியுங்கள். சேவை மனப்பான்மை இல்லாதவர்கள், அரசியல் கட்சிக்கு தகுதியற்றவர்கள்.
மேலும், ரௌடிகளையும், ஒழுக்கமற்றவர்களையும், எப்படியும் பேசுபவர்களையும் கொண்டு வந்து, கட்சிக்குள் பதவிகளை கொடுத்து, இவர்கள் போய் காலில் விழுந்து கட்சி பொறுப்புகளை வாங்கிக் கொண்டு அந்த ஏரியாக்களில் தாதாக்களாக வலம் வருவது எந்த பயனும் இல்லை. அதனால், நாட்டுக்கும் ,வீட்டுக்கும், சட்டத்துக்கும், சமுதாயத்திற்கும் ஒரு பயனற்ற ஒருவரை தான் அரசியல் கட்சிகள் நியமிக்கிறார்கள் என்றால்! அது தேவையற்றது. அந்தப் பகுதியில் அவர் என்ன செய்தார்? இவர் எம்எல்ஏ வாக வந்து என்ன செய்தார்? எம்பி ஆகி என்ன செய்தார்? மந்திரியாகி என்ன செய்தார்? இதுதான் தேவையே ஒழிய, இதற்கு தான் நாம் வாக்களிக்கிறோம்.
நீங்கள் பணத்திற்காக வாக்களிப்பதால், அவர்கள் உங்களை விலைக்கு வாங்கி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் வாக்களிக்கும் போது பணம் வாங்கி வாக்களிப்பவர்கள், அவர்கள் வாக்கு தகுதியற்ற வாக்கு . ஜனநாயகத்திற்கு எதிரான வாக்கு. இப்படிப்பட்டவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தது அம்பேத்காரின் தவறு ஒருவேளை அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு இதுபோன்று அரசியல் கட்சிகள் யாரும் பணம் கொடுத்து இருக்க மாட்டார்கள். இந்த சட்டங்களை கொண்டு வரும் போது செல்போன் இல்லை போன் இல்லை. இன்டர்நெட் இல்லை.மேலும்,
இப்போது பணம் கொடுத்து வெற்றி பெறுவது அதற்கு ஒரு தேர்தல் ஆணையத்தை மீடியேட்டர் ஆக பயன்படுத்திக் கொண்டு ,கொள்ளை அடிக்க சட்டத்தை ஏமாற்ற, பதவிக்கு வருவது நாட்டுக்கே ஆபத்தான ஒன்று. அதுமட்டுமல்ல, இந்த பணத்தை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அங்கே பதுக்குவது இது எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சிகள் செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான் .மேலும்,
ரவுடிகளும் நல்லவன் மாதிரி பேசுவான், பிராடும் நல்லவன் மாதிரி பேசுவான், அவனும் வெள்ளையாக ஆடைகளை அணிவான். இதை தான் மக்கள் அரசியல் என்று இன்று வரை ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இவனையும் கார்ப்பரேட் ஊடகங்கள் நல்லவன், வல்லவன் என்று எழுதி அரசியல் கட்சிகளில் அங்கீகாரம் கொடுத்ததை பாராட்டிக் கொண்டிருக்கும். இதை பெரிய பத்திரிக்கையில் இருந்து, சிறிய பத்திரிகை வரை இதைதான் செய்கிறது.மேலும்,
இதை விட்டுவிட்டு, இவர்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள்? எத்தனை கோடி கொள்ளை அடித்தார்கள்? என்று லிஸ்ட் போட்டு மக்களிடம் காட்டிக் கொண்டிருந்தால், அது பெரிய பத்திரிகைகள் திறமையோ, சாமர்த்தியமோ அல்ல. மக்களுக்கு புரியவில்லை. அரசியல் தெரியவில்லை. பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கே புரியாமல் இருக்கிறது. அப்படி என்றால், சாமானிய மக்களுக்கு எப்படி புரியும்?
அதனால், மக்கள் அரசியல் கட்சிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ஏமாறாமல், உங்களுடைய வாக்குரிமையை யாருக்கும் விற்காமல், உங்கள் நலனுக்காக உங்கள் பகுதியில் சேவை செய்யக்கூடிய நல்ல மனமுள்ளவர்கள், நல்ல பண்புள்ளவர்கள், தகுதியானவர்கள் யார்? என்பதை தீர்மானித்து உங்கள் வாக்குகளை அங்கே அவருக்கு வாக்களியுங்கள். அரசியல் கட்சிகளின் கூட்டத்தை பார்த்து, கட்சியில் நன்றாக பேசுவதை பார்த்து, பந்தா காட்டுவதை பார்த்து, எப்படியும் பேசுவதை பார்த்து, பேசி நடிப்பதை பார்த்து ,அவர்கள் சொல்லும் பொய்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
மேலும்,இந்த பொய்களை எல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், அதை எல்லாம் போட்டு காட்டி கொண்டிருந்தால் ,அப்போதும் ஏமாறாதீர்கள். அதனால், அரசியல் என்பதை மக்கள் வாக்களிக்கும் முன் ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்தியுங்கள் .பணம் உங்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்து, அவன் லட்ச ரூபாய் சம்பாதிப்பதற்கு தான் பணத்தை கொடுக்கிறான். அதனால், வாக்காளர்கள் அந்த நேரத்திற்கு வருகின்ற ஒரு மயக்கமிட்டாய். அது அந்த மிட்டாய் கொடுத்து, ஏமாற்றும் வேலை.
அதனால், வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் நலனில் அக்கறை இருந்தால், அல்லது உங்கள் கிராமத்தின் நலனில் அல்லது உங்கள் நகரத்தின் நலனில் உங்களுக்கு அக்கறை இருந்தால், தேர்தல் நேரத்தில் கொடுக்கின்ற பணத்தை வாங்காதீர்கள். அது உங்களை ஒருபோதும், உங்கள் வாழ்வாதாரத்தையோ அல்லது வாழ்க்கைத் தரத்தையோ உயர்த்தாது .இவை எல்லாம் கூட 40 – 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தான், இதை புரிந்து தெரிந்து செயல் படுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் , இச்செய்தியை இளைய சமுதாயத்திற்கு கொடுக்கிறேன் . அதனால்,இந்த தேர்தலுக்கு கொடுக்கின்ற பணம்,உங்கள் வளர்ச்சியை அழிப்பதற்கு கொடுக்கின்ற பணம், உங்களை அடிமைப்படுத்துவதற்கு கொடுக்கின்ற பணம் என்பதை புரிந்து, விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.மேலும்,
படித்த இளைஞர்கள், விஷயம் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் வேலை கிடைத்தால், அங்கே செட்டில் ஆகிவிடுகிறார்கள். இந்தியாவின் குடியுரிமை ரத்து செய்து விடுகிறார்கள். காரணம்? இங்கே மோசமான அரசியல். படிப்புக்கு ஏற்ற, தகுதிக்கேற்ற வேலை. நல்ல சம்பளம் அங்கு கிடைக்கிறது. இங்கே அவையெல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது. அங்கே படித்தவனை வைத்து அரசியல் செய்கிறான். இங்கே படிக்காத ரவுடிகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். அங்கே சினிமாவை ரசிப்பதற்கு மட்டுமே சினிமா, இங்கே எல்லாவற்றிலும் சினிமாவை புகுத்திக் கொண்டு, மக்கள் வாழ தெரியாமல் ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இதுதான் வித்யாசம்.