திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ,பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இதுவரை அதை பற்றி திரும்பி கூட பார்க்கவில்லை. மேலும், தற்காலிக பணியில் இருந்து வந்த பட்டதாரி ஆசிரியர்களை நாங்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்பது போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் சொல்வது வாடிக்கையாகி விட்டது,
இதை கேட்டு அந்த நேரத்தில் ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் வாக்களித்தார்கள். இப்போது அதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டங்களை செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இதைவிட கொடுமை போக்குவரத்து துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர், டிரைவர்கள் சுமார் 2500 குடும்பங்களுக்கு அவர்களுடைய ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் போகாமலே அவர்களில் பாதி பேருக்கு மேல் உயிரிழந்தாக தகவல் . மேலும்,ஒரே வார்த்தையில் நிதிநிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறார்கள் .
இனிமேல் இந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களிக்க முடியுமா? அல்லது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிக்க முடியுமா? என்பதுதான் திமுக அரசுக்கு இவர்கள் வைக்கும் முக்கிய கேள்வி ?