ஜூலை 13, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் விவசாயிகள் இதுவரை ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து பார்த்ததில்லை .அதேபோல் , குயவர்கள் மாட்டு வண்டியில் ஒரு வண்டியோ அல்லது இரண்டு வண்டியோ தான் கொண்டு வருவார்கள் . இப்படி ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் அளவுக்கு விவசாயிகள் மண்ணெடுத்து அல்லது குயவர்கள் மண் எடுத்து பார்க்கவில்லை .
சரி அப்படியே இவர்கள் எடுக்கின்ற மண் அது விவசாயத்திற்கு தான் செல்கிறதா? அல்லது வியாபாரத்திற்கு செல்கிறதா? என்பது யாருக்கு தெரியும்? பட்டா கொடுப்பார்கள் ,சிட்டா கொடுப்பார்கள் எல்லாம் கொடுப்பார்கள் .ஆனால், அந்த மண் எங்கே செல்கிறது? என்பதை யார் சொல்வார்கள்? இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்வார்களா?
மேலும்,விவசாயத்திற்கு இதுவரையில் என்ன தேவை? என்று எந்த ஆட்சியும் விவசாயிகளை கேட்டதில்லை. ஆனால், விவசாயிகளுக்கு மழை நேரத்தில் அவர்களுடைய அறுவடை நெல் பாதுகாக்க கூட வழியில்லாமல் மழையில் சேதம் அடைகிறது. வியாபாரிகளிடம் கடன் வாங்கி, கடன் கட்ட முடியாமல் பாதிக்கு மேல் லாபத்தை அவர்கள் தான் இவர்களை சாப்பிட்டு வருகிறார்கள்.
இப்படி மழையாலோ, இயற்கை சீற்றத்தாலோ, பயிர்களை பூச்சி அடித்தாலோ, தண்ணீர் பற்றாக் குறையால் காய்ந்தாலோ, விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு என்ன நிவாரணம்? என்பதை தமிழக முதல்வர் முதலில் பார்த்திருக்க வேண்டும். அடுத்தது மழை காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க ஏரி, குளம் ,குட்டைகளை (நீர் நிலைகளை) தூர்வாரி பாதுகாக்க வேண்டும் .முதல்வர் ஸ்டாலின்
ஆந்திராவை போய் பாருங்கள், நீர்நிலைகள் எப்படி வைத்திருக்கிறார்கள்? அதையெல்லாம் செய்யாமல் ,கர்நாடக தண்ணீர் திறக்குமா? அல்லது ஆந்திரா தண்ணீர் திறக்குமா? என்று பிச்சை கேட்டுக் தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நீர் நிலைகளில் மண் எடுப்பது? நீர் நிலைகள் என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், உள்ளனர். மேலும், இது உண்மையிலேயே விவசாயிகளுக்காக தான் இந்த மண் எடுக்கிறார்களா? அல்லது மணல் மாபியாக்கள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களா?
இனிமேல் தான் இந்த உண்மை வெளிவரும் என்கிறார்கள்.- சமூக அலுவலர்கள்.