திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக .
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது சிறை தண்டனை அபராதம் விதிக்கப்பட்டது. இதில் நால்வரும் ஜெயலலிதா மரணத்தால் தப்பித்தனர். ஆனால், முதலமைச்சர் மீது அண்ணாமலை சொல்லி உள்ள 200 கோடி ரூபாய் ஊழல் புகார் ஆதாரமில்லாமல் சொல்ல முடியாது. அதை ஆதாரத்துடன் தான் சொல்லி இருப்பார். மேலும், இது பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிபிஐயில் புகார் தெரிவிக்க உள்ளார் .மேலும், இந்த சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி இருக்கும் திமுக இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பது சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்த உண்மை. இதனால் ஆட்சிக்கும் ஆபத்து.
மேலும், இந்த பிரச்சனை அதிமுகவிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, இதைப் பற்றி பல அரசியல் கட்சி தலைவர்கள், விமர்சனம் செய்து வரும்போது, அதில் முன்னாள் அமைச்சர்கள் ஆன கேபி முனுசாமி, ஜெயக்குமார், அதிமுகவிரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களாக வந்து வலையில் விழுந்து விடுவார்கள் போல தெரிகிறது .
அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலில் நிஜ ஹீரோவாகவும், சிங்கம் போலவும் இருந்து வருகிறார் .அவரைப் பற்றி இந்த அரசியல் ஊழல்வாதிகள், ஊழல் கட்சிகள், எல்லாம் தோண்டி பார்த்துவிட்டது .அவரிடம் எதுவும் இல்லை இறுதியாக ரபேல் வாட்ச் போன்று பிடித்துக் கொண்டு பேசினார்கள். மலைக்கும், கடுகுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் இருப்பார்களா? என்பது இவர்களுக்கு தெரியாது. இது சில பத்திரிகைகளுக்கும் பொருந்தும்.
அந்த பத்திரிகைகளும் இதை தான் செய்திகளாக வெளியிட்டது. மேலும்பிஜேபிக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடினால் அது மக்களிடம் எடுபடுமா?
தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் – பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.