கவர்னர் அரசியல்வாதியா? அல்லது ஸ்டாலின் அரசியல்வாதியா? பார்க்க போனால் கவர்னர் தான் முதல் அரசியல்வாதி போல் தெரிகிறது. மேலும் கவர்னரை மிகப்பெரிய அளவில் ஸ்டாலின் உயர்த்தி விட்டார். இதுதான் இவருடைய அரசியலுக்கும், கலைஞர் கருணாநிதியின் அரசியலுக்கும், உள்ள வித்தியாசம் என்று நினைக்கிறேன் .மேலும்,
ஒரு சாதாரண பேச்சு இன்று தமிழகம் முழுதும் சர்ச்சையாக்கி விட்டார்கள். இது திமுகவுக்கு நஷ்டம். பாஜகவிற்கு லாபம். கவர்னர் சொன்னது தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்கலாம் .இது அவருடைய கருத்து. இதற்கு அவர் உத்தரவு போடவில்லை. அல்லது அதை வைத்து அரசியலும் செய்யவில்லை. ஆனால், இந்த பேச்சை அரசியல் செய்து திமுக அரசு, கவர்னரை பெரிய அளவில் உயர்த்தி விட்டது.
மேலும், இதனால், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஒரு இழப்புக்கு முக்கிய காரணம் என்று பேசிக்கொண்டு இருப்பதற்கும், சட்டமன்றத்தில் அவர் அண்ணா பெயரை சொல்லவில்லை, கலைஞர் பெயரை சொல்லவில்லை, அம்பேத்கர் பெயரை சொல்லவில்லை, இதை எல்லாம் விட ,நாங்கள் எழுதிக் கொடுத்ததை அவர் படிக்கவில்லை. மேலும், சட்டமன்ற மார்பை மீறிவிட்டார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது,இதுதான் .தற்போது ,திமுக அரசினுடைய முக்கிய அரசியல். இது ஒரு புறம் இருந்தால்,
ஆளுநர் உரைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, தவறானது என்று துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி பேசியிருக்கிறார். .அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.மேலும்,
இந்த அரசியலுக்கு பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது. அதுதான் தமிழக அரசியலில் உள்ள சூட்சம ரகசியம். இந்த ரகசியம் தமிழ்நாட்டு அரசியல் களத்துக்குள் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர் ரவிக்கும் இருக்கின்ற ஒரு அரசியல் மோதல் ரகசியமாகத்தான் அது இருக்க வேண்டும். மேலும், அதை இவர்கள் எதிர்ப்பதற்காகத்தான், இப்படி மக்களிடம் அரசியல் செய்கிறார்களா? தவிர,இந்த அரசியல் வித்தை, ஒட்டுமொத்த திமுகவின் அடிநாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மேலும், இவர்கள் கொடுக்கின்ற பைல்களை எல்லாம் அவர் கையெழுத்து போடுவதில்லை. திட்டங்களின் செயல்பாடுகள், ஊழல்கள் எல்லாம் வெளிவந்து விடுகிறது. மக்களிடம் இவை எல்லாம் எப்படி வெளியில் வருகிறது? இது தவிர, திமுக எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் விவகாரம், மேலும் இவர்களுடைய குடும்ப சொத்து விவகாரம், ஆகக் கூடிய எது எப்படியோ, இனி திமுக கவர்னர் கையில் மாட்டி இருக்கிறது. இது போன்ற பல கேள்விகள்? முக்கிய கருத்தாக இடம்பெற்று இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கருத்து மோதலின் ரகசியமா?
மேலும், இவை எல்லாம், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி போகிறது? இதுதான், இவர்களுடைய முக்கிய அரசியல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.இல்லையென்றால்,ஒரு சின்ன விஷயத்தை இந்த அளவுக்கு பெரிதுபடுத்தி ,அதை அரசியல் செய்யும் சூட்சமம் ஏன்?மேலும்,
தலைமைக் கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்திக்காவது சட்டம் தெரியாது . அப்படி பேசி இருக்கலாம் .ஆனால் சட்டம் தெரிந்த ,விவரம் தெரிந்த ஆர் எஸ் பாரதி இப்படி பேசலாமா? ஒரு கவர்னரை தரம் தாழ்ந்து பேசுவதும், அவரை இழிவுபடுத்துவதும், திமுக கட்சிக்காரர்களின் அரசியல் வித்தை .இது எதிர்மறையான அரசியலை தான் திமுகவிற்கு ஏற்படுத்துகிறது.
இதை வைத்து இவர்களுடைய பல சமூக ஊடகங்கள், பல ஊடகங்கள் அதை நியாயப்படுத்தினாலும், மக்களிடம் எடுபடாது. தற்போது கூட ஒருவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, கவர்னர் மாளிகை அதிர்ந்து போய்விட்டது.கவர்னர் புலம்புகிறார் என்றெல்லாம் அதில் சொல்லியிருந்தார். நான் பார்த்தவரை கவர்னர் புலம்பவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான் புலம்புகிறார் என்று அவருடைய அரசியல் மேடைப்பேச்சு வெளிப்படுத்துகிறது.
மேலும்,தங்களை அரசியலில் ,ஆட்சி நிர்வாகத்தில்,உத்தமன் என்று மக்களிடம் காட்டுவதற்கும், பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதுதான் திராவிட மாடல். சொல்லப்போனால் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது தான் திராவிட மாடல்.
தவிர, தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றாவது உரு படியாக செய்தது என்ன? எல்லாம் வாய்ச்சவடால் அரசியல் வித்தை, இந்த வித்தையை உங்களுக்கு வேண்டிய தமிழ்நாட்டு ஊடகங்கள், அதை அரசியல் தெரியாத மக்களிடம் மிகைப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கும்.
உண்மை எது? என்பது அரசியல் தெரிந்த மக்களுக்கும், தெரியாத மக்களுக்கும் இன்று ஆன்லைன் மீடியாக்கள், சமூக வலைதளங்கள் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது உடனுக்குடன் செல்போனில் கருத்து பரிமாற்றங்கள், உண்மைகள் உடனுக்குடன் வெளிவந்து விடுகிறது.
மேலும் அரசியல் என்றால் எப்படியும் என் பேசலாம். எப்படியும் நடக்கலாம். ஆட்சி ,அதிகாரம் கையில் வந்து விட்டால், அடுத்தவரை மிரட்டலாம். மிஞ்சிப் போனால், அவர்கள் மீது பொய் வழக்கு போடலாம். தவிர ,மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மிரட்டலாம். இவையெல்லாம் கவர்னரிடம் செய்ய முடியாது. இதை சாதாரண பொது மக்களிடமும், அப்பாவிகளிடமும் தான் காட்ட முடியும். இந்த அரசியல் வித்தைகளை எல்லாம், இளைய தலை முறைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி பட்ட அரசியல் இவர்களுக்கு இன்னும் புரியாமல், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, திமுகவும் ,அதிமுகவும் சினிமாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அரசியல் கட்சிகள் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்று. அதே சினிமா பாணியில் இப்போது தாக்குகிறது பிஜேபி .இதுவாவது இவர்களுக்கு இன்னும் புரியவில்லையா? அதனால், மக்கள் காலத்தின் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.