தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது .அதை நிரூபிக்கும் விதமாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முழுதும் போதைப் பொருள் கடத்தல், ரவுடிசம், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு, விரைவில் மத்திய காவல் படை அனுப்பவும், உளவுத்துறை அனுப்பவும் ,முடிவு செய்துள்ளதாக தகவல்.
மேலும், அவர்கள் மாவட்டம் தோறும் உள்ள காவல் நிலையங்களில் என்னென்ன சம்பவங்கள் நடந்துள்ளது? அதற்கான எஃப் ஐ ஆர், நடவடிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட விஷயங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். தவிர ,ஆளுநர் ஆர் என் ரவியை இந்த வெடிகுண்டு வைத்து திமுக மிரட்ட முடியாது.
ஏனென்றால், அவர் சிபிஐ இயக்குனராக இருந்தவர். தவறான வழியில் செல்லும் இவர்களுடைய அரசியல், இவர்களே ஆபத்தை தேடிக் கொள்ளப் போகிறார்கள். மத்திய அரசு இந்த விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், திமுகவினரின் முக்கிய பள்ளிகள் மீது நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத் துறை சோதனை இவையெல்லாம் தடுத்து நிறுத்தவும் அல்லது எதிர்ப்பு காட்டவும் இப்படி பட்ட செயல்களில் திமுக அரசு ஈடுபட்டால், அதன் பின் விளைவு இவர்களுக்கு எதிராகத்தான் அமையும் .
மேலும் ,திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் பொது மக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் முக்கியமானது. இங்கே ஒரு கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை என்றால்! சாதாரண பொது மக்களுக்கு எப்படி தமிழ்நாட்டில் பாதுகாப்பு இந்த ஆட்சியில் கொடுப்பீர்கள்? என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி?
மேலும் இது தொடர்பாக ,(நேற்று நண்பகல் சுமார் 3 அளவில்) கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அ.மு.ம.க தலைவர் டிடிவி தினகரன், உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவிர,இச்சம்பவத்தில் ஆளுநர் மாளிகைத் தரப்பில் சொல்லப்படும் தகவல்களுக்கும், காவல்துறை தரப்பில் சொல்லப்படும் தகவல்களுக்கும், முரண்பாடாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும்,
போலீஸ் தரப்பில் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, நண்பகல் 3 மணி அளவில் ராஜ் பவன் நுழைவாயில் பகுதியில், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு அடையாளம் தெரியாத நபர் முயற்சித்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை பார்த்து விட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிசர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார்.
அப்போது பிரதான நுழைவாயில் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அந்த நபரை போலீசார் பிடித்த போது, அவர் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசினர். அதிலிருந்து எந்த விதமான தீயும் வரவில்லை .அந்தப் பகுதியில் பேரி கார்டு அருகே அப்படியே உடைந்து கிடந்தது. அவரை பிடித்த போது, மேலும் நான்கு பாட்டில்கள் அவரிடம் இருந்தன .அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர் .
மேலும் இந்த சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும் போது ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பிருந்த பேரி கார்டு முன்பாக விழுந்தது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக 42 வயதுடைய கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் தான் ஜாமினில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இன்று காலை மது அருந்துள்ளார். சம்பவத்தின் போது அவர் நிதானத்தில் இல்லை.
எனவே, அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடித்து அவரிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தோம். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டு களை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றுள்ளனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் சார்பில் இந்த புகார் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகாரில் காவல்துறை அளித்த விளக்கத்திற்கு முரண்பாடான பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் காவல்துறை விளக்கத்திற்கும், ஆளுநர் மாளிகையின் விளக்கத்திற்கும், ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளது.
இங்கு ஆளுநர் மாளிகையோ ,இரண்டு குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறியுள்ளது. ஆனால், காவல்துறை தரப்பில் பெட்ரோல் குண்டு வெடிக்கவே இல்லை என கூறியுள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை தரப்பில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் உயிருக்கு ஆபத்து, அச்சுறுத்தல், என போலீசில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.