தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக ,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்பட காங்கிரஸ், பிஜேபி பல கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களின் சமூக சேவையாளர்கள் போல, ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து ,தங்களை புனிதராக்கிக் கொள்வார்கள்.
இவர்களை புனிதராக்கும் வேலையை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் சில சிறிய பத்திரிகைகள் ,பத்திரிகை என்றால் என்னவென்று தெரியாத மக்களிடம், இது உண்மை என்று நம்பும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, அந்த மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சில விவரமானவர்கள் ,அதைப் பற்றி விமர்சனம் செய்வார்கள்.
மேலும், பத்திரிக்கையில் வேலை செய்யக்கூடிய அந்த நிருபர்களுக்கும், இந்த அரசியல் கட்சிகள் செயல்படுவது சுயநலமா? அல்லது பொது நலமா? மேலும், பத்திரிகை என்பது சுயநலமா ?பொதுநலமா? எதுவும் தெரியாது .ஆனால், பத்திரிகை அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் எல்லாம் தன்னை செய்தியாளர்களாகவும் ,பத்திரிகையாளர்களாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு பத்திரிகைகளின் நிலைமை .
இதே போல் தான் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் அந்த கட்சியின் அடையாளத்தையும், பொறுப்பும் வைத்துக் கொண்டு தன்னை அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய அரசியல் கட்சிகளின் நிலைமை. மேலும் ,இவர்கள் எதற்காக அரசியல் கட்சிக்கு வந்திருக்கிறார்கள் ?இவர்கள் அந்தக் கட்சியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றால் ,கட்சியை பயன்படுத்தி சம்பாதிப்பதற்கும்,
அந்தந்த பகுதிகளில் இவர்கள் செய்யும் அராஜகங்களை சமூக ஆர்வலர்கள் மீதோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மீதோ காவல்துறையில் இந்த கட்சிக்காரர்கள் தன்னுடைய கட்சி செல்வாக்கை பயன்படுத்தியோ அல்லது பணம் கொடுத்தோ அவர்கள் மீது தவறான பொய் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்வது, மிரட்டுவது, அவர்களுக்கு எந்தெந்த வகையில் எப்படிப்பட்ட தொல்லைகளைக் கொடுப்பது, இதற்கெல்லாம் தற்போது அரசியல் கட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது எந்த நோக்கத்திற்கு அரசியல் கட்சிகள் இருக்க வேண்டுமோ ,அதற்கு அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை . பொது விஷயங்களுக்கு பயன்பட வேண்டிய அரசியல் கட்சிகள் ,அவரவர் சொந்த நலனுக்காகவும், அதிகாரிகளை மிரட்டுவதற்காகவும், பொது சொத்துக்களை பட்டா போட்டுக் கொள்வதற்கும், திருடுவதற்கும் அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள். அப்போதுதான் காரில் செல்ல முடியும் .தன்னைப் பார்த்து மக்கள் மதிப்பார்கள். இல்லையென்றால் மதிக்க மாட்டார்கள் .அது மட்டுமல்ல, தன்னுடன் 10 அடியாட்கள் கூட வரும்போதுதான் மக்கள் என்னை பார்த்து பயப்படுவார்கள். இப்படி எல்லாம் இந்த கட்சிக்காரர்களின் நிலைமை. நூற்றுக்கு 90 சதவீத அரசியல் கட்சியினர் இப்படிதான் இருக்கிறார்கள்.
அதனால் ,அரசியல்வாதிகள் மீது இருந்த மதிப்பு மரியாதை சமூகத்தில் குறைந்துவிட்டது .இவர்களின் புகழ் பாட கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும், சில பத்திரிகைகளும் இருப்பதால் ,சமூகத்தில் இவர்களுடைய அராஜகங்கள் அதிகரிக்க முக்கிய காரணம். பத்திரிகை என்றால் எதற்கு என்று அர்த்தம் தெரியாத செய்தியாளர்கள். அவர்களுடைய செய்தியால், சமூகத்துக்கு என்ன பயன்? என்று கூட தெரியாத செய்தியாளர்கள், நானும் செய்தியாளர் என்று அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், எல்லாம் இந்த சமூகத்திற்கும் ,இந்த பத்திரிகை உலகத்திற்கு எந்த பெருமையும் இல்லை. எந்த பயனும் இல்லை.
ஆனால் ,அரசு அங்கீகரித்த அடையாள அட்டை ,பஸ் பாஸ் இது எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் சலுகைகளால், தன்னைப் பெரிய பத்திரிகையாளர்கள் என்ற நினைப்பில் மிதந்து கொண்டிருக்கிறார்கள் .எப்படி அரசியல் கட்சிகளும் ,அரசியல்வாதிகளும் இருக்கிறார்களோ, அதே போல் தான் இந்த பத்திரிகைகள் இருக்கிறது .மேலும், மக்களுக்கு இந்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பத்திரிகைகள், தங்களுடைய கடமை என்ன? என்று தெரியாதவர்கள் கூட பத்திரிகை என்கிறார்கள் .
அதே நிலைமை தான் தற்போதைய காவல்துறையின் நிலைமை . அவர்களுடைய கடமை கட்சிக்காரர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு எடுபிடி வேலை செய்வது காவல்துறையின் கடமை இல்லை. அதை ஜெயலலிதா போன்ற ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள், தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்தாலும் தூக்கி உள்ளே போடு. அப்போது அவர்கள் எல்லாம் பயத்தில் இருந்தார்கள்.
அது உண்மையான அரசியல் கட்சி தலைவருக்குள்ள தகுதி. இப்போது அந்த தகுதி,திறமை ஸ்டாலினுக்கு இல்லை .நிர்வாகமும் தெரியவில்லை. அரசியல் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் எப்படி வைத்து செயல்படுவது? என்பதும் தெரியவில்லை .இந்த நிலைமையில் தான் திமுக அரசும் ,கட்சியும் உள்ளது.
மேலும், இதைப்பற்றி உண்மையை எழுதக்கூடிய ஒரு சில பத்திரிகைகள் தவிர, தமிழ்நாட்டில் லட்சம் பத்திரிகைகள் இருக்கலாம், தொலைக்காட்சிகள் இருக்கலாம் ,அதனால் ,இந்த மக்களுக்கு என்ன பயன்? அரசியல் கட்சி என்றால் எதை செய்தாலும் ,எப்படி பேசினாலும் அதை எல்லாம் மக்களிடம் உண்மை என்று சொல்லி பணம் சம்பாதிக்கும் வேலையா? நாட்டுக்கு அப்படிப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இருப்பதும் வீண்.இந்த சலுகை விளம்பரங்கள், கொடுப்பதும் வீண்.
இன்று கூட எத்தனையோ பேர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். நாங்கள் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை. நாங்கள் இந்த பத்திரிகைகளை வாங்கி படிப்பதே இல்லை .இப்படி எல்லாம் சொல்லுகின்ற மக்களை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். அதனால், நாட்டில் காவல் நிலையங்களில் அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகிறது .
நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள், மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளது .இப்படி ப்பட்ட நிலைமை அதிகரிக்க அரசியல் கட்சிகளின் பின்னணி உள்ளவர்கள் செய்கின்ற அராஜகங்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
மேலும் ,நாட்டில் அரசியல் கட்சிகள் என்பது மேடை போட்டு பேசுவதற்கு, கரை வேஷ்டி கட்டிக்கொண்டு மக்களுக்கு அந்த கட்சி கொடியை காட்டுவதற்கும், பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பதற்கு அல்ல, இதற்குப் பெயரா கட்சி? இதற்கு பெயரா கட்சி தொண்டன்?
மக்கள் நலனுக்காக ஒவ்வொரு கட்சித் தொண்டனும் செய்தது என்ன ?அதற்கு பெயர் தான் கட்சி. அதற்கு அர்த்தம் தெரியாமல் ,தற்போது கட்சி என்பது,பொதுமக்களை ஏமாற்றும் வேலை என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.