
தமிழ்நாட்டில் தற்போது நடை பெற்று வரும், திமுக ஆட்சி !ஏழை ,நடுத்தர மக்களால் ,வாழ்க்கை போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாக தான் இருந்து வருகிறது.மேலும்,

1000, 500 இலவசமாக கொடுத்து அந்த மக்களை ஏதோ இவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றப் போவதாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆயிரத்தில், 500 கொடு என்று இவர்களுடைய கணவன்மார்கள் டாஸ்மாக் கடைகளுக்கு கப்பம் கட்ட பிடுங்க விடுகிறார்களாம். இதுதான் திமுக ஆட்சியின் இலவசம்.மேலும்,

,இந்த திட்டங்கள் ஒன்று கூட ,திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களே இல்லை. எல்லா திட்டங்களும் இவர்களுக்கு வருமானம் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக தான் வகுத்திருக்கிறார்கள்.
தவிர,காண்ட்ராக்ட் ,கமிஷன் இவர்கள் குடும்பத்தினருக்கும்,இவர்கள் கட்சிக்காரர்களுக்கும் ,பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.இது மக்களுக்கான ஆட்சி அல்ல ,.இவர்களுக்கும் ,இவர்கள் கட்சிக்காரர்களுக்குமான ஆட்சி.

இருப்பினும் , இப்படிப்பட்ட ,இந்த ஆட்சியை திமுகவை சார்ந்த பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் மிகப் பிரமாதமாக பாராட்டி வருகிறது.
மேலும், இது எல்லாம் ஒரு பத்திரிக்கையா? இல்லை, ஒரு தொலைக்காட்சியா? என்று தகுதியான பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்கிறது. அவர்களுடைய பாராட்டை யார் பார்ப்பார்கள்? அந்தக் கட்சிக்காரர்களும் ,அவர்களும் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் .

பத்திரிக்கை என்பது ஏதோ ஒரு இவர்களை பற்றி, இல்லாததை இருப்பதாக சொல்வதற்கு தான் பத்திரிக்கை, ஆக்கிவிட்டார்கள். அதற்கு தான் நாங்கள், சலுகை, விளம்பரங்கள் கொடுப்போம் என்றால், அது அந்த பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு இவர்கள் கொடுக்கும் கூலியா? அல்லது அது தான் விளம்பரமா? அப்படி என்றால், இனி நாட்டில்,கட்சி பத்திரிகைகளை தான் நடத்த முடியும்.

அவர்கள் பத்திரிகையாளர்கள் என்று சொல்வதற்கு, ஒருவருக்கு கூட தகுதி கிடையாது. எந்தெந்த கட்சிக்கு ஆதரவாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ ,அந்தந்த கட்சியின் கரை வேஷ்டியை கட்டிக் கொண்டு அந்தந்த பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க செல்லலாம்.

ஏன் ?செய்தி துறையே திமுக கட்சி அலுவலகமாக இருக்கும்போது, இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதற்கெல்லாம் பத்திரிக்கை துறை !மாற்றத்தை எதிர் நோக்கி இருக்கின்ற ஒரு துறை !இல்லையென்றால், மக்களுக்கு உண்மைகள் எது ?என்பது தெரியாமலே இறுதி வரைக்கும் மறைத்து விடுவார்கள். உண்மையை சொல்லுகின்ற பத்திரிகைகள் மக்களுக்கு இல்லாமலே ஆக்கிவிடுவார்கள். இது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. மேலும்,
அதற்கு தகுதியான பத்திரிக்கையாளர்கள், மிக,மிக,குறைவு. தகுதியான நடுநிலையான பத்திரிகைகள், மிக, மிகக் குறைவு. மக்களிடம் உண்மையை சொல்வதற்கு தான் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தேவை. ஆனால், ஆட்சியாளர்களை அரசியல் கட்சியினரை,
கட்சிக்காரனைப் போல் புகழ்வதற்கு பத்திரிக்கைகள் ,தேவையில்லை. தவிர ,திமுகவினரே, அந்த, அந்த, பத்திரிகைகளுக்கு திரை, கதை, வசனம் எழுதிக் கொடுத்து விடுவார்கள்.மேலும்,

இந்த ஆட்சிக்கு மக்களிடம் நல்லவர்களாக ஷோ, காட்ட வேண்டும் .அந்த ஷோவை அவர்கள் நன்றாக காட்டுவார்கள். என்ன சினிமாவில் திரைக்கதை, இங்கே நிஜக் கதை அவ்வளவு தான் வித்தியாசம்.
மேலும், ஐந்து ஆண்டுகளில் நன்றாக உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் சேர்மேன்ங்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எல்லாம் வளமாக ஆக்கிக் கொண்டு, கொழுத்து போய் இருக்கிறார்கள். ஆணவத்தில் அவர்கள்,பத்திரிகைகளையே மதிப்பதில்லை, பத்திரிக்கையாளர்களையே மதிப்பதில்லை.

இவர்களுடைய திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் தான், பத்திரிகை என்று அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்கள். பரவாயில்லை, இருக்கட்டும். காலம் எல்லாவற்றிற்கும் முடிவுரை எழுதும் நேரம் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.
அது இந்த பிரபஞ்சத்தை இயக்கக் கூடிய தெய்வமாக இருக்கக்கூடிய சித்தர்கள், அதை தமிழ்நாட்டிற்கு நிச்சயம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள். இது ஜோசியக்காரர்களால் அவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.

மேலும்,இந்த மறைபொருள் சக்தியை ஏமாற்ற ஒருவனும் பிறக்கவில்லை. இவர்கள் சட்டத்தை ஏமாற்றலாம், மக்களை ஏமாற்றலாம், ஆனால், திமுகவினரால் உங்கள் கில்லாடி திறமை, வேலையெல்லாம் பிரபஞ்சத்திடம் வேலைக்காகாது. அது இந்த முறை உங்களை சரியாக வாட்டி வதைக்கும் .
அது எந்த சூழ்நிலையில் எப்படி தண்டிக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது என்கிறார்கள் சித்தர்கள்.மேலும் இந்த ஆட்சிக்கு (கரண்ட் ) அதாவது மின்சாரம் மூலம் தான் பிரச்சனை ஏற்பட்டு, மக்கள் அதற்கு முடிவுரை எழுதப் போகிறார்களாம் .இப்பொழுது உன்னுடைய பத்திரிக்கையில் நீ எழுது இதை என்று ஒரு சித்தர் எனக்கு சொல்லி இருக்கிறார். மேலும்,

மக்கள் கரண்ட் பிரச்சனையால் அவதிப்படுகின்ற காலம் மிக விரைவில் வரப்போகிறது என்கிறார்.தவிர,அது தான் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதாம் .மக்களிடம். இப்பொழுது தெரிகிறதா? இயற்கையின் பிரபஞ்ச சக்தி எப்படி ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப் போகிறது ?என்பதை ஒரு சித்தர் கோடிட்டு காட்டி இருக்கிறார்.மேலும்,

நானே மிகவும் வேதனைப்பட்டேன். தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு சுயநலமாக இருப்பது, அவர்கள் தலையில் அவர்களே மண்ணள்ளி போட்டுக் கொள்வதற்கு சமம். இதை ஏன் இந்த மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்றால் !இன்னும் யார் வந்தாலும், யார் போனாலும், நாம் இப்படியேதான் இருக்கப் போகிறோம் என்ற ஒரு சுயநலம் இவர்களையே அழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலைமை,
அதிலும் குறிப்பாக கிராமங்களில் இப்படிப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களையும் இந்தப் பிரபஞ்சம், இந்த முறை சரியான சூடு கொடுக்கும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். யார்? யார்? எப்படி பேசினாலும், எப்படி நினைத்தாலும் ,அவர்களுக்கு அவர்கள் பாதையிலே சென்று இந்த பிரபஞ்சம் இவர்களை தண்டிக்கும் என்கிறார்.மேலும்,

ஒரு கேவலமான ஆட்சியை நடத்தினாலும், பணம் கொடுத்தால் மனசாட்சி இல்லாமல் ,வாக்களிப்பதும், மனசாட்சி இல்லாமல் நடப்பதும், மனசாட்சி இல்லாமல் பேசுவதும், இந்த மக்கள் சமூகத்துக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.தவிர,

இந்த மக்கள் அதிகாரம் பத்திரிக்கையை கூலிக்கு நடத்தவில்லை.இது சமூக சிந்தனையோடு ,இந்த சமூகம் நன்மைக்காக போராடுகிற பத்திரிக்கை . அதே பாராட்டும் புகழும் தகுதி இல்லாதவர்களை மறைமுகமாக எழுதுவது பெரிய காரியமா? இல்லை அதுதான் நாட்டில் பெரிய பத்திரிக்கை ?தொலைக்காட்சியா? தகுதி என்பது சுயநலமிக்கதல்ல, அது பொது நலம் மிக்கது.
மேலும், மக்கள்!உண்மையைப் பற்றி சிந்திக்காமல், ,நல்ல விஷயங்களை பற்றி நினைக்காமல், வாழ்கின்ற இந்த மக்களுக்கு இயற்கை எவ்வளவு வலிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது என்பது கூட சிந்திக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது என்ன?

இன்று ஒவ்வொரு நாளும் வெயில் பாட்டி வதைக்கிறது. அதுவாவது இவர்களுக்கு தெரிகிறதா? அது எதனால் ? இயற்கைக்கு மாறாக ஆட்சி, நீதி, தர்மம் ,இது எல்லாம் நடைபெறும் போது, அதற்கு ஆதரவான மக்கள் கை தூக்குகிறார்கள் என்றால் ! இயற்கை வான மண்டலத்தில் கொதிக்கிறது. எல்லோரும் எந்த காலத்திலும், இல்லாத வெயில் என்று பேசுகிறார்களே ஒழிய ,இதைப் பற்றி எதற்காக? என்று அவர்களுக்கு இன்னும் தெரியாது.மேலும்,

நீங்கள் மாறாவிட்டாலும், இயற்கை நிச்சயம் உங்களை இனி மாற்றியே தீரும். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று இந்த பிரபஞ்சம் அவருக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. பார்ப்போம்.தவிர,
இயற்கையை வழி நடத்தும் சித்தர்கள் நல்லபடியாக இந்த நாட்டு மக்களுக்கு அருள் செய்து, நல்லாட்சி கொடுக்கக்கூடிய ஒருவரை நியமித்து ;இறையருள் துணை புரியட்டும். தர்மம் ,நீதி நாட்டில் தழைக்கட்டும்.