
மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல.

இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி ஏன் சிந்திக்கவில்லை? மக்களுடைய வரிப்பணத்தில் தானே, நீங்கள் திட்டங்களை நிறை வேற்றுகிறீர்கள்.

உங்களுடைய கட்சி பணமோ இல்லை, உங்கள் சொந்த பணமுமோ இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக உங்களுடைய பெயர்களையும் ,கட்சித் தலைவர்கள் பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள்? என்று உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஏன் கேட்கவில்லை? மேலும்,நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது. அங்கே மக்கள் சார்ந்த பிரச்சனைகள் தான் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆனால், அரசியல் கட்சி சார்ந்த பிரச்சனைகளையும், அரசியலாகவே அதற்கு தீர்ப்பளிக்கிறார்கள். அதிலும், உச்சநீதிமன்றம் ஒரு படி மேலே போய் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு 10 லட்சம் அபராதம் கூட விதித்து விட்டது. உச்சநீதிமன்றம் தங்கள் இஷ்டத்திற்கு தீர்ப்பளிக்கிறார்களா?
மேலும், இந்தத் தீர்ப்பின் நோக்கம், நீதிமன்றத்தில் கூட அரசியல் உள்நோக்கமா? நீங்கள் நடுநிலையான தீர்ப்பு கொடுக்காமல், ஒரு தலைப் பட்சமான தீர்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? தவிர, ஒன்று தள்ளுபடி செய்யுங்கள். உங்களுடைய அரசியல் சண்டையை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்று சொல்லி விட்டு ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு கொடுப்பதன் ரகசியம் என்ன? பொதுமக்கள் கேள்வி ? மேலும்,

இரண்டுமே அரசியல் கட்சிகள் !இதற்குள் ஒருவர் தொடுத்த வழக்குக்கு அபராதம் விதிப்பது, இது அரசியல் உள்நோக்கம் இல்லையா? தவிர,நீதிமன்றம் ! தீர்ப்புக்களை ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். இது அவசரப்பட்டு தீர்ப்பளித்த தீர்ப்பாகத்தான் தெரிகிறது.
அதனால் ,இந்த தீர்ப்புக்கு பொதுமக்களிடம் விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, நீதிபதிகள் நடுநிலை என்பதை மறந்து விட்டார்கள். இனி வருங்காலத்திலும் ,இப்படிப்பட்ட தீர்ப்புகள் நாட்டு மக்களுக்கு எதிரானது.