சினிமா நடிகர்கள் சினிமாவில் நடித்து மக்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்கும், நல்ல விஷயங்களை சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து நடிக்க வேண்டாம் .இங்கேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், மேலும் பல நடிகர்கள் தேவையில்லை. மக்களுக்கு தேவை! செயல்படக்கூடிய நேர்மையான அரசியல் கட்சியினர் தான் தேவை.
ஆனால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேச்சுப்போட்டி நடத்தும் பேட்டியாளர்கள் தேவையில்லை .மக்களுக்கு தேவை செயல்பாடு உடைய அரசியல் கட்சிகள், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள், மக்கள் நலனில் அக்கரை காட்டும் அரசியல் கட்சிகள், நானும் சமூக அக்கறை உள்ளவன் தான் என்று ஓட்டுக்காக மக்களிடம் கவர்ச்சியாக பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், ஜாதிக்கும், மதத்திற்கும் விசுவாசிகளாக இருப்பவர்கள் போல் காட்டிக் கொள்வதில் இவர்களை மிஞ்ச ஆட்களே கிடையாது.
இதை ஏன் மக்களுக்கு மீண்டும், மீண்டும் இந்த விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? என்றால், இன்று போலி அரசியல் கட்சிகளும், போலி அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பில்லாமல் உயர்வு இல்லை. உழைப்பில்லாமல் அரசியல் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை விட, அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது .மக்களின் நன்மை விட ,இவர்களின் நன்மையே முக்கிய நோக்கமாக உள்ளது.
அதனால் ,இன்றைய அரசியல் என்பதுஉழைக்காமல் வாயிலே, பேப்பரிலே, தொலைக்காட்சிகளிலே பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது பேசிவிட்டு போனாலோ, அல்லது சமூக ஊடகங்களில் வீடியோ போட்டுக் கொண்டிருந்தாலோ, எந்த நன்மையும் கிடைக்காது. அதுதான் இன்றைய அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். உருப்படியாக மக்களின் கோரிக்கைகள் என்ன? அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன? இதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசியல் என்பது இன்று கார்ப்பரேட் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் பேசிக் கொண்டிருப்பது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கம் தேவை.
ஆனால், அதிகபட்சமாக இவர்கள் மக்களின் குறைகள் என்ன? அவர்களுடைய தேவைகள் என்ன? அவர்களுடைய கோரிக்கைகள் என்ன? இதைப்பற்றி செவி சாய்க்காத அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டில் ஆட்சி செய்து பலன் இல்லை. அதிகாரிகள் இதை ஆட்சியாளர்களிடம் பேசாமல் ,சம்பளத்திற்கு அதாவது கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இன்று பல கோடிகளை பார்ப்பது தான் லட்சியமாக இருக்கிறது. மக்களுக்கு நேர்மையான ஆட்சியை கொடுப்பது லட்சியமாக இல்லை. இவர்கள் லட்சத்திற்கும், கோடிக்கும் தான் திட்டம் போடுகிறார்கள்.
இதிலிருந்து அரசியல் மாற்றத்தை மக்கள்தான் உருவாக்க வேண்டும். மக்கள் செய்யும் தவறு தான். இது போன்ற தவறான அரசியல் கட்சிகள், கட்சி நிர்வாகிகள் உங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்ற போராட்டத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சினிமா நடிகர்கள் வந்து, இதை என்ன சரி செய்யப் போகிறார்கள்? குறிப்பாக தற்போது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் வந்து, என்ன சரி செய்து விடப் போகிறார்? சினிமா நடிகர்களால் இதை சரி செய்ய முடியுமா? இதை சரி செய்ய வேண்டுமென்றால், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் தான் முடியும். அவர்களுக்கு தான் இந்த நிர்வாக சீர்திருத்தத்தை சரி செய்யும் விஷயம் தெரிந்திருக்கும் .ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இங்கே அரசியலும் நடிப்பு, சினிமாவும் நடிப்பு, மக்களும் அதற்கேற்றார் போல் நடித்துக் கொண்டிருந்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் .பொருளாதார சிக்கல் ஏற்படும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டால், ஒவ்வொன்றாக பிரச்சனைகள் அந்த நாட்டில் தலை தூக்கும். அது உணவு பஞ்சம் வரை கொண்டு செல்லும். அதையெல்லாம் சரி செய்ய நடிகர்களால் முடியாது. மேலும், பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை உழைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அவர் ஒருவரால் மட்டும் முடியாது. மற்ற நிர்வாகிகளும் உழைக்க வேண்டும். உழைக்காமல் தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு நடிப்புதான் தொழில். இங்கே நடிப்பே தொழிலாக தான் இருக்கிறது. அதனால், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று இங்கே நடிக்க வந்து விடாதீர்கள். மக்கள் இன்னும் பல கொடுமைகளை அனுபவிப்பார்கள்.
சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் படிப்பறிவு இல்லாமல், ஒரு கிராமத்தில் ஒருவர் படித்து இருந்தாலே மிகப்பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் நேர்மையான, நிம்மதியான வாழ்க்கையும் ,அரசியலும் இருந்தது. இப்போது படித்து பட்டங்களை போட்டுக் கொண்டு, இப்போது மீடியாக்களில், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவ்வளவு மீடியாக்கள் இல்லை .ஆனால் ,நேர்மையான அரசியல் இருந்தது .இன்று மீடியாக்கள் இருந்தும், அதற்கான தகுதி இல்லாத மீடியாக்களாக தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டில் தகுதியான பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் குறைந்துவிட்டனர்.இது கூட தெரியாத செய்தி துறை அதிகாரிகள் இருப்பதுதான் மிகப் பெரிய கேவலம்.
இந்த அமைச்சர்களுக்கு நான் சொன்னது தான் சட்டம் .மக்கள் சொல்வது சட்டம் இல்லை என்ற நினைப்பில் இருக்கிறார்கள். ஆனால்,அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? என்பதை ஒருநாளும் சிந்திப்பதில்லை. பணத்தைக் கொடுத்து, காலில் விழுந்து, 100 முறை கையெடுத்து கும்பிட்டு, அம்மா, ஐயா ,அப்பா என்று கட்சியினருடன் வந்து கெஞ்சியதையெல்லாம் வெற்றி பெற்றவுடன் மறந்து விடுகிறார்கள்.
அதனால், அரசியல் கட்சியினரை திருத்த முடியாது. மக்கள் தான் அவர்களை சிந்தித்து திருத்த வேண்டும். இனி மக்கள் சிந்திக்காமல் வாழ்ந்தால்! உங்கள் வாழ்க்கை மிகப் பெரிய போராட்டம் என்பதை ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ளுங்கள் .