தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடித்த அதிமுக, திமுக அரசியல் கட்சிகளுக்கு டாப் ஃபைட் கொடுத்து, அரசியல் நடத்தி வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்த இரண்டு கட்சிகளும் எதிர்த்துஇன்று தமிழ்நாட்டில் அரசியல் செய்வது என்பது சாதாரண அரசியல் கட்சிகளால் முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் இன்று வளர்ந்த பெரிய கட்சியாகவும், ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ளார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது தமிழ்நாட்டில் சாதாரண காரியம் அல்ல. காரணம் தமிழ்நாட்டு மக்களுக்கு 70 % அரசியல் தெரியாது. இவர்களுடைய நடிப்பு அரசியலை தான் இதுவரை நம்பி ஏமாந்து ,அவர்களை ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் டீம் இரண்டு கட்சிகளுக்கும் உள்ளது. சில சமயத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். அதைப் பற்றி பாமர மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை .மேலும், பிஜேபி யில் மக்களை அணுகி, அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்து ,அதற்கு தீர்வு காண அக்கட்சியின் நிர்வாகிகள் அதிகளவில் இல்லை. தவிர, கிராமங்கள், நகரங்களில் நடக்கின்ற சமூகப் பிரச்சனைகள், ஊழல் பிரச்சனைகள் பற்றி போராட்டம் நடத்தி, மக்களிடம் கொண்டு செல்ல வலுவான போராளிகள் மிகவும் குறைவு.
இந்த நிலையிலும் கூட அண்ணாமலையை எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் விமர்சனம் செய்கிறது. கட்சிக்குள்ளே இருந்து கொண்டு அவருக்கு என்னென்ன உள்ளடி வேலைகள் செய்ய முடியுமோ, அத்தனையும் மறைமுகமாக செய்யும் சில சீனியர்கள். இவர்கள் சீனியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதுவரை தமிழ்நாட்டில், பாஜக இதுவரை எங்கே? என்ற கேள்வியில் தான் இருந்தது .அண்ணாமலை வந்த பிறகு பாஜக என்று எதிர்க்கட்சி அளவிற்கு வளர்ந்துள்ளது. அதையாவது இன்று பிராமண சமூகமும், நடிகர் எஸ் வி சேகரும் புரிந்து கொள்வார்களா ?
மேலும், இவர்களுக்கு இன்றைய பத்திரிகையில் உள்ள பல நிருபர்களுக்கு அடையாள அட்டை தான் நிருபர் .ஆனால், வேலை செய்ய வேண்டி இல்லை. அதற்காக உழைக்க வேண்டியதில்லை. அந்த அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, தானும் நிருபர் என்று கூறிக் கொள்ளும் வரிசையில் தான் இன்றைய அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் பாஜக தலைவர் அண்ணாமலை, பல அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஊழல் கூட்டங்கள் அண்ணாமலையை எத்தனை விமர்சனங்கள் செய்வார்கள்? ஒரு நேர்மையான முறையில், உழைத்து ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ,கஷ்டப்பட்டு உழைப்பால் முன்னேறி வந்த ஒருவரை ,ஊரை ஏமாற்றும் கூட்டம் எப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறது? நாட்டில் இன்று ஏமாற்றுபவர்கள் புத்திசாலியாகவும், உழைப்பவர்கள் முட்டாள்களாகவும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது, இன்றைய பத்திரிகை தொலைக்காட்சிகள்.
அதிலும் எல்லாம் தெரிந்த மேதாவி போல் இதில் திமுக I T டீம், காங்கிரஸ் கட்சி, திருமாவளவன் ,சீமான் இவர்களெல்லாம் எவ்வளவு கடுமையான விமர்சனங்களை, கேவலமான விமர்சனங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாங்கி ,இவர்களுக்கு டப் பைட் கொடுத்து அரசியல் செய்வது சாதாரண காரியம் அல்ல. இந்த நிலையில் சினிமா நடிகரும், நாடக நடிகரும் ஆன எஸ் வி சேகர் தனது பேட்டியில் அண்ணாமலை, இதற்கு முன்னால் எல்லோருக்கும் சல்யூட் அளித்து கொண்டிருந்தார் என்று விமர்சனம் செய்கிறார். காவல்துறையில் அவருடைய பணி அப்படி இருந்தது? அதில் என்ன தவறு? அவர் அந்தப் பணியில் நேர்மையானவராக இருந்தாரா? அல்லது ஊழல் செய்து கோடிகளை சம்பாதித்தார? அதுதான் பேச வேண்டும். ஆனால் அவர் சல்யூட் அடித்ததை பற்றி பேசுவது முட்டாள் தனமான பேச்சு. அது மட்டுமல்ல அவரை பிராமணர்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார். இப்படிப்பட்ட விமர்சனம் மிகவும் தவறான ஒன்று.
மேலும், பிராமண சமுதாயத்திற்கு தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்ற சமூகங்களுக்கு எதுவும் தெரியாது என்ற ஒரு கருத்து, ஆதியிலிருந்து இருந்து இன்று வரை அது இருந்து வருகிறது .இவர்களுக்கு தெரியவில்லை என்றாலும், அதை சமாளிப்பார்கள் .மற்ற சமூகத்திற்கு அதை சமாளிக்க தெரியாது.
மேலும் எஸ் வி சேகர் சினிமாவிலும், நாடகத்திலும் நடித்துக் கொண்டு இருப்பவர், இவருக்கு மட்டும் என்ன அரசியல் தெரியும்? ஜெயலலிதாவால் அரசியலில் எம்எல்ஏ ஆக ஆனவர். மேலும், ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறை சென்றவர். இதில் என்ன மறைக்க வேண்டிய பிரச்சனை இருக்கிறது? இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை .இதை எப்படி அண்ணாமலை பேசலாம்?
மேலும், எல்லா மக்களுக்கு அரசியல் தெரியாத முட்டாள்களாக இருக்கிறார்களா? ஆனால், இவர்கள் எல்லாருக்கும் பேசுவது தான் அரசியல் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த அரசியல் ஆட்டோ ஓட்டுபவனுக்கு கூட பேச தெரியும். அரசியலில் மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை யாருமே பேசவில்லை. ஆனால், மேடைப்பேச்சு, மீடியா பேச்சு, சோசியல் மீடியா பேச்சு, இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் ஆகிவிட்டது. மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை, இவர்கள் எல்லாம் உழைக்காமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அன்றைய அரசியலில் பேசத் தெரியாது. சொல்லப்போனால் ,பொய் பேசவே தெரியாது. இப்போது பொய்தான் பேச தெரியும். ஆனால், உண்மையைப் பற்றி பேசத் தெரியாது .அதை அரசியல் கட்சியினர் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், ஊடகங்களும் உண்மையைப் பற்றி எழுதத் தெரியாது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் இருந்து வருகிறது. இது பற்றி எதுவும் தெரியாத மக்கள், தேர்தல் என்றால் நமக்கு பணம் வரும் .பொருள் வரும். இலவசம் வரும். இதை எதிர்பார்த்து இருக்கும் மக்கள் ஒரு புறம் என்றால், குடிகாரர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களுக்கு குறைவிருக்காது. பிரியாணிக்கு குறை இருக்காது. இதுதான் இந்த மக்களின் தேவை.
இதையெல்லாம் இன்று வரை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. இதன் பின் விளைவு நாட்டில் படித்த இளைஞர்கள், உழைக்கும் வர்க்கம் முன்னேற முடியாமல் தத்தளித்து, தவித்துக் கொண்டிருக்கிறது. சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள், ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்க்கையோடு, போராட வேண்டி இருக்கிறது .
ஆனால், எந்த போராட்டமும் இல்லாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சியில் கொடியைப் பிடித்துக் கொண்டு, தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய அரசியல்.
அன்றைய அரசியல் மக்களுக்கு, பொது நல அரசியலாக இருந்தது .இன்றைய அரசியல், மக்களின் வரிப்பணத்தை சுரண்டுவதற்கும், சட்டப்படி கொள்ளை அடிப்பதற்கும் ,சட்டப்படி அது சரியானது என்று மக்களிடம் வாதம் செய்வதற்கும், ஊடகங்கள் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றன. இது அரசியல் அல்ல, இது அரசியலின் ஏமாற்று வேலை. சொல்லப்போனால் ஒன்றுமே தெரியாத ஒரு முட்டாளை ஏமாற்றுவது தான் இன்றைய அரசியலா ? தமிழ்நாட்டில் நடுத்தர மக்களின் பலவீனத்தையும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் பலவீனத்தையும் தெரிந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் என்பது மக்களின் பலவீனத்தை வைத்து அரசியல் செய்வது ஏமாற்று வேலை. மேலும், அரசியலில் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்களே அதை ஒழுங்கான முறையில் செய்யாமல், சுயநலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர்கள் அரசியல் செய்ய வந்தால் அதுவும் ஒரு ஏமாற்று வேலையாக தான் இருக்கும். 1962 க்கு முன் உள்ள மக்கள், அரசியல்வாதிகள் எப்படி? தமிழ்நாட்டு அரசியல் எப்படி இருந்தது? என்பதை பற்றி அரசியல் வரலாற்றை ஆய்வு செய்து படித்துப் பார்த்தால், இந்த உண்மையை தமிழக மக்கள் புரிந்து கொள்ளலாம்.
அப்போதைய அரசியல்வாதிகள் கௌரவத்திற்காக வந்தார்கள். அதற்காக உழைத்தார்கள். உண்மைக்காகவும், தான் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்தார்கள். இப்போதுள்ள அரசியல் கட்சியினர், மக்களை எப்படி ஏமாற்றி பதவிக்கு வருவது? சட்டத்தை எப்படி ஏமாற்றி அதில் எத்தனை கோடி சம்பாதிக்கலாம்? இந்த கனவுகளோடு தான் இருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் தமிழ்நாட்டின் அரசியலை படிக்காமல், அரசியல் கட்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், அரசியல் கட்சியினரை பற்றி தெரிந்து கொள்ளாமல் ,ஊழல்வாதிகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், ஊழலால் என்னென்ன பாதிப்பு மக்களுக்கு ஏற்படுகிறது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளாமல்,
உங்களுக்கான அரசியலும், வருங்கால இளைய தலைமுறைகளும், அவர்களுக்கான அரசியலும், தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியாது. அரசியல் ஒழுங்கான முறையில் மக்களுக்காக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும், மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக பொருளாதாரத்தில் உயர்வாக வளர முடியாது. இனியாவது, அரசியல் என்றால் என்ன? என்பதை தெரியாதவர்களும் புரிந்து கொள்ளுங்கள்.