செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் ரமேஷ்ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரிநகரைச் சேர்ந்த ரமேஷ்ராஜா என தெரிந்தது.
இவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ரமேஷ்ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்த போது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது