திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான பாதுகாப்பு அறை முறையாக பராமரிக்கப்படவில்லை, மேலும் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என நிறுவனத்திற்கு பிரிவு 55 படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அபராதம் ரூ. 3000 விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தில் மூலம் தயார் செய்யப்படும் அவுல் மாதிரிக்காக எடுத்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.