தினமலரில் வந்த செய்தி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது. இந்த செய்தி உண்மையிலே தவறுதான். படிக்கின்ற மாணவர்களை கேவலப்படுத்தும் விதமாக ஒரு புறம் இருக்கிறது. மற்றொருபுறம், மனித குலத்தையே கேவலப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது. இது சரி என்று நான் சொல்லவில்லை .
ஆனால், இதை போட்டவர் ஒரு செய்தியாளராக இருக்கணும். அல்லது அந்த பத்திரிகையின் ஆசிரியராக இருக்கணும். இவர்கள் இருவர் தான் அதற்கு பொறுப்பு. ஆனால், ஒட்டுமொத்த பிராமணர்கள் சமுதாயத்தை வைத்து திமுக அரசியல் செய்வது, அல்லது தினமலர் பத்திரிகை செய்தியை வைத்து தமிழக மக்களிடம் அனுதாபத்தை எதிர்பார்ப்பது இவையெல்லாம் தேவையற்ற வேலை.
மேலும் ,தினமலர் பத்திரிகை இதற்கு மறுப்பு செய்தி போடுவதாகவோ தெரிவிக்கலாம். அல்லது போட்டு விடலாம். இருப்பினும், பத்திரிக்கை என்பது சில நேரங்களில் எப்படிப்பட்டவர்களுக்கும் ஒரு சில தவறுகள் ஏற்படத்தான் செய்கிறது .அதை சரி செய்து கொள்வது நல்லது. மேலும், பத்திரிகையின் சுதந்திரத்தில் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்து வருகிறது. அது மனித வாழ்வியலுக்கு எதிரான ஒன்று .
சில நேரங்களில் உண்மையை வெளிப்படுத்தினால்தான், என்ன பிரச்சனை நடக்கிறது? என்பது ஆட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிய வரும். அதனால், பத்திரிகையின் சுதந்திரத்தில் அச்சுறுத்தல் இருப்பது இந்த தேசத்திற்கு எதிரானது.