திமுக அரசு ,தற்போதைய மாவட்ட ஆட்சியர்களின் ஆட்சி மாற்றம், மக்கள் நலனில் அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றி இருக்கிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. மக்களுக்கான பணியை மனசாட்சியுடன் செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன்? அவர்களை பணியிட மாற்றம் திமுக அரசு செய்தது? என்பது தான் பொதுமக்களின் முக்கிய கேள்வி?
மேலும், இடமாற்றம் ஒரு சிலருக்கு என்றால், மற்றவர்களுக்கு அந்த இடம் மற்றும் கூட இல்லாமலும், டெம்மியான போஸ்டிங் போட்டு வைத்திருப்பதாக தகவல். இது என்? நேர்மையான அதிகாரிகளை அலட்சியம் செய்யும்போதே திமுக அரசு மக்களுக்காக இல்லை என்பதை இந்த சம்பவம் ஊர்ஜிதப்படுத்துகிறது.
தவிர, ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் கட்சியினரும், அமைச்சர்களும் சம்பாதிக்க புரோக்கர் வேலைக்கு அவர்கள் வரவில்லை. அவர்கள் வந்தது மக்கள் நல பணிக்காக வந்திருக்கிறார்கள். அதை ஒழுங்காக செயல்படுத்திக் கொள்ள திமுக அரசுக்கு அருகதை இல்லை என்பதுதான் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
இதற்கு உதாரணமாக திருப்பூர் மாவட்டத்தின் ஆட்சியர் சு.வினீத் இவர் நேர்மையாக செயல்பட்டு, கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை விடுவித்துள்ளார். அதற்கு பழிவாங்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு இடையில் ஏற்படப்பட்ட அரசியல் நடந்திருக்கும் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இவர்கள் சொல்வதை கேட்டு எடுப்பு வேலை செய்யக்கூடிய மாவட்ட ஆட்சியர்களை பணியமர்த்திக் கொண்டு, கல்குவாரி, மணல் குவாரி, சடு மண் குவாரி, அனைத்திலும் பணம் பார்க்கும் வேலைக்கு தகுதியானவர்கள் யார்? என்று பார்த்து தான் நியமிக்கிறார்கள் என்கிறது அரசியல் வட்டாரம். மேலும் பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், இவ்வளவும் மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கும், ஒரு மாவட்ட ஆட்சியரை பழிவாங்கும் விதமாக அவரை மாற்றி இருப்பது அப்பகுதி மக்களிடையே அரசின் மீது ஒரு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் கூறுவது சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்ட கனிம வளத்துறை அதிகாரி வள்ளலை பணியிலிருந்து விடுவித்த ஆட்சியரின் நடவடிக்கைக்கு நாங்கள் பாராட்டு தெரிவித்து வரவேற்கிறோம் என்கிறார்கள் . அப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியரை திமுக அரசு ஏன் மாற்ற வேண்டும்? என்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.
இது தவிர, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி ,எந்த கெட்ட பேரும் எடுக்கவில்லை. மக்களுக்கான வேலைகளை செய்து வந்தார். அவரையும் மாற்றி விட்டார்கள். ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து பஞ்சாயத்து ஊழல்களை நன்றாக செய்யுங்கள் என்று ஊக்கம் கொடுப்பதற்காகவா? பொது மக்களின் புகார்கள் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள், அரசியல் பின்புலத்தில் இருந்து கொண்டு வேலை செய்வதை விட அவர்கள் ராஜினாமா செய்து விட்டு போகலாம்.
ஏனென்றால் ,அவர்கள் சம்பளம் வாங்குவது ,சலுகைகளை அனுபவிப்பது எல்லாம் மக்களுடைய வரி பணம் .அரசியல் கட்சிகாரர்களின் கட்சி பணத்தில் சம்பளம் வாங்கவில்லை. ஆட்சியாளர்களின் வீட்டிலிருந்து சம்பளம் வாங்கவில்லை. அதனால், நீதிமன்றம் இதை புரிந்து கொண்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை செய்யாத பகுதிகளில் வருகின்ற புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் நீதிமன்றங்களுக்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை.
எனவே, திமுக அரசு சட்டத்தை மதிக்காமல், சட்டத்தை தன் பாக்கெட் போட்டுக்கொண்டு செயல்படும் அரசாக இருந்து வருகிறது .இதற்கு நீதிமன்றம் தான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.