மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க ஒரு சிறப்பான சூழ்நிலையை அதிமுக ,திமுக உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை சரியான முறையில் பிஜேபி பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
மேலும், திமுக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் எப்படி அரசியல் செய்ததோ, அதே சூழ்நிலையில் தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறது அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் அப்போது வாய் பேச்சில் பேசியதை இப்போது திமுக ஐடி விங் செய்துக் கொண்டிருக்கிறது. அப்படிப் பேசிய திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி இப்போது பேசத் தெரியாமல் பேசி, சட்ட சிக்கலில் மாட்டி கை செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும், இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் அரசியல் போட்டி உருவாகியுள்ளது. இது அரசியல் கால மாற்றத்தின் சூழ்நிலை என்று சொல்ல வேண்டும். அது திமுகவின் நிர்வாக திறமையின்மை மற்றொருபுறம் வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக மக்களுக்கு கொடுக்க தவறிவிட்டது.
தவிர, தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் உருப்படியாக செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கோயில் சொத்துக்கள் ஆக்கிரிமிப்பு, அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், எம்எல்ஏக்களின் ஊழல் விவரங்கள், இதைவிட கொடுமை முதலமைச்சர் மீதே சவுக்கு சங்கர் கொடுத்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின்
ஊழல் புகார்.
இது தவிர,சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, டிடிசிபி அலுவலக அப்ரூவல் லஞ்ச லாவண்யங்களால் மக்கள் படும் அவஸ்தை, பஞ்சாயத்து ஊழல், மோசடிகள், என எதுவும் ஒரு சரியான நிர்வாக செயல்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.மேலும்,இவையெல்லாம் இன்று பிஜேபிக்கு ஒரு சாதகமான ஒரு அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், இந்த ஊழல் புகாரை பற்றி பேச எதிர் கட்சியான அதிமுகவிற்கு தகுதி இல்லை. அப்படி பேசினால், உடனடியாக திமுக நிர்வாகிகளோ அல்லது கூட்டணி அரசியல் கட்சிகளும் வைத்து அவர்களை பழிவாங்கும் அளவிற்கு பேசி விடுவார்கள். அதனால் அதிமுக வாய் திறக்கவில்லை. அது மட்டுமல்ல அவர்களுடைய சொத்து குவிப்பு வழக்குகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இதை நன்கு உணர்ந்து செயல்படுகிறது அதிமுக.
மேலும் அரசியல் களத்தில் தங்களுடைய கட்சியை தக்க வைத்துக் கொண்டு அரசியல் எப்படி செய்யலாம்? என்பதுதான் அதிமுகவின் நிலை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கும்போது திமுக சட்டமன்றத்தில் கவர்னரை அவமதித்த
விவகாரம், ரௌடிசத்தின் எதிரொலியான கருத்து மக்கள் மத்தியில் திமுகவிற்கு உருவாக்கியுள்ளது. தவிர, தற்போது திமுக நல்லவர்கள் வேஷம் போட்டு நடித்தாலும், மக்களிடம் அது எப்படி சரி செய்யப் போகிறார்கள்? மேலும், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வியுகம் வகுத்து செயல்படுவார், என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, திமுகவிற்கு இனி அரசியல் களம் போராட்டம் தான். கடந்த காலங்களில் பதவியில் எப்படி எல்லாம் நாம் அனுபவித்தோம். நாம் வைத்தது தான் சட்டம். நம் பாக்கெட்டில் சட்டம். இப்போது அதை வெளிப்படையாக செய்ய முடியாமல், மறைந்து, ஒளிந்து செய்ய வேண்டிய நிலைக்கு இவர்களுடைய அரசியல் சென்று விட்டது.
மக்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? இது எல்லாம் பற்றி உளவுத்துறை அவர்களுக்கு சொல்கிறதா? என்பது தெரியவில்லை. அதனால், மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அதை சரி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் திமுக அரசு, இனி பின்னோக்கி செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.