செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram
அரசியல் கட்சிகள் என்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே என்று தான் ஒரு தவறான நினைப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் வந்த செய்தியிலும், அதை தான் குறிப்பிட்டேன். இவர்களை எல்லாம் உட்கார வைத்து பாடம் எடுக்க வேண்டும். அரசியல் என்றால் என்ன? எதற்கு அரசியல் கட்சி? கொலை மிரட்டல், ரவுடிசம் இவர்களுக்கு தான் கட்சி தேவையா? இப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசியல் கட்சிகளில் பதவி, பொறுப்பு கொடுப்பார்களா?
மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை இது போன்ற கட்சி ரவுடிகள், காசு கொடுத்து காலில் விழுந்து ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து விடுகிறார்கள். இவருக்கு இவருடைய கட்சித் தலைவரும், முதலமைச்சர்ருமான மு க ஸ்டாலின் என்ன சட்டம் போட்டு இருக்கிறார்? என்று கூட தெரியவில்லை. அவர் போட்ட சட்டம் மக்கள் விவசாய பயன்பாட்டிற்கு ஏரிகளில் வண்டல் மண் எடுக்கலாம். அவ்வாறு போடப்பட்ட சட்டத்தில் தான் கொக்கலாடி கிராமத்தில் உள்ள சித்தேரியில் விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க முயற்சித்த போது, சில விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய துணைப் பொதுச் செயலாளர் முருகானந்தம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மேலும்,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்கலாடி ஊராட்சி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சித்தேரி ஏரி உள்ளது. அப்பகுதி விவசாயிகளுக்கும் ,பொது மக்களுக்கும் விவசாயத்திற்கும் ,குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் நிலையில் சித்தேரி ஏரியை நான்கு புற கரைகளை அமைத்து ஏரியிலிருந்து மண் எடுத்து விவசாய நிலத்தில் கொட்டுவதற்காக விவசாயிகள் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி அனுமதி பெற்றனர்.
அனுமதி வழங்கியும் மண்ணெடுக்க முயன்ற பொழுது கொக்காலடி பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சேது. முருகானந்தம் என்பவர் விவசாயிகளை மண்ணெடுக்க விடாமல் தன் அதிகார பலத்தை பயன்படுத்தி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்பகுதி விவசாயிகள் சித்தேரி ஏரியில் இருந்து மண்ணெடுப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி வழங்கியும் திமுக பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததோடு, விவசாயிகளிடம் டிராக்டர் லோடு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் தரவேண்டும் என பேரம் பேசுவதால் மண்ணெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு துறை அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சித்தேரி ஏரியில் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கியும், மண் எடுப்பதற்கான அனுமதியும் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.