ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram

திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தசரின் காணவில்லை என்று அப்பகுதியில் இந்த பேனரை வைத்துள்ளனர் இது ஏன் எதற்காக இதன் அரசியல் உள்நோக்கம் என்ன ? பாத்திமா தஸ்ரின் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார் மேலும்
இந்த பேனர் வைத்த சம்பவம் பொதுமக்களிடையே இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய கவுன்சிலர் சிங்கப்பெண்ணே எங்கே? மக்களின் பணியை மக்களே செய்வதற்கு எதற்கு கவுன்சிலர்? ஐ.டி.,யில் வேலை செய்யும் உங்களுக்கு எதற்கு கவுன்சிலர் பதவி?’ என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.ஐ.டி.,யில் வேலை செய்யும் உங்களுக்கு எதற்கு கவுன்சிலர் பதவி?’ என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.மேலும் இது பற்றி கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின் தந்தை முஸ்தபா கூறியதாவது:
பாத்திமா தஸ்ரின் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதனால், வெளியே வருவதில்லை. வார்டுக்குள் அனைத்து பணிகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் செய்து வருகின்றனர். மக்கள் தரப்பில் எவ்வித அதிருப்தியும் இல்லை.மேலும்,
திட்டமிட்டு பொய்யாக பேனரை வைத்து பெயரை கெடுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மகளுக்கு பதிலாக, வார்டுக்குள் அனைத்து பகுதிகளையும் சென்று பார்வையிட்டு, மக்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு கண்டுவருகிறேன் .இவ்வாறு, அவர் கூறினார்.