திருவள்ளூர் மாவட்டத்தில்! தலித் சமுதாயத்திற்கு அதிகாரிகளை மிரட்ட வன்கொடுமை சட்டம் அதிகம் பயன்படுகிறதா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு அதிர்ச்சி.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வன்கொடுமை சட்டம் எதற்காக போடப்பட்டது? என்று கூட தெரியாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது என்றால் அது பத்திரிக்கை உலகத்திற்கு ஒரு கேவலம் தான்.

நாட்டில் இப்படி எல்லாம் பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பத்திரிக்கை துறை மிக கேவலமாக தெரிகிறது. அது பத்திரிக்கையாக வெளிவருகிறதா? அல்லது வாட்ஸ் அப்பில் வருகிறதா? என்பது தெரியாது. ஆனால், என்னுடைய பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இது போன்ற பத்திரிகைகள் உள்ளே இருக்கிறது. அவர்களும் படித்துக் கொள்ளட்டும். நான் அதற்காக தான் இதை வெளியிடுகிறேன்.

ஏனென்றால் இங்கே பத்திரிகை என்றால் அர்த்தம் தெரியாமல் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அதிகாரியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய அரசுக்கு கோரிக்கை . நானும் எத்தனையோ பத்திரிகைகளில் வேலை செய்திருக்கிறேன். இப்படி ஒரு செய்தி எந்த பத்திரிகையிலும் வெளிவந்து பார்த்ததில்லை.

அதே சமுதாயத்தில் எங்களுடைய பத்திரிக்கையில் சமூக ஆர்வலர்களாக நிருபவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை என்பது அது மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதிகாரிகளை மிரட்டுவதற்கு, வன்கொடுமை சட்டத்தில் அவர்களை கைது செய்வதற்கு இவர்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? வன்கொடுமை சட்டம் கொடுத்துள்ளதா?

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சனையை அதிகாரிகள் தான் தீர்க்க வேண்டும். பிரச்சனையை உருவாக்குவதற்கு வன்கொடுமை சட்டம் பயன்படுத்த எந்த சமுதாயத்திற்கும் அதிகாரம் இல்லை. மேலும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக அது ஒரு பெரிய ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதை கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை இந்த வன்கொடுமை சட்டம் தவறாக பயன் படுத்தி வருவதாக ஏற்கனவே, செய்திகள் மக்கள் அதிகாரத்தில் வெளியிட்டிருந்தோம்.

அதேபோல் youtube இல்,,இந்த செய்தியை பார்க்கிறேன். மேலும், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை. இப்படி எல்லாம் பத்திரிகைகள் நாட்டில் இருந்தால் மக்கள் வாழ்வது கடினம். பத்திரிக்கை துறை சீர் செய்யப் பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் செய்திகளை வெளியிட்டு இருக்கிறேன்.

விரைவில் செய்தித் துறை அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை .

மத்திய மாநில அரசின் செய்தி துறை சமூக நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *