தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அரசியல் உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் கடைகளை குறி வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

டாஸ்மாக்:இந்த ஆண்டு அந்த பொறியில் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வித்தியாசமாக `டீல்’ செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சில நாள்களுக்கு முன்பு கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்ட மேலாளர் செந்தில்குமார், “தீபாவளி நேரம் பாஸ். டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டாம். கண்டுக்காதீங்க. ரூ.25,000 கொடுத்தனுப்பறேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், அந்த `டீல்’ குறித்து தன்னுடைய மேலதிகாரிக்குத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிக்க `ஸ்கெட்ச்’ போட்டனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இதற்கிடையில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், சேத்தியாத்தோப்புக்கு அருகில் இருக்கும் சென்னிநத்தம் பகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும் `அறிவுரை?!’ வழங்கிய செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு, `சேத்தியாத்தோப்புக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு சரியென்று கூறிய இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், சேத்தியாதோப்புக்குச் சென்று செந்தில்குமாருக்குப் போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.லஞ்சம்

அதையடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரிடம், ரூ.25,000 கொடுத்தனுப்பியிருக்கிறார் செந்தில்குமார். அப்போது அவர்களுக்காகவே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான போலீஸார், செந்தில்குமாரையும், ராதாகிருஷ்ணனையும் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். அப்போதுகூட, `பணம் பத்தவில்லை என்றால் கூடுதலாக தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று பேரம் பேசினார்களாம்.

கடலூர் மாநகராட்சி: கட்டுமான வரைபட அனுமதி பெறுவதற்கு லஞ்சம்; மேயரின் உதவியாளர் உட்பட இருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *