இந்தியா பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் ,மொழி, மதம், இனம் வேறுபாடுகளில் இருந்து வரும் ஒரு தேசத்தின் ஒற்றுமை, அதன் செயல்பாடு, கட்டமைப்பு ,இவை எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவால்கள். அதில் ஒவ்வொருவரும் இந்தியர் என்ற பெருமைமிகு உணர்வை நாம் பெறும் போது, இந்த தேசத்தின் ஒற்றுமை உலக நாடுகளில் இதன் கலாச்சார பெருமை பேசப்படுகிறது. அந்த பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது.
அதுதான் இந்த தேசத்தின் தேச பக்தி .இந்த தேச பக்தி தான், சுதந்திர இந்தியாவின் வரலாறு. அந்த சுதந்திர வரலாற்றை ஒவ்வொரு இந்தியரும் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் ,இந்த தேசத்தின் தேசபக்தி என்ன? என்பது தெரிந்து கொள்ள முடியும். அதனால் மாணவர்களுக்கு நிச்சயம் சுதந்திர தியாகிகளின் வரலாறு, அதன் போராட்டம், அதில் மறைக்கப்பட்ட உண்மைகள், எல்லாம் மாணவர்களின் கல்வி ஆக்கப்பட வேண்டும். வரலாறு தெரிந்தால்தான், அவர்களுக்கு இந்த தேசத்தின் ஒற்றுமை என்ன? என்பது தெரிந்து கொள்ள முடியும்.அந்த ஒற்றுமை தான் இந்தியர்.அது,
ஒவ்வொருவரின் வளர்ச்சி, அந்த வளர்ச்சிக்கான விழுதுகளை இளைய தலைமுறைகள் பாதுகாத்து ,அதை தாங்கிப் பிடிக்க முடியும். இதை நம் இளைய தலைமுறைகள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. அவர்களுக்கு இந்த தேசத்தின் பெருமையும், சுதந்திர வரலாறும், நிச்சயம் கல்வி ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான விழுதுகளை தாங்கிப் பிடிக்க முடியும்.
உண்மை தெரியாமல் போனால், நாட்டில் பிரிவினைவாத சக்திகள் இந்தியாவை கூறு போட்டு விடும். அதற்கு ஒரு காலம் இடம் அளிக்கக் கூடாது என்பதுதான், இந்த தேசத்தின் ஒற்றுமை. அதுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல். மக்களின் தேசபக்தியே வலிமையான பாரதம் வளமான இந்தியா. ஜெய்ஹிந்த்.