நவம்பர் 16, 2024 • Makkal Adhikaram
நாட்டில் தேசிய பத்திரிகை தினம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் இன்று !அது சமூக நலன் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அந்த சலுகையும், விளம்பரங்களும் இன்றுவரை கொடுக்காமல் ஏமாற்றும் மத்திய, மாநில அரசின் செய்தித் துறைகள் பாரபட்சம் காட்டி வருகிறது. அதைப்பற்றி 100 சதவீதம் ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் செய்திகளை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.
ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் மத்திய, மாநில அரசிடம் இருந்து
இல்லை .இது மிகப் பெரிய கவலை. இது தவிர்த்து இந்த பத்திரிகை துறை கடல் போன்றது .இதில் போலிகள் இன்று அதிக அளவில் ஊடுருவி இருக்கிறார்கள். மத்திய மாநில அரசின் செய்தி துறை அதிகாரிகள், போலிகளையும் சமூக ஆர்வலர்களின் பத்திரிகைகளையும், ஒன்றாக இணைத்து பார்க்கிறார்கள் . அவர்களுக்கு இந்த பத்திரிகை சப்ஜெக்ட் இன்னும் புரியாத அதிகாரிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள் .
அவர்கள் சட்டத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள். சமூக நலனை பார்க்கவில்லை. சட்டம் இங்கே போலியானதாக இருக்கிறது. போலிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சட்டத்தை தான் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், இதை எதிர்க்கிறோம் .மேலும், செய்தியாளர்கள் அரசியல்வாதிகள் போல் அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் காட்டி அதாவது செய்தியாளர்கள் அடையாள அட்டை, சங்கத்தின் அடையாள அட்டை, இதுதான் பத்திரிகை என்று இன்று சென்னை பிரஸ் கிளப் காட்டுவது போல காட்டினால்,
உண்மையான, தகுதியான ,உழைக்கக்கூடிய செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் ,சமூகநலன் பத்திரிகைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது நீதிமன்றத்தையும், பொதுமக்களையும், அரசு அதிகாரிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு வேலை . இங்கே கூட்டம் பெரிதல்ல, தகுதி பெரிது, உழைப்பு பெரிது, உண்மை பெரிது,திறமை பெரிது, கூட்டம் பெரிது அல்ல. இதை எத்தனை பத்திரிகைகள் ?எத்தனை செய்தியாளர்கள் வைத்திருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்யுங்கள். அப்போதுதான் போலிகளை மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை ஒழிக்க முடியும் . மேலும்
ஒவ்வொரு பத்திரிகைகளும், ஒவ்வொரு பத்திரிகையாளரும் கொடுத்த செய்திகள் எந்த அளவுக்கு சமூகத்திற்கு முக்கியமானது? அதில் எவ்வளவு உண்மைகள் உள்ளது? அதைத்தான் பார்க்க வேண்டும். ஆனால், நீ எத்தனை பொய் சொன்னாலும், எவ்வளவு போலி விஷயங்கள் அது உள்ளே புகுத்தினாலும், அரசியல் கட்சியினர் பேசுகின்ற பொய் புரட்டுகள் எல்லாம் அதிலே செய்திகளாக போட்டுக் கொண்டிருந்தாலும், அதுவும் சர்குலேஷன்? இது யாரை ஏமாற்றும் வேலை?இதுதான் பத்திரிக்கையின் சர்குலேஷன் சட்டமா?
உண்மையாக, சமூக நலனுக்காக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சலுகை, விளம்பரங்கள் கிடையாது. ஆனால், கார்ப்பரேட் என்ற பத்திரிகை, தொலைக்காட்சிகள் சமூக நலனை விட அவர்களின் வியாபாரமும் ,ஆட்சியாளர்களின் சுயநலமும்,பொது மக்களை விட உயர்ந்ததா? இந்த உள்ளடி வேலைகளை மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது போல, பத்திரிக்கை துறையில் அனுபவம் உள்ளவர்கள், பத்திரிக்கை ஆய்வாளர்கள், சமூக நலன் அக்கறை உள்ளவர்கள் ,இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இன்று வரை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், யார் இதை ஏற்றுக் கொள்கிறார்கள் ?என்றால்! தமிழ்நாட்டில்
அரசு அடையாள அட்டைக்கு ஏங்குகின்றவர்கள்,தகுதி இல்லாதவர்கள் அந்த அரசு அடையாள அட்டை காசு கொடுத்து, திருச்சியில் ராக்போர்ட் என்ற பத்திரிகை வாங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுபோல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம், இது எல்லாம் தான் பத்திரிகை என்று சொல்லி கெஞ்சிக் கொண்டு, அடையாள அட்டை தான் பத்திரிகை என்று பேசிக்கொண்டு, உழைக்காமல், தகுதி இல்லாமல், எந்த நோக்கத்திற்கான பத்திரிகை என்று தெளிவுபடுத்தாமல்,செயல் பட்டுக் கொண்டிருப்பவர்கள், சங்கத்தின் அடையாள அட்டை போட்டு விற்றுக் கொண்டிருப்பவர்கள், பத்திரிகையின் அடையாள அட்டை போட்டு விற்பனை செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் தான் தற்போது செய்தித் துறையில் அங்கீகாரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை வைத்து அதிகாரிகள் முட்டாள்தனமாக எல்லாம் பத்திரிகை என்று எங்களுக்கு கணக்கு காட்டி கொண்டிருக்கிறார்கள். எந்தந்த பத்திரிக்கை? எந்தெந்த செய்திகளை? என்னென்ன விஷயங்களை? வெளியிடுகிறது.இதில் காப்பீ டு பேஸ்ட் எத்தனை பத்திரிக்கை?அதனுடைய இணையதளங்களில் எவ்வளவு பார்வையாளர்கள் உள்ளனர்? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் என்ன செய்தி துறை அதிகாரிகள் வேலை பார்க்கிறீர்கள்? அரசு செய்தியை எத்தனை பத்திரிக்கையில் வெளி வருகிறது? அதை கட்டிங் போட்டு காட்டுவது செய்தித்துறை அதிகாரிகளின் திறமையா? இல்லை, அது ஒரு பெரிய வேலையா? என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பத்திரிக்கை துறையை சீர் செய்ய வேண்டும்.
விரைவில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகள் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு நிச்சயம் எடுக்கும் என்பதை தேசிய பத்திரிகை தினத்தில் பத்திரிகை உலகிற்கு தெரிவித்து ,இதற்கு ஒரு விடியலை ஏற்படுத்துவோம். ஒன்றிணைவோம். சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .
மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தலைவர்மற்றும் நிர்வாகிகள் .