தேனி மாவட்டம் இயற்கையின் கனிம வளங்கள் நிறைந்த எங்க பார்த்தாலும் பசுமையும் மலையும் நிறைந்த மாவட்டம். இப்போது இந்த மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு
தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 லாரிகளின் மூலம் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும்,இந்த லாரி ஓட்டுனர்கள் ஒரு செக்போஸ்ட்க்குரூபாய் 200 வீதம் கொடுக்கிறார்கள். இந்த பணம் செக்போஸ்டில் ஒரு நாளைக்கு மட்டும் 5000×200 = ரூ10,00000 (10 லட்சம் ) கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று கோடி. இதுவே இந்த நிலைமை என்றால்! மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயபாரதி, கோட்டாட்சியர் தாட்சாயினி,தவிர வட்டாட்சியர், விஏஓ, ஆர் ஐ,மற்றும் எம்எல்ஏ, எம்பி, மாவட்டம், வட்டம், இவர்களின் பங்கு எவ்வளவு?
இந்த மாவட்டம் முழுதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்குவதாக தெரிவிக்கும் பொதுமக்கள், பெயருக்கு இதில் சட்டப்படி இயங்குகின்ற குவாரிகளும், வழக்கு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற குவாரிகளும், ஓடிக்கொண்டு தான் இருக்கிறது என்கிறார்கள். மேலும்,இந்த மாவட்டத்தில் மட்டும்,பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுவதாக தேனி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? என்றால், கேரளாவில் கனிமங்கள் மலை,மண் மற்றும் மணல் எல்லாமே தடை செய்யப்பட்டுள்ளது. அங்கே எதுவும் எடுக்க முடியாது.
அதனால், அங்கு இருக்கின்ற கேரளா அரசியல் புள்ளிகள் சிலர் கருப்பு பணத்தை வெள்ளையாக்க மிக அருகாமையில் உள்ள தேனி மாவட்டத்தை கனிமவளக் கொள்ளைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற முக்கிய தகவல். மேலும், இதற்கு முக்கிய காரணம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் இந்த கனிமவளக் கூட்டுக் கொள்ளைக்கு முக்கிய காரணமானவர்கள். இவர்கள் தவிர, மாவட்டத்தின் கரை வேஷ்டி கட்டாத கட்சிக்காரர் பி ஆர் ஓ நல்லதம்பி, மாவட்ட கனிம வள அதிகாரி கிருஷ்ணமோகன், நீர்வளத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் மாவட்ட அதிகாரிகள், அனைவரும் பல்லாயிரம் கோடி கனிமவள கொள்ளைக்கு துணை போய் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், தான் இந்த கனிம வளக் கொள்ளை சம்பந்தமாக எந்த ஒரு செய்தியும், பத்திரிகை தொலைக்காட்சியில் வராமல் பார்த்துக் கொள்வது என் வேலை என்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாராம், கரை வேஷ்டி கட்டாத மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி.இங்கே பத்திரிகை என்றால் என்ன?என்று தெரியாத பல பி.ஆர்.ஓக்கள் இருக்கிறார்கள். அவர்களில் இவரும் ஒருவர் என்று தான் தெரிகிறது.மேலும், பத்திரிகை என்றால் போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ள கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இப்படிப்பட்ட ஊழலுக்கு துணை போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் இப்போதாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள். பல ஆயிரம் கோடி கனிம வளக் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி ஒரு செய்தி கூட வெளிவரவில்லை என்று சமூக ஆர்வலர்கள்வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எமது மாநில பொதுச் செயலாளர் முரளிதரன் இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு சங்கத்தின் சார்பில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது பல இடங்களுக்கு சென்று இறுதியில் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி கிருஷ்ணமோகனிடம் அந்தப் புகார் மனு தூங்கிக் கொண்டிருப்பதாக தகவல். இது சம்பந்தமாக முரளிதரன் அவரை தொடர்பு கொண்டு பேசி சந்திக்கலாம் என்று சென்றால் அவர் மருத்துவ விடுப்பில் சென்று விடுகிறார் என்கிறார்கள்.
இதைவிட ஒரு பெரிய கூத்து இந்த கனிம வள கொள்ளையில் வரும் வருமானத்தை கேரள மாநிலத்தில் எஸ்டேட்டுகளாகவும் சொத்துக்களாகவும் மாவட்ட ஆட்சியர் சஜீவினா வாங்கி குவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர, பர்த்டே பார்ட்டி, குழந்தைகள் பிறந்தநாள் , திருமண நாள் போன்ற அவரவர் விசேஷத் திருநாளுக்கு கேரளாவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் தான் பார்ட்டிகள் நடப்பதாக தகவல்.
இந்த மாவட்டத்தின் கனிம வள கொள்ளையை பங்கு போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் வேதனை தெரிவித்தாலும், இதை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, இறங்கி கொல்லைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஒவ்வொருவருடைய சொத்து கணக்கு விவரத்தை எடுத்து எத்தனை கோடி இந்த மாவட்டத்தில் கொள்ளை போயிருக்கிறது என்பதை சேட்டிலைட் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்டத்தின் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.