
நாட்டில் ஊழல் ஆட்சியை உருவாக்க ,இலவசமும், இலவச அறிவிப்புக்களும், ஓட்டுக்கு பணமும், தேர்தல் ஆணையம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நடத்துவது வீண்.
தேர்தல் ஆணையம் மக்களிடம் பணத்தைக் கொடுத்து ,இலவச பொருட்களை கொடுத்து ,மக்களின் விலை மதிப்பில்லா வாக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்.

இந்த வியாபார தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்திக் மேலும் இதுவரை இதை தடுக்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளது ? தவிர,
இதனால், அரசியலுக்கு நேர்மையானவர்களும், தகுதியானவர்களும் வர முடியாது. யார் பணம் வைத்திருக்கிறார்களோ, யார் மக்களுக்கு பணத்தைக் கொடுக்கிறார்களோ, யார் இலவசத்தை கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் இந்த மக்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

அதாவது,இதில் இந்த இலவசமும் பணமும், யார் அதிக அளவில் போட்டி, போட்டுக் கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் இவர்களை ஏலத்தில் எடுக்க முடியும். இப்படி மக்களை ஏலத்தில் எடுக்க தேர்தல் ஆணையம் அதற்கு ஒரு தேர்தல் நடத்தி, அதற்கு பல ஆயிரம் கோடி, மக்களுடைய வரிப்பணத்தை வீணடிப்பது தேவையற்ற வேலை.

மேலும் ,இப்படி ஒரு தேர்தல் நடத்துவதை விட ,எல்லா அரசியல் கட்சிகளையும் கூப்பிட்டு, இந்த மக்களுக்கு யார் அதிக அளவில் தொகை கொடுக்கிறார்களோ, அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள்.

இதற்கு கால நேரம் மிச்சமாகும், மக்களும் வெயிலில் நிற்க தேவையில்லை. மக்கள் ஓட்டு போடத் தேவையில்லை அரசியல் கட்சிகாரர்கள் பேசத் தேவையில்லை. மேலும், கட்சிக்காரர்கள் கொடி பிடித்து கோஷம் போடத் தேவையில்லை.

இது எல்லாம் இல்லாமலே நேரடியாக ஏலத்தை ஏற்பாடு செய்து விடுங்கள். எதற்கு இப்படி ஒரு தேர்தல் ?அதற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் நடத்தி விட்டுப் போவது ?இவர்கள் பணம் கொடுத்து ,,இலவச பொருட்கள் கொடுத்து இலவச அறிவிப்புகளை கொடுத்து, அதை தடுக்க தகுதி இல்லாமல் அதற்கு ஒரு தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் தகுதியற்ற வேலை .

மேலும்,நேரடியாகவே யார் ?பணம் அதிகம் வைத்திருக்கிறார்களோ, அவர்களே ஏலத்தில் எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் பறக்கும் படை, எந்த படை வைத்தாலும், அவர்களை தடுக்கப் போவதில்லை.

அவர்கள் இலவச அறிவிப்பு கொடுத்தாலும் ,அதை நிறுத்த போவதுமில்லை. இலவச பொருட்கள் கொடுத்தாலும், அதை கண்டுபிடித்து, அந்த அரசியல் கட்சியை தகுதி நீக்கம் செய்யப் போவதுமில்லை. மேலும் ,அவர்கள் பணத்தையும் இலவசத்தையும் கொடுத்து மறைமுகமாக ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை வேடிக்கை பார்த்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது வீண்.
Even if they give free advertisements, they will not stop it. Even if they give free goods, they will not find out and disqualify that political party. Moreover, they are indirectly taking it in an auction by giving money and free goods. It is useless for the Election Commission to conduct elections while watching it.
மேலும் நாட்டில் தேர்தல் என்றால்! சுதந்திர இந்தியாவிற்கு பின் படிப்பறிவு இல்லாத மக்கள், வாக்களிக்கும் போது கூட ,பணம் வாங்கி வாக்களிக்கவில்லை. இலவச பொருட்கள் வாங்கி, வாக்களிக்கவில்லை. இலவச அறிவிப்புகளை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை.
ஆனால், இப்போது செல்போன், கம்ப்யூட்டர், உலகத்தில் வாழக்கூடிய மக்கள், டிவி ,பத்திரிக்கை, இதையெல்லாம் பார்க்கக் கூடிய, படிக்கக்கூடிய மக்கள், இப்போது சும்மா எது வரும்? யார் கொடுப்பார்கள்? இந்த நிலைக்கு மக்களே மாறி இருக்கிறார்கள்.

மேலும்,அந்த காலத்திலே மக்களுடைய எண்ணம், உழைத்து முன்னேற வேண்டும் என்று இருந்தது .இப்போது உழைக்காமல் எப்படி முன்னேறுவது? அதுதான் மக்களின் எண்ணமும்,இன்றைய அரசியல்வாதிகளின் எண்ணமும் ஒன்றாகவே இருக்கிறது.மேலும்,
இதற்கு தேர்தல் ஆணையம் இதுவரை தடுக்க என்ன சட்டம் கொண்டு வந்துள்ளது? அது பற்றி ஆய்வு செய்து இருக்குமா? மேலும், இந்த இலவச பொருட்களும், ஓட்டுக்கு பணமும் ,இலவச அறிவிப்புகளும், எதிர்காலத்தில் நாட்டுக்கு! மக்களுக்கு! இதனால், என்ன பாதிப்பு வரும்? அது பற்றி எப்போதாவது தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து இருக்குமா?
மேலும்,தேர்தல் ஆணையம் நாட்டுக்கும் ,மக்களுக்கும், அதன் நலனில் முக்கியத்துவமாக தேர்தல் நடத்துகிறதா? இல்லை, இந்த அரசியல் கட்சியினரின் நலனில் தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? தவிர,இந்த அரசியல் வியாபாரத்திற்கு ,தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு மீடியேட்டர் ஆக வேலை செய்கிறதா? எப்போது தேர்தல் ஆணையம் இதை தடுக்கிறதோ, எப்போது இதை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மீது எடுக்க முடியுமோ ,அப்போதுதான் நாட்டுக்கும், மக்களுக்குமான தேர்தல். இது அரசியல் கட்சிகளின் வியாபாரத் தேர்தல். இந்த வியாபாரத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தேவையா?

மேலும் பணம் கொடுத்து, இலவச பொருட்கள் கொடுத்து ,ஒருவருடைய வாக்கை பெற்றால் ,அது எப்படி தகுதியான வாக்கா? தகுதியான தேர்தலா? இது ஓட்டுக்கு லஞ்சம் அல்லவா? ஓட்டுரிமையின் சுதந்தரத்தை பறிக்கும் வேலை அல்லவா? இப்படி பணமும், இலவச பொருட்களும், கொடுத்து வெற்றி பெறுபவர்கள் எப்படி நேர்மையானவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக இருப்பார்கள் ?என்பதை மக்களும் சிந்திக்கவில்லை .தேர்தல் ஆணையமும் சிந்திக்கவில்லை.
பிறகு ஊழல், ஊழல் என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருப்பது எதற்கு? ஊழல் செய்யாமல் என்ன செய்வார்கள்? குறைந்த முதலீடு செய்து, அதிக லாபத்தை ஈட்டக்கூடிய தொழிலாக அரசியலை அரசியல் கட்சிகள் மாற்றி வட்டார்களா?

வியாபார அரசியல்! நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ,ஆபத்தானது? நாட்டில் ஊழல் ஆட்சியை உருவாக்கும் தேர்தலா? அல்லது ஊழல்வாதிகளை ஊக்கு விக்கும் தேர்தலா? தேர்தல் ஆணையத்திற்கு இந்த விளக்கம் போதுமா?