தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வருவதால் ஊழல் அரசியல், ஊழல் அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்க முடியும். அதாவது ஒரு வாக்காளர் உடைய ஆதார் எண். பேன் கார்டு, ஓட்டர் ஐடி மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரே அடையாள அட்டையாக கொண்டு வர வேண்டும். அதில் ஒருவருடைய அட்ரஸ் ப்ருப் அனைத்தும் உள்ளடக்கம் செய்து அதன் பிறகு அதில் QR code ல் இணைக்க வேண்டும்.இந்த QR code ஐ ஸ்கேன் செய்தால், இவருடைய விலாசம் அத்தனையும் தெரியப்படுத்தும் . இதை வைத்து தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டுக்குள் சென்று இவருடைய QR code ஸ்கேன் செய்து, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த சின்னத்தில் வாக்களிக்கலாம் .
மேலும், அமெரிக்காவில் டிஜிட்டல் மையம் கொண்டு வந்தது போல, இங்கும் கொண்டு வர வேண்டும் . அப்படி கொண்டு வந்தால் பிளாக் மணியை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் செலவிட முடியாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் தான், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டில் கருப்பு பணத்தை வைத்து தான் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தேர்தலை சந்திக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். தவிர, பணத்தால் வாக்காளர்களின் அதிகார உரிமையை அரசியல் கட்சிகள் விலைக்கு வாங்குகிறது. இதை தடுக்க வேண்டும்.
மேலும், தேர்தலுக்கு ஒருவருக்கு முன்பே அரசியல் கட்சியினரின் வங்கி கணக்குகள், வங்கி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட வேண்டும் .அதேபோல், பெண்கள் சுய உதவி குழுக்கள், ஆண்கள் சுய உதவி குழுக்கள் மற்றும் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இவைகளின் வங்கி கணக்குகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். இதுவெல்லாம் நாட்டில் மேலும், மேலும் ஊழலை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தவிர, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிமுகம் செய்வது, அவர்களுடைய பேச்சுக்களை தினமும் பத்திரிகைகளில் செய்திகளாக போடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது இவர்களுடைய பொய் பிரச்சாரங்களை மக்களிடம் விளம்பரப்படுத்தும் வேலையை தடுக்க வேண்டும் .
அதற்கு பதிலாக இவர்கள் என்ன வாக்குறுதியை கொடுக்கிறார்களோ ,அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.செய்யவில்லை என்றால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது அரசியல் கட்சியாக இருந்தாலும், அல்லது தனிநபராக இருந்தாலும் அவர்கள் தேர்தல் என்ற வரைவு வட்டத்திற்குள் அவரைக் கொண்டு வர வேண்டும்.
தேர்தல் ஆணையம் அதை இணையத்தில் வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் மூலம் பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டும். மேலும் , இது போன்ற செய்திகளை அரசியல் கட்சிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றம் அரசியலில் தடுக்க முடியும்.மேலும், இதையெல்லாம் தேர்தல் விதிகளின் சட்ட திட்டத்தில் கொண்டு வந்து அதை தேர்தல் ஆணையமே இணையத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், இந்த செய்திகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டும். இவர்களாக வேட்பாளர்களின் தகுதி, திறமை இல்லாத ஒருவரை புகழ்ந்து, போற்றி, மக்களிடம் பொய்களை சொல்லி செய்திகளாக கொடுப்பது, மக்களை ஏமாற்றும் வேலை. இதையும் தேர்தல் ஆணையம் ஊழலுக்கு ஒத்துழைக்கும் கார்ப்பரேட் ஊடகங்களின் வேலையை தடுக்க வேண்டும் . மேலும்,
இது ஏன் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்? என்றால் மக்களிடம் போய் வாக்குறுதிகளை கொடுத்து தொடர்ந்து அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும் ஏமாற்றுவது தேர்தல் அல்ல . தேர்தல் என்பது சொன்னதை மக்களுக்காக செய்வதற்கு தான் தேர்தல். மக்களுக்கு நல்லதை செய்வதற்காக எனக்கு ஓட்டு போடுங்கள். நான் இதை செய்கிறேன், அதை செய்கிறேன், இப்படி செய்கிறேன். அப்படி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதற்கு பொது சொத்துக்களை தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டுக்கொள்ள இவர்களை மக்கள் தேர்வு செய்யவில்லை.
மேலும், மக்களை ரவுடிசம் செய்து மிரட்டுவதற்கும், பொது சொத்துக்களை அதிகாரிகளும், இவர்களும் பங்கு போட்டுக் கொள்வதற்கு அப்படி ஒரு தேர்வு தேவையில்லை. ஊழல் செய்து, தவறு செய்து சொத்துக்களை வாங்கி குவித்தால், அதை உடனடியாக அரசுடமையாக்கப்பட வேண்டும் . இது மக்கள் சொத்து, மக்களிடம் தான் திரும்ப வர வேண்டும். மேலும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள், மக்களை மிரட்ட வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையமும், கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளும், துணை போவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
மேலும், இப்படிப்பட்ட கடும் சட்டங்கள் நாட்டில் கொண்டு வந்தால், தேர்தலில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகலாம் . 40 சதவீத மக்கள் தேர்தலில் வாக்களிக்காமலே புறக்கணிக்கிறார்கள் .ஒரு பக்கம் நோட்டா, மற்றொரு பக்கம் வாக்களிக்க செல்வதில்லை.இவர்கள் கொள்ளை அடிப்பதற்கு நான் ஏன் நாலு மணி நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டும் ? இப்படி பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
அதனால், வாக்களிக்கும் முறையை இணையதளத்தில் கொண்டு வந்தால், நிச்சயம் தங்கள் செல்போனிலும், அல்லது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மூலம் நிச்சயம் இன்றைய இளைய தலை முறைகள் வாக்களிப்பார்கள். தெரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கல்வித் தகுதி வைத்து அல்லது அவர்களுடைய ஒப்புதல் வாங்கி இணையதளமா? அல்லது நேரடி வாக்கு செலுத்தும் முறையா? என்ற விண்ணப்பத்தின் மூலம், இதை ஒவ்வொரு வாக்காளர்களும் ,தேர்வு செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் வாக்களித்த முடியாதவர்கள், நேராக சென்று தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். இதனால் கூட்ட நெரிசல் இருக்காது. இப்படி வாக்களிப்பவர்கள் தற்போது 30 லிருந்து 40% தான் இருக்கும் . எனவே, தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.