நடைபெற்று வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ! தமிழ்நாட்டு வாக்காளர்கள் அரசியல் கட்சியினர் மீது அதிருப்தியா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 19, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் இதுவரை எந்த தேர்தலிலும் ,நாலு மணி அளவில் 51 % என்கிறார்கள். இது மிகவும் குறைவானது. தற்போதைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 48% மிக குறைவாக வாக்களித்துள்ளனர் . இதற்கு ஒரு பக்கம் வெயில் காரணமாகவும் இருக்கலாம். 

ஆனாலும், வயதானவர்கள் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.ஆனால், படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லையா? அல்லது அரசியல் தெரிந்தவர்கள் ஆர்வம் காட்டவில்லையா? எனக்கு சில தினங்களுக்கு முன்பே நண்பர் ஒருவர் சிவகாசியில் இருந்து இந்த முறை வாக்களிக்கவே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது போலவே தெரிவித்தார் .நிலைமையும் அது போல தான் இருக்கிறது.

 இந்த அரசியல் கட்சிகளின் ஊழல், அராஜகம் இதையெல்லாம் மக்கள் எத்தனை நாளைக்கு சகித்துக் கொண்டிருப்பார்கள்? மாற்றத்தை நோக்கி மக்கள் இருக்கிறார்கள் .ஆனால், இந்த அரசியலின் சூதாட்டம் மக்களுக்கு புரியவில்லை. இந்த சூதாட்டத்தில் கார்ப்பரேட் மீடியாக்களின் செய்திகள் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு தெளிவான கருத்து, மக்களுக்கு தேவையான கருத்து, உண்மையான செய்திகள் எங்கே? என்ற தேடல் அதிகரித்து விட்டது .மக்களின் வாழ்க்கை போராட்டம், வாழ்வாதார போராட்டம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதைப் பற்றி சிந்திக்காத அரசியல் கட்சி தலைவர்கள், பேசியே மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? ஒருவன் பசியின் கொடுமையில் எத்தனை நாள் அந்த வேதனையை அவன் பொறுத்துக் கொண்டிருப்பான்? இவர்கள் சொத்துக்களை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு எத்தனை ஏக்கர் நிலம் வைத்துக் கொள்ளலாம்? என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். 

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

ஒருவருக்கு அதிகபட்சம் 10 லிருந்து 15 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும். அதேபோல் வங்கிகளில் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? எவ்வளவு நகை வைத்துக் கொள்ளலாம் ?என்ற சட்டங்கள் கொண்டு வர வேண்டும். 

இவர்களுக்கு ஆசைக்கு அளவே இல்லை. ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக நூறு, ஐம்பது ஓட்டில் ஜெயித்து வருபவன் கூட ,ஊரையே விற்று சாப்பிட்டு விடுகிறான் . இது எல்லாம் கிராம மக்கள் பார்த்து சபித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, ஜாதி கட்சி என்று பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் ஒரு சீட் ஆவது ஜெயிக்குமா? அந்த நிலைமையில் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையிலே சமுதாயம் விழித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வன்னியர் சமுதாயம் ஏமாந்து விட்டது. ஏமாந்த பலனை இன்று அவர்களுக்கு திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . 

யார் மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர்கள்? யார் மக்களுக்காக உண்மையாக செயல்படுபவர்கள்? இதை எதிர்நோக்கி மக்களின் அரசியல் என்றால்! அரசியல் கட்சியினரின் திட்டம் எப்படி எல்லாம் கோடிகளை நாம் சுருட்டலாம் ?என்ற கணக்குப் போட்டு கொடி பிடித்து கத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல கட்சிகளில் ரவுடிகளையும்,  கிரிமினல்களையும் ,அரசியல் வியாபாரிகளையும், வைத்துக்கொண்டு கதையை ஓட்டினால், மக்கள் இனி சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது இந்த தேர்தலில் புரிந்து கொள்வார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *