நாடாளுமன்றத்தில் ,சட்டமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்வதை தவிர்ப்பார்களா?

அரசியல் இந்தியா செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சில காலங்களாக இந்தியாவின் அரசியல், ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. அதாவது கடந்த காலங்களில் நடந்த அரசியல்! ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களின் முக்கிய பிரச்சனை என்ன? செய்தித் தாள்களில் வந்த முக்கிய பிரச்சனை என்ன? என்பது பற்றி விவாதிப்பதற்கு நேரம் இருக்காது.ஆனால்,தற்போது

அங்கே அரசியல் செய்து,  இருவருமே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அதற்கு நடந்த சம்பவம் தான், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில்  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒருபுறம், மற்றொருபுறம் கனிமொழி எம்பி, நிர்மலா சீதாராமன் பேச்சு ,இவை எல்லாமே நேரத்தை வீணடிக்கும் வேலை.

 மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எதனால் இந்த கலவரம் ஏற்பட்டது? இதைப்பற்றி நியாயமான முறையில் விவாதிக்க வேண்டும். மேலும், இதில் ஆளும் கட்சி சொல்லும் உண்மை என்ன? எதிர்க்கட்சிகள் சொல்லும் உண்மை என்ன?  இதுதான் மக்களுக்கு தேவை. இதுதான் ஊடகங்கள் மக்களிடம் சொல்ல வேண்டிய உண்மை.

 ஆனால், கனிமொழி பேசிய பேச்சுக்கு ,ஜெயலலிதா சேலையைப் பிடித்து  இழுத்த சம்பவம், இதையெல்லாம் யார் கேட்டது? உங்களை மக்கள் இந்த பிரச்சனைக்கு தேர்வு செய்து அனுப்பவில்லை. மக்களின் பிரதிநிதியாக தான் நீங்கள் பேச வேண்டுமே ஒழிய, அங்கே பேச்சுப் போட்டி நடத்துவதற்கு உங்களை தேர்வு செய்து மக்கள் அனுப்பவில்லை என்பதை எல்லோரும் நினைவில் கொள்வது நல்லது.மேலும்,

 மக்களுடைய பிரச்சனைகள் எப்படி தீர்ப்பது? என்ற நோக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ இருக்கிறார்களா? என்ற கேள்வி தான் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வேதனையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே எந்த பிரச்சனையை பற்றி பேசலாம்? எந்தப் பிரச்சினையை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டுமோ அதை பேசுவதாலோ அல்லது அரசியல் செய்வதாலோ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

ஆனால், தற்போது தேவையற்ற சுயநலமான பிரச்சினையை எழுப்பி அரசியல் செய்வதுதான் நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் நடக்கின்ற அரசியல் கூத்து. இது தேவையற்றது. இதை தமிழக சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தவிர்ப்பது நல்லது.

 எத்தனையோ முறை எங்களுடைய ஆதங்கத்தை பத்திரிகை துறையில் உள்ள தவறான விதிமுறைகளை பற்றி இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டும், இதுவரை எந்த ஒரு அமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ இது பற்றி கேள்வி எழுப்பி பேசியதில்லை. ஆனால், தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை வீணடிப்பதோடு, அங்கே அரசியல் செய்யும் அரங்கமாக அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 இதை எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் தவிர்த்தால் தான் மக்களுக்கான அரசியலை அவர்கள் செய்ய முடியும். எந்த நோக்கத்திற்காக மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ, அதை மறந்து விட்டு தேவையில்லாத பேச்சுக்களும், அரசியலும், தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்கு புரிந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *