நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 14, 2025 • Makkal Adhikaram

நாட்டின் எல்லைகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது என்ற தகவலை தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 

தவிர சந்திராயன் மூன்று வெண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிறுவி உள்ளோம். சந்திராயன் – 4 திட்டம் 9600 கிலோ எடை கொண்டது. சந்திராயன் – 3 திட்ட வெண்கலம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டும் தான் ஆய்வு செய்தது. 

அதை முறியடிக்கும் விதமாக சந்திராயன் – 4 திட்ட விண்கலம் நிலவில் இறங்கி மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திராயன் – 5 திட்டம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம். 

வரும் 2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதல மையத்தை அமைக்க உள்ளோம். 

குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ஏவுதல மையத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்திற்கு தேவையான 95 சதவீத இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. வரும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்கள் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *