நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால்! சமூக நன்மைக்காக போராடுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சமூக ஏற்றத்தாழ்வு பொருளாதார வளர்ச்சி மட்டுமே, அதை உயர்த்தி விடாது. அதற்கான தகுதி ,உழைப்பு, நேர்மை, உண்மை இது இருந்தால் தான், அந்த சமுதாயத்தின் வளர்ச்சி முக்கியத்துவம் மற்ற சமூகங்களுடைய ஏற்படுத்த முடியும்.

 மேலும், விவசாயத்தையும், உழைப்பையும் நம்பி வாழ்ந்த மக்கள் இன்று அரசியலில் ஏமாந்து கிடக்கிறது. இதற்கு என்ன காரணம்? தகுதியானவர்கள் பின்னால் இவர்கள் போகவில்லை. இவர்களைக் கொண்டு போய் அடமானம் வைத்து லாபம் பார்க்கும் வேலை தான் இன்றைய வன்னிய சமுதாய மக்களாகி விட்டார்கள். இவர்களுக்கு குறுக்கு வழியில் எப்படி பணம் பார்க்கலாம்? என்பதில் இன்றைய அரசியல் ஒரு எளிய கருவி ஆகிவிட்டது.

மேலும்,அந்தப் பொருளாதாரம் கூட, குறுக்கு வழியில் எப்படி சம்பாதிக்கலாம்? குறுக்கு வழியில் சட்டத்தை எப்படி ஏமாற்றலாம்? எப்படி சமூகத்தை ஏமாற்றலாம்? இது மட்டுமே ஒரு சமூகத்தின் வளர்ச்சியாகி விட முடியாது. அதனால் தான் இன்று அறிவைக் காட்டும் சமுதாயம் அல்லது அறிவின் துணை கொண்டு வாழ்கின்ற சமுதாயம், அந்தந்த சமூக தலைவர்களிடமும் அல்லது அரசியல் கட்சியினரிடமோ அவர்கள் ஏமாறவில்லை.

யாரெல்லாம் உடம்பு மட்டுமே பிரதானமாக காட்டி கொண்டு, அரசியலில் தன்னை ஒரு மிகப்பெரிய ஆளாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடம் செல்லும் அத்தனை சமுதாயங்களும், இன்று ஏமாந்து கொண்டிருக்கிறது. ஆனால், அறிவைக் கொண்டு பிழைப்பவர்கள் எக்காலத்திலும், எந்த சமுதாயத்திலும் அவர்கள் ஏமாறுவதில்லை. இந்த சமுதாயம் அறிவை பயன்படுத்துவதை விட, உடல் வலிமை மட்டுமே தான் அதிகம் பயன்படுத்துகிறது.

இப்போது படிப்பு ,கவுரவம் என்பது எல்லாமே ஒரு லேபிளாக மாறிவிட்டது. அந்த லேபிளை காண்பித்து அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இந்த மக்கள் ஏமாறுகிறார்கள். அந்த லேபில் என்பது அரசியல் கட்சியாகவும் இருக்கலாம், அது ஜாதி கட்சியாகவும் இருக்கலாம், மதம் சார்ந்த கட்சியாகவும் இருக்கலாம் ,அல்லது அரசியல் கட்சியாகவும் இருக்கலாம், ஆகக் கூடி எப்படி இருந்தாலும், உடல் வலிமை மட்டுமே பெரிதாக நினைக்கின்ற தலித் சமுதாயம், வன்னியர் சமுதாயம், தேவர், முக்குலத்தோர், பட்டியலின மக்கள், இவர்கள் அனைவரும் ஏமாந்த சமுதாயமாகத்தான் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அவரவர் சமூகத்தில் உள்ள நேர்மையானவர்களை மதிக்காமல், இவர்களை எல்லாம் கூறு போட்டு விற்பவர்களிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன முக்கிய காரணம்? என்றால், இந்த சமூக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. வாயிலே எப்படி ஏமாற்றி மக்களை கவருவது, எந்த பொய்களை சொன்னால், இவர்கள் ஏமாறுவார்கள். எப்படி பேசினால் மக்கள் ஏமாறுவார்கள்? இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின், அரசியல் ஏமாற்று கலையாகி விட்டது. மேலும்,

அம்பேத்கர் சட்டம் படித்த மேதை, இவர் போட்டோ காண்பித்து அல்லது சிலையை காண்பித்து, அரசியலில் ரவுடிசம் செய்து கொள்ள அவர் அனுமதிப்பாரா? அல்லது அவர் கொண்டு வந்த வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி அரசியலில் ஒருவரை அல்லது ஒரு சமுதாயத்தை பழிவாங்க நினைப்பார? இது எல்லாம் அறிவு சார்ந்த ஒரு மேதையை அவமானப்படுத்தும் செயல். எல்லா சமுதாயமும், அவர் இயற்றிய சட்டத்தை மதிக்கும் போது,

அவருடைய கொள்கையை அல்லது அவர் இற்றிய சட்டத்தை மதிக்காமல் அரசியல் தலைவராகவோ அல்லது தொண்டராவோ இருந்து அவரைப் பற்றி பேச தகுதி இல்லை. இது அம்பேத்கர் உயிரோடு இருந்தால் கூட இதை எல்லாம் ஒரு காலம் ஏற்றுக் கொள்பவர் இல்லை. ஆனால் அவரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துவது, முட்டாள்களிடம் காட்டும் அரசியல் வித்தை.

 இதில் சிந்திப்பவன் புத்திசாலி. சிந்திக்காதவன் முட்டாள். முட்டாள்களின் கூட்டத்தில் கைதட்ட, விசில் அடிக்க, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு ஆள் வேண்டும் .அதனால் தான் ஒழுங்காக விவசாயம் செய்பவர்களையும் கெடுத்து, விவசாய கூலி வேலைக்கு செல்பவர்களையும் கெடுத்து, அவர்களுக்கு எப்படி மக்களிடம் ஏமாற்றி வாக்கு வாங்குவது ? தவிர ,தேர்தல் நேரத்தில் இவர் நம்ப ஆல், நம்ம ஆல் அது முடிந்தவுடன் ,இவர்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். ஏதோ ஒரு விரோதி பார்ப்பது போல் பார்ப்பார்கள். இதில் குடிகாரர்களுக்கு குடிப்பதற்கு கொடுத்தால் போதும், யார் கூப்பிட்டாலும் அந்த பக்கம் போய் வாங்கி குடிப்பார்கள். அது ஒரு போதைக்கு அடிமையான கூட்டம்.

இதற்கு அடுத்தது அரசியலை ஒவ்வொருவரும் சுயநலமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தது, பணத்தை வைத்து அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும் அடிமைகள் ஆகிவிட்டார்கள். குடிகாரர்கள் குடிக்கு அடிமையாகி விட்டார்கள். இதனால் தான் இந்த சமுதாயங்களை எளிதில் மயக்கம் வார்த்தைகளையும், கவர்ச்சிகரமான வார்த்தைகளையும், பொய்யான வாக்குறுதிகளையும், சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த சமூகம் முன்னேறாமல் அரசியலில் உள்ள அடாவடி பேர் வழிகள் மட்டுமே, முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதுவாது இவர்களுக்கு தெரியுமா?

மேலும்,இந்த சமுதாயம் எப்போது ஒழுக்கமானவர்களையும், நேர்மையானவர்களையும், தகுதியானவர்களையும் அரசியலில் காசு வாங்காமல் வாக்களிக்கிறார்களோ, அப்போதுதான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் இவை எல்லாம் பல மடங்கு வளர்ச்சியடையும் என்பது உண்மை. தவிர ,எப்போது நல்ல கருத்துக்கள், உண்மைகள் அலட்சியப்படுத்தி, நேர்மையானவர்களை  புறக்கணிக்கிறார்களோ, அதனுடைய பலன் எந்த சமுதாயமும், அதை அனுபவிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *