நாட்டில் அரசியல் கட்சிகளில் சேவை செய்ய ஆள் இல்லை. ஆனால் ! மீடியாவில் ‌பேசுவதற்கும், கருத்து சொல்வதற்கும் அரசியல் கட்சிகளா ? – அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram

அரசியல் கட்சி என்பது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்கு சேவை செய்வதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக மக்களை ஏமாற்றியோ, பொது சொத்துக்களை பங்கு போட்டு, சாப்பிடுவது அல்ல. உழைத்து சாப்பிட வேண்டும் .இந்த எண்ணம் ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை பேருக்கு இருக்கிறது? இதை முதலில் ஒவ்வொரு கட்சித் தலைமையும், கணக்கெடுங்கள்.

அதன் பிறகு அவர்களுடைய தகுதி என்ன? அவருக்கு என்ன? கட்சியின் நிர்வாக பொறுப்பு கொடுக்கலாம்? அவர் செயல்படக்கூடிய தகுதி என்ன? இத்தனையும் ஆய்வு செய்து கட்சிக்கு பொறுப்பு கொடுங்கள். எத்தனை பேர் கட்சியில் இருப்பார்கள்? ஒருவரும் இருக்க மாட்டார்கள். அப்படி என்றால் கட்சி என்பது இவர்கள் சுயநலத்திற்கும், இவர்கள் செய்கின்ற பித்தலாட்ட பிராடு வேலைக்கும், கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதானே உண்மை .மேலும்,

 நாட்டில் அரசியல் கட்சிகள் தற்போது சமூக நலத்தை விட , சுயநலத்திற்காகவும், தங்களுடைய மோசடிகள், ரவுடித்தனங்கள், ஆட்சி நிர்வாகத்தில் ஊழல்கள், மூடி மறைப்பதற்காக அரசியல் கட்சியின் பின்புலம் தேவைப்படுகிறதா ? பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இருக்கின்ற நிர்வாகிகளும் ,கட்சியினரும், தங்கள் சுயநலத்திற்காகவும், இதை வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்து கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் இதற்கு தான் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுநலம் என்பது அரசியல் கட்சிகளில் துளி கூட இல்லை . பேசுவது வேதாந்தம், செயல்படுவது அதற்கு சம்பந்தமே இருக்காது. அது மட்டும் அல்ல, இன்று ரவுடி லிஸ்டில் உள்ளவர்கள், ஊழல் வழக்கு உள்ளவர்கள், தங்களுடைய சொந்த தொழிலையும், வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்ள வந்தவர்கள். அனைவருக்கும் அரசியல் கட்சிகள் தான் புகலிடமாக உள்ளது . கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் சமூக நலனுக்காகவும், மக்களுக்காகவும், வந்தவர்கள். அதில் அவர்கள் கௌரவத்தை மட்டும் தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போது கௌரவம் என்பது பணம் சம்பாதிப்பது தான். எப்படியும் அவர்கள் வேலையாக உள்ளது.

நேர்மை, உண்மை இதற்கு அர்த்தம் தெரியாமல் எப்படியும் பேசுவது! அரசியல் கொள்கை அல்லது அரசியல் கட்சி கொள்கை! இதில் மக்கள் இவர்களை நம்பி வாழ முடியுமா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, இவை எல்லாம் அதிமுக, திமுகவிற்கு சர்வசாதாரணமான பேச்சுக்கள்.மேலும், தற்போதைய தமிழ்நாட்டின் புதிய அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய் இதற்கெல்லாம் வித்தியாசமாக இருப்பாரா? 

தன்னுடைய கட்சியினருக்கு என்ன சொல்லப் போகிறார்? கட்சியை எப்படி அரசியலில் வழிநடத்த போகிறார்? எப்படி தமிழ்நாட்டில் உள்ள இந்த அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் ஒரு மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்? தமிழக மக்களுக்கும், இவருடைய அரசியல் கட்சியினருக்கும் என்ன சொல்லப் போகிறார்? இதற்கு மாற்றமாக இந்த அரசியல் கட்சியினர் இருப்பார்களா? மேலும், தமிழ்நாட்டில் இன்று அதிமுக, திமுகவிற்கு அடுத்த நிலையில் பிஜேபி வருமா? 

பிஜேபியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றுவதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கு தகுதியான, எளிமையான, பொதுமக்களும், தொண்டர்களும் சந்திக்கக்கூடிய, பேசக்கூடிய ஒரு தலைவரை மற்றும் மக்கள் பணியை செய்யக்கூடிய ஒரு தலைவரை கொண்டு வருவார்களா ? தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அதிமுக, திமுகவிற்கு ஒரு மாற்றான அரசியல் தேவை. அந்த அரசியல் யாரால் கொடுக்க முடியும்? இது அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? அரசியல் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஆயிரம், 500க்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் . இதனால்

தான் நாட்டில் அரசியல் என்பது தரம் தாழ்ந்த வேலையாகி விட்டது . தகுதியற்றவர்கள் எல்லாம் எம்எல்ஏ, எம்பி, மந்திரி பதவிகளுக்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு எதற்காக வந்தோம்? ஏன் வந்தோம்? என்று கூட அதற்கு பதிலோ ,அர்த்தமோ தெரியாதவர்கள் எல்லாம் பதவிக்கு வருகிறார்கள். இவர்கள் வேலையே அதிகாரிகளுடன் கூட்டு சேர்த்து, எப்படி எல்லாம் பங்கு போட்டு எடுக்கலாம்? இதுதான் இவர்களுடைய அரசியல் வியாபாரம். இந்த வியாபாரத்திற்கு இவர்களை நல்லவர்களாக மக்களிடம் முன்னிலைப்படுத்தி வியாபாரம் செய்வது தான், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் முக்கிய பத்திரிகை அரசியல் வியாபாரம்/ அதனால், மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் .மக்கள் ஏமாறும் வரை இப்படிப்பட்ட அரசியல் தொடரும்.மேலும்,

 மக்கள் ஏமாறும் வரை அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் எப்போது மக்கள் விழித்துக் கொள்வார்கள்? அப்போதுதான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி .தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *