ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை.
அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து, விலைக்கு வாங்கும் வாக்காளர்களை எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து வருகிறது? இது தேச நலனில் தேர்தல் ஆணையம் அக்கறையின்மையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், அவர்களுக்கு தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்களிடமிருந்து, வாக்களிக்கும் உரிமையை எடுத்து விட வேண்டும். எதுவும் இல்லாமல் அந்த மக்கள் காசு வாங்கி அல்லது பணம் வாங்கி ஓட்டு போடுவதால் அவர்களுக்கு என்ன பயன் அடைந்து விடுகிறார்கள்? அல்லது அவர்களுடைய வாழ்க்கை தரம் தான் உயர்ந்து விடுகிறதா? இவர்களால் சமூகத்தில் ரவுடிகள், தகுதியற்றவர்கள், ஊழல் பேர் வழிகள், போன்றோர் தான் அதிகம் மீண்டும், மீண்டும் பணம் கொடுத்து இப்படிப்பட்ட வாக்காளர்களை விலைக்கு வாங்குகிறார்கள்..
இப்படி அரசியலை பற்றி தெரியாத மக்களிடம் வாக்குரிமை கொடுத்து, அவர்களை வாக்காளர்களாக ஆக்கியது டாக்டர் அம்பேத்கரின் சட்டத்தின் ஓட்டை மட்டுமல்ல ,ஜனநாயகத்தின் ஆணிவேரை ஆட்டி பார்க்கும் வேலை. மேலும்,இது இந்த தேசத்தின் பாதுகாப்பு கூட அசைத்துப் பார்க்க முடியும். அந்த அளவிற்கு வலிமையான அதிகாரம், மக்களின் வாக்குரிமை .மேலும்,அதை சரியான முறையில், தகுதியானவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால், எத்தனையோ நாடுகள் ,இன்று பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கை போராட்டம் ஆகி உள்ளது.
அதற்கு உதாரணம் பாகிஸ்தான், இலங்கை மற்றும் பல நாடுகள் இருக்கின்றன .மேலும், இன்றைய அரசியல் கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்கள் அதிகாரத்திற்கு வந்தும், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, இதைப் பற்றி எல்லாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும்.மேலும்,
அரசியல் கட்சியினர் பொய்களை சொல்லி அல்லது ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்து கொண்டு, உத்தமர்களாக பேசி வலம் வருவது, வாடிக்கையாகிவிட்டது. அதை மக்களிடம் எது உண்மை? எது பொய்? என்று கூட சொல்லத் தெரியாத ஊடகங்கள், விளம்பரம் செய்து பணம் கோடிகளில் சம்பாதித்து வருகிறது.
இதுதான், இந்த பத்திரிகை வியாபாரத்தின் சர்குலேஷன். இதை மையப்படுத்தி தான், இந்த பத்திரிகைகளுக்கு மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தின் உரிமை. இந்த உரிமை சமூக நன்மைக்காக அல்லது சமூக நலன் கருதி வெளிவரும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமையாக இதனால் வரை இருந்து வருகிறது. இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவிர ,ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர் போன்ற உயர்ந்த பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ,இதற்கு முக்கிய பொறுப்பு ஏற்று, பத்திரிகைகளின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருப்பதற்கு காரணம் அரசியலில் ரவுடிகள் அதிகம் இருப்பதால் ,அதன் விளைவு இன்று மக்களே, உயிர்பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மருத்துவமனைக்கு எதிரிலே பட்டப்பகலில், ஒருவரை ஏழு பேர் சேர்ந்து வெட்டி இருக்கிறார்கள். இது ஏன்? என்றால் கஞ்சா விற்பது தவறு என்று, நல்ல விஷயத்திற்கு புகார் கொடுத்த ஒரே காரணம் தான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். அதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பாஜக நிர்வாகி கொலை, அது அரசியல் ரவுடிகளுக்குள் போட்டி வியாபாரத்தில் நடந்த கொலை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இங்கே அரசியல் செயல்பாடு, அரசியல் கட்சி செயல்பாடு, ஆட்சி, நிர்வாகம் எதை பற்றியும் ,சிந்திக்காமல் போதைகளில் தள்ளாடுபவர்கள், அரசியல் என்றால் ஒன்றும் தெரியாதவர்கள், இவர்களை வைத்து அரசியலை தீர்மானிக்க வேண்டும் என்றால்,
அவர்கள் எப்படி தகுதியானவர்களை இந்த அரசியல் களத்தில் தேர்வு செய்வார்கள்? ஒன்று, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு அரசியல் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுடைய வாக்களிக்கும் உரிமையை எடுத்து விட வேண்டும்.மேலும், கடமைக்கு தேர்தல் நடத்தி விட்டு செல்வது, இந்த நாட்டின் ஒற்றுமை, தேசத்தின் ஒற்றுமை, மக்களாட்சியின் தத்துவம், அரசியல் அதிகாரம், ஆட்சி நிர்வாகம், இவை எல்லாம் சுயநலமாக செயல்படுவது, இந்த மக்கள் அனைவரும் இப்படிப்பட்ட அரசியலால் இந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த ஏமாற்றத்திலிருந்து மக்கள் எப்பொழுது விழிப்புணர்வு பெறுவார்கள்……….? மேலும்,
அரசியல் கட்சிகளில் ரவுடிகளை ஊக்குவிக்கிறார்களா? அதேபோல் தேர்தல் ஆணையமும், குற்ற வழக்கு உள்ளவர்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும், தேர்தலில் நிற்க தடை விதிக்காமல் இருப்பது, தேர்தல்! என்பது ஒரு சம்பிரதாய படி நடத்தப்படுகிறதா? மேலும், உச்ச நீதிமன்றம், நாட்டின் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், கௌரவம் மிக்கவர்களாக, நேர்மையானவர்களாக, மக்களுக்காக தன் உழைப்பை பங்களிக்கப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதில் ஏன் சட்டத்தில் முக்கியத்துவம் அளித்து, தகுதியற்றவர்களுக்கு தடை விதிக்காமல் இருப்பது, சமூக நலனுக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வேதனை அளிக்கிறது.
இனி வரும் காலங்களிலாவது, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் இதில் முக்கிய கவனம் செலுத்தி, மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் முக்கிய கருத்து.மேலும்,சமூகப் பிரச்சனைகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை,நாட்டின் பொருளாதார பாதிப்பு,தொழில் வளர்ச்சியின்மை, போன்ற பல பிரச்சனைகள் நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் இவையெல்லாம் மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் என்பதை புரிந்து கொண்டால் சரி.