மே 10, 2024 • Makkal Adhikaram
நாட்டில் உழைத்து வாழ வேண்டும் என்பது கடினமான வேலை. அதனால் உழைக்காமல் கோடிகளை பார்க்கும் வேலை அரசியல் ஆகிவிட்டது. நேற்று வரை நான் பார்த்த அரசியல்வாதிகள் பைக்கில் போனவர்கள் எல்லாம், இன்று காரில் செல்கிறார்கள். அதை நான் பொறாமையாக பார்க்கவில்லை .இது எப்படி வந்தது? என்பதைதான் பார்க்கிறேன். தேவைக்கு கார் வைத்திருப்பவர்களை விட, இன்று பந்தாவுக்கு அரசியலில் கார் வைத்திருப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் .
அதனால் இன்று டிராபிக் ஜாம் அதிக அளவில் அது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் காரில் சென்றால் தான் மக்கள் நம்பளை மதிப்பார்கள். காரில் சென்றால்தான் அதிகாரிகள் நம்மை மதிப்பார்கள். கார் இல்லை என்றால் நம்பளை மதிக்க மாட்டார்கள். இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை, இன்றைய அரசியல் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களெல்லாம் எதற்கு அரசியலுக்கு வந்தார்கள் ?என்று கூட இவர்களுக்கு தெரியாது. ஏனென்றால்!
எந்த கட்சியிலாவது ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, அங்கே அடியால் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். அல்லது கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு ,மக்களை ஏமாற்றலாம். மக்களை பேசியே கவிழ்க்கலாம் . மக்களுக்கு தேவையான உதவியோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ என்னவென்று கூட கேட்கத் தேவையில்லை .மீடியாவில் பேசிவிட்டு நம்மை பெரிய அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளலாம். நல்லவர்களாக விளம்பரப்படுத்த கார்ப்பரேட் மீடியாக்கள் இருக்கும் வரை நமக்கு என்ன கவலை ?
அதனால்,அவர்கள் கேட்டாலும் அதற்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி அனுப்பி விடலாம். அதனால் அரசியலில் உழைப்பு தேவையில்லை . உழைப்பவர்கள் யாரும் முன்னுக்கு வர முடியாது .மேலும், நகராட்சிகளில் என்ன காண்ட்ராக்ட்? கிராமங்களில் என்ன காண்ட்ராக்ட் ?வேலை செய்யாமலே செய்ததாக கணக்கு எழுதி காட்டிவிட்டு எடுத்துக் கொள்வது எப்படி ?இப்படி குறுக்கு வழியில் தான் விரைவில் பணக்காரனாக முடியும். நேர்வழியில் சென்றால் அரசியலில் பணம் சம்பாதிக்க முடியாது.
அதனால் அரசியல் என்பது உழைக்காமல் கோடிகளை பார்ப்பது கௌரவமாகிவிட்டது . விவசாயம் என்றால் சேற்றில் இறங்கி வேலை செய்ய வேண்டும் .வெயிலில் வேலை செய்ய வேண்டும். இதையெல்லாம் விட நல்ல எளிதான வேலை அரசியல் .ஒயிட்டேன் ,ஒயிட்டேன் ஆடையை உடுத்திக் கொண்டு உடம்பை காட்டினால் போதாதா? நம்முடன் காட்ட 100 பேர் வர மாட்டார்களா?
அது மட்டுமல்ல, டாஸ்மாக் மது பாட்டல்களில் கமிஷன்,மற்றும் இல் லீகல் என்னென்ன இருக்கிறதோ ,அதில் எல்லாம் கமிஷன் வரும் . அப்படிப்பட்ட ஒரு நேர்மையான தொழில் இன்றைய அரசியல் .மக்களின் வரிப்பணத்தை எவ்வளவு திட்டங்களில் கொள்ளை அடிக்க முடியுமோ, அதுதான் அரசியல் திறமை . எத்தனை தலைமுறைக்கு வேண்டுமானாலும், உழைக்காமல் சோத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட கௌரவமான தொழில் அரசியல்.அரசியலில் சொத்து குவிப்பு வழக்கு போட்டாலும், அளவுக்கு அதிகமாக ஊழல் செய்தாலும், எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சி என்று கவுண்டமணி சொல்வது போல, இது எல்லாம் அரசியலில் சகஜம் அப்பா……!